Mahanadhi - மகாநதி - 05.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • அவரவர் அறைகளில் நிம்மதியாகத் தூங்கி எழுந்தனர். விஜயின் சாதாரணமான ஆனால் உயரிய குணமோ மதிக்கத்தக்கது.
  • காவேரியும், விஜேயும் தனிமையினை விரும்பினர். அதுவே அவர்களுக்கு பெரிய நிம்மதியும், மனநிறைவுமாக அன்றிரவு அமைந்தது. நிம்மதியின்றி, தூக்கமின்றி தவித்த மனங்கள் நிலத்தினில் தூங்கி இரவினைக் கழித்தனர்.
  • மாடியில் வாழ்ந்த விஜய் தூக்கத்தினை இழந்து தவித்த நாட்களை, இன்று கோடியில் தூங்கிய போது பூமாதேவி கொடுத்த இந்த அணைப்பிலே மறந்தனர்.
  • கொள்ளுப் பிள்ளை உருவானதினையிட்டு சந்தோஷப்படும் தாத்தாவும், பாட்டியும், காவேரியை தின்று தண்ணி குடித்த கல்யாணிப் பாட்டியை மறந்து வாழப் போக வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதென்றதாகத் தோன்றுகின்றதா?
  • சாரதா குடும்பமோ ஒன்றுமே நடக்காதது போன்று எதுவுமே கதைக்காமல் தங்கள் பிள்ளை வாழ்ந்தால் காணும் என்று வழியனுப்புகின்றனர்.
  • கொள்ளுப் பிள்ளை பிறந்த பின்பு, காவேரியின் நிலைமை, இவர்களுடன் போயிருக்கையிலே கேள்விக் குறியாகவல்லவா இருக்கும்?

மகாநதி - Mahanadhi - 05.09.2025

  • கல்யாணிப்பாட்டியையும், அவர்கள் மகள் றாதாவையும் என்னத்தையாவது செய்யுங்கள் என்று அவர்களின் முடிவினில் தாத்தா விட்டு விட்டுப் போனதினைக் கொண்டு வந்த பழங்களை வைத்து நியாயப்படுத்த முடியாது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

கர்ப்பிணியான காவேரியை கோவிலில் வைத்து கல்யாணிப்பாட்டி கதைத்த விதமும், சொன்ன வார்த்தைகளும் இன்னமும் காவேரியின் மனத்திலே குற்றிக் குற்றி இரத்தத்தினைச் சொட்டு சொட்டாக மனதினில் தெளித்துக் கொண்டிருக்கின்றன.

சொத்துக்காக, விஜயை வளைச்சுப் போட்ட காவேரி, இப்போ வயிற்றில் உள்ள பிள்ளையால், நல்லவளாகி விட்டாளா?

நீ விஜேயுடன் எங்கள் வீட்டிற்கு வந்தால் நாங்கள் செத்து விடுவோம். எங்கள் சாவிற்கு நீதான் காரணம் என்று எழுதி வைத்து விட்டுத்தான் சாவோம் என்று வீர வசனம் பேசிய பாட்டி, வெட்கமில்லாமல் வந்து நிற்பாங்க என்று சொன்னேனே. விஜேய் வீட்டை விட்டு வந்த ஒரு நாள் ஆகவில்லை வாசலிலே வந்து நின்றாங்கள் பாருங்கள்.

கொள்ளுப் பிள்ளை என்றதும் ஒரே இரவினிலே, பாட்டி தூய்மை அடைந்தாவாம், பார்த்துப் பார்த்து பழங்கள் வாங்கினாவாம், அதுவும், பாட்டிதான் வாங்கினாவாம். இதை காவேரியின் குடும்பம் நம்பி அவர்களோடே காவேரியை விஜேய் வீட்டிற்கு அனுப்பி வைக்கினமாம்.

இந்த வயசினிலே இவர்களுக்கு எவ்வளவு சுயநலம். இதுதான், மனிதனிடமுள்ள மிகவும் முக்கியமான குணங்களில் ஒன்று. இதற்கு தாத்தாவையும், பாட்டியையும் முன் உதாரணமாக வைத்துக் கொள்ளலாம்.

அதேபோல, இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளால் கேவலாமாகப் பேசி விட்டு போனவர்களை, காவேரியின் குடும்பம், அவர்கள் வயதினில் பெரியவர்கள், அதுமட்டுமல்லாமல், விஜேயின் தாத்தா, பாட்டி என்று மனதினில் கொண்டு ஒன்றுமே நடக்காதது போன்று வீட்டினுள்ளே வரவேற்றனர்.
பெண்ணின் குடும்பம் என்றதினால், எல்லாவற்றினையும் பொறுத்துப் போக வேண்டும் என்றோ அல்லது கல்யாணம் பண்ணினால் இவர்கள் அனைவரையும் அறுதியாக மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுத்தாகி விட்டது என்ற ஒப்பந்தம் இருக்கிறது போன்ற நினைப்பு அவர்களுக்கு.

வீட்டின் மாப்பிள்ளை அதுவும் பிறந்ததிலிருந்தே பல கோடிகளுக்கு அதிபதியானவன், தனது தாத்தா, பாட்டி முன்னாலும், அத்தை வீட்டாரின் முன்னாலும் தரையில் உட்காந்தது மிகவும் ஆச்சரியமாக எல்லோருக்கும் இருந்தது. தரையினில் உட்கார்ந்தது விஜேய் எதேர்ச்சியாகச் செய்த மாதிரித் தெரியவில்லை.

ஏன் காவேரியுடன் சேர முடியவில்லையே என்ற கவலையில், தனது வீட்டிற்கு வந்த விஜேய், தாத்தாவுடன் வீட்டு வாசல் படியில் இருந்துதானே தண்ணியடித்தான். இப்போ காவேரி வீட்டில் இருந்தால் மட்டும் என்ன கேவலாமா? விஜேய் தனது மனைவி வீட்டில் தான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றான் என்பதனை தாத்தா, பாட்டிக்கும் உணர்த்துவது போன்றுதான் இந்தச் செய்கை இருந்தது.

சாரதா வீட்டிற்கு வந்த கல்யாணி பாட்டி காவேரியுடன் கதைத்த விதத்திற்கும், காவேரி, விஜேயின் வீட்டில் இருக்கையில் காவேரியுடன் பாட்டி கதைத்தற்கும் மிகவும் வித்தியாசம் இருக்கின்றது. அப்படி இருந்தும் சாரதா ஒன்றும் பிழையாக நினைக்கவில்லை. மாறாக, காவேரியுடையவும், விஜேயுடையவும் வாழ்க்கையினைத்தான் முக்கியமாக நினைத்தாவே ஒழிய, வீம்பு ஒன்றும் அவ பிடிக்கவில்லை.
காவேரியின் வீட்டில் அனைவரும் சந்தோஷமாகக் காவேரியை தாத்தா, பாட்டியுடன் போகும் படி சொல்கையிலே, காவேரியும் தாயாரானாள் அங்கு விஜேயுடன் போவதற்கு. ஆனால், விஜய் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாத்தாவையும், பாட்டியையும் தனிமையில் கூட்டிச் சென்ற விஜய், அவர்களின் மனம் நோகக் கூடாதென்று எவ்வளவு பக்குவமாக கொஞ்ச நாட்களுக்கு இங்கு இருக்கிறேன் என்று சொன்னது மிகவும் வரவேற்கத்தக்கது.

அத்துடன், சாரதா, தன்னை எவ்வளவோ மாற்றி தனது மகள், காவேரியின் வாழ்க்கையினை மட்டும் யோசிக்கின்றா.

ஆனால், தாத்தா காவேரியைத் தன் வீட்டிற்குக் கூப்பிடுகின்றாரே, இப்போது பசுபதியின் பிரச்சனை முடிந்து விட்டதா? கொள்ளுப் பிள்ளையால் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விட்டதா?
பசுபதி கடைசியில் என்ன சொன்னான், காவேரியை விட்டுவிடும்படி விஜேயிடம் சொல்லுங்கள், அப்போ நான் ஒதுங்குகின்றேன் என்றுதானே. இப்போ விஜேய் காவேரியை விட்டு விட்டானா, கொள்ளுப் பிள்ளை இருக்கையிலே.

அதுமட்டுமல்லாமல், காவேரியை பாட்டியும், தாத்தாவும் தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போன பின்பு, பாட்டி தனது ஆட்டத்தினை ஆடமாட்டா என்று என்ன நிட்சயம்?

இப்போது பாட்டிக்கு, றாதா, அன்பு, றாகினி, அஜேய் எல்லோரும் இருக்கின்றார்களே, காவேரிக்கு குடைச்சல் கொடுப்பதற்கு.

காவேரி மீண்டும் விஜயுடன் அவன் வீட்டிற்கு தாத்தா, பாட்டியுடன் போவது சரிவருமா? உங்கள் கருத்துத்தினை பதிவிடுங்கள்.

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00