Mahanadhi - மகாநதி - 06 - 07.10.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 06ஆம், 07ஆம் திகதி சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • குமரனின் உண்மையான நிலையினை நேராகக் கூட்டிச் சென்று காட்டிய விஜய்.
  • கங்காவின் ஒரு சொல்லானது எவ்வளவுக்கு ஒருவனின் மனத்தினைப் பாதிக்கின்றது என்று குமரனைப் பாருங்கள்.
  • சடங்குகள் ஆரம்பம், காரமாக இருந்த கங்கா. தனக்கு நடக்கும் ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கு யார் காரணம் என்று கூட சிந்திக்காத நிலையில் கங்காவின் மனம்.
  • மாலையினைத் தூக்கி எறிந்த கங்கா. கறுத்துப் போன அனைவரின் முகங்கள். போன மானம் திரும்புமா இனியும்.
  • குமரனின் அம்மா பிந்தி வந்தாலும் தன் மகனுக்கு ஏதோ நடந்திற்று என்று பெத்தவளின் அங்கலாய்ப்பு.
  • குமரனின் முயற்சியானது யாரால் வெளிச்சத்திற்கு வரப்போகின்றது? குமரனே அதனை விளங்கப்படுத்தியதுதான் சரி என்பது எல்லாரும் சேர்ந்து நிருபித்தனர்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

மகாநதி - Mahanadhi - 06 - 07.10.2025

காவேரியைக் கூட்டிச் சென்று குமரனின் நிலைமையினை காட்டிய விஜேய். கவலை கொண்டாள் காவேரி. காவேரியின் கேள்விகளுக்கு கங்காவின் சந்தோஷத்திற்காகத்தான் எல்லாம் என்று பதிலளித்த குமரன். ஆனால், ஏதோ குமரன் மாமாவிற்கும், அக்காவுக்கும் இடையிலான பிரச்சனைகள் உண்டு என்ற சாடை மாடையாகக் காவேரி கேட்டாலும், குமரன் கங்காவை ஒரு குறையும் சொல்லாமல், எனக்கு கங்காவில் விருப்பம் என்பதனால் தான் செய்கின்றேன் என்று மட்டும் பதிலாகச் சொல்லிக் கொண்டான் குமரன்.

குமரன் முன்னுக்கு நிற்காமல் கடையிலேயே கடைசி வரைக்கும் வேலை செய்வதற்கு கங்காதான் காரணம் என்று யூகிக்கும் குமரனின் அம்மா, சாந்தி.

மைதினியின் கதைகள் சாரதாவிற்கு குத்தலாக இருந்தன. இடக்கு முடக்கான வார்த்தைகள் சாரதாவைக் கோபப்படுத்தியது.

கங்கா பொறுமை இழந்தாள். மற்றவர்கள் முன்னாலே அவளின் கதைகள் பிழைத்தன. Make up பண்ணுவதிற்கு யார் செலவு செய்கிறார்கள் என்று கேட்கக் கூடவா கங்காவிற்கு விளக்கமில்லை? பொறுமையினை இழந்தாலும் கொஞ்சம் பொறுத்துத்தான் கதைக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் விஜய் ஓய்வெடுக்கும்படி குமரனைக் கேட்டுக் கொண்டும், குமரனோ தான் கங்காவின் வளைகாப்பினை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்றும், தனது மாமனார் தவறிய ஆரம்ப காலத்தில் கங்காவிற்கு ஆடம்பரமாகக் கல்யாணச் சடங்கு செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால், இந்தச் சடங்கு நல்லவிதமாக முடிவடையட்டும் நான் தூங்குவேன் என்று குமரன் பதிலாகச் சொல்வது நல்ல சகுனமாகப் படவில்லை.

சடங்குகள் ஆரம்பமாவதற்கு கொஞ்சம் முதலாக வந்த குமரன் மிகவும் சோர்மானமாக இருந்ததனை மற்றவர் அவதானித்தாலும், கங்கா அதனைப் பொருட்படுத்தவில்லை. குமரனும் அதையெல்லாம் seriousஆக எடுக்கவில்லை. வளைகாப்பு நிகழ்ச்சிகள் நலமே நடைபெற்றால் சந்தோஷம் என்பது மட்டும்தான் குமரனுக்குரிய விருப்பம்.

காவேரியோ குமரன் மாமாவை அந்த இரவு அவரது தையல் நிலையத்தில் வேறு உதவியாட்களுடன் இருந்ததினைக் கண்டதும் வியப்பினில் ஆழ்ந்தாள். தன் தகப்பனார் குமரனை எவ்வாறெல்லாம் பெருமையாகச் சொல்லுவார் என்று மிகவும் excitingஆகச் சொல்னதினைக் கேட்டு மலைத்துப் போன விஜய்.

அத்துடன் விஜய், குமரனுக்கு சிறு சிறு உதவிகளைச் செய்வதனைக் கண்ட காவேரி இதனைத் தனது தகப்பன் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷப்படுவார் என்பதனையும் விஜேயுக்கு விளங்கப்படுத்தினாள் காவேரி.

இப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் தகப்பனை நினைவு கூரும் காவேரியும், அவளது குடும்பத்தினரும் எவ்வளவிற்கு தகப்பனை miss பண்ணுகிறார்கள் என்று தெரிகின்றது.

இப்படியான ஒரு அன்பான, பாசம் நிறைந்த இந்தச் சிறு குடும்பத்தின் நிம்மதி, சந்தோஷம் அனைத்தையும் சூறையாடிய பசுபதி அனுபவிக்க இனி எவ்வளவோ இருக்கி்ன்றதனை இச் சம்பவங்கள் எதிர்வு கூறுகின்றன.

இதுதான் வாழ்க்கையில் நடக்கவுள்ள நிஜங்களைப் பிரதிபலிக்கின்றனவா? இவற்றினைப் படமாக எடுப்பதா? பாடமாக இரை மீட்பதா?

தகப்பனை இழந்து துடிக்கும், வாழ்கையில் தவிக்கும், குடும்பம் எவ்வளவு துயரங்களைத் தாங்கியிருக்கும். அதன் பிரதிபலிப்புத்தான் கங்கா குமரனில் காட்டிய கோபமானது. தகப்பனிடமிருந்து பெற்ற அன்பானது இடைநடுவில் பறிபோய் விட்டது. அந்த அன்பானது முழுத்தலுமாக கணவனிடமிருந்துதான் ஒரு மனைவியால் எதிர்பார்க்கப்படும். அதுவும் 100%த்திற்குக் கூடுதலாக மனைவி எதிர்பார்ப்பதில் ஒரு குறையும் இல்லை.

கங்காவின் கரைச்சுக் கொட்டலினை தாங்க்காத குமரனின் தாய், சாந்திக்குப் பொறுக்க முடியாமல் குமரனைக் கூட்டிக் கொண்டு போக வெளிக்கிடுகின்றா. ஆனால், குமரன் அசும்புவதாகத் தெரியவில்லை. தாயையும், சமாளிக்கும் அதே வேளையிலே, கங்காவையும் குளிர்மைப் படுத்த வேண்டும், அதுவும் அவளது கோபம் கொஞ்சம் தணிந்த பிறகு. பொறுத்திருந்தான் குமரன். தாயையும் சமாதானப் படுத்தினான், கங்காவையும் சந்தோஷப்படுத்தினான். வாழ்க்கையில் வெற்றியும் கண்டான். நினைத்ததைச் சாதித்தான். நிம்மதியினை அனைவருக்குமாகப் பெற்றுக் கொடுத்தான்.
கங்கா நினைத்தபடி, கண்ட கனவினை நனவாக்கினான் குமரன். இதற்கு முயற்சி, முடிப்பேன் என்ற நம்பிக்கை. விஜேயும், நெவீனும் கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் இருந்தாலும், முடிப்பேன் என்று சபதம் கொண்டான் குமரன். முடித்தும் காட்டினான். கங்கா விரும்பியபடி, பட்டுச் சாறியும் வாங்கிக் கொடுத்தான், ஒட்டியாணமும் வாங்கி அணிவித்து அழகு பார்த்து கங்காவைச் சந்தோஷப்படுத்தினான்.

கங்காவின் ஆதங்கம், வளைகாப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கணும், பட்டுப் புடவை உடுத்தனும், ஒட்டியாணம் போடனும் என்று தனது ஆசையினை தன் புருஷனிடம் சொன்னாள். வேண்டும் என்று கூடக் கேட்கவில்லை. ஆனால், இங்கு நிகழ்ச்சியில், கொஞ்சம் வளையல்கள் கூட வாங்கித் தரவில்லை, ஆளையே காணவில்லை. ஒழிச்சுப் போய் விட்டார் என்று ஆதங்கம். அதுதான், ஏதேதோ வார்த்தைகள் கங்காவின் வாயிலிருந்து வெளிப்பட்டன. இதைவிட நமது வாயிலிருந்து வில்லங்கமான வார்த்தைகள் வந்திருக்காதா என்ன?

கட்டுப்படுத்துவோம் – கண்ணியமாக வாழுவோம் – முயற்சிப்போம். நம்பிக்கை அவசியம் – பொறுமையும் நிதானமும் நிட்சயம் தேவை.

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00