Mahanadhi - மகாநதி - 02.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • ஒரு தாயாகவும், மூன்று பெண் பிள்ளைகளுடன் புருஷனை இழந்த நிலையிலும், சாதாரண குடும்பமாக உள்ள நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதா எல்லாவற்றினையும் காவேரிக்காகத் தூக்கி எறிந்து விட்டு வந்த விஜேயை, வாங்க மருமகனே என்று அன்புடன் உள்ளே அழைத்த அத்தை சாரதா.
  • நான் இனி விஜேயைக் கஷ்டப்படுத்த முடியாது. அம்மா, உன்னிடம் தந்த சத்தியத்தினை வாபஸ் வாங்கிறன் என்று வீட்டு வாசலைத் தாண்டிய காவேரி, விஜயின் கையைப் பிடித்துக் கொண்டு விஜேயுடன் போவதற்கு ஆயத்தமானாள்.
  • காவேரிக்காக எல்லாவற்றினையும் தூக்கி எறிந்தவன் என் மருமகன் என்று சாரதாவிற்கு மனதினுள்ளே பெருமையாக இருந்தது மாத்திரமல்லாமல், சாரதா வாயாலேயே விஜேயிடம் சொன்னது விஜேயுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததனை நாம் கண்கூடாகப் பார்த்தோமே!
  • காவேரி என் பிள்ளையினைச் சுமக்கின்றாள் என்றதும், தாத்தா என்ன செய்வதென்று தெரியாமல் துள்ளினார். கல்லாணி பாட்டிக்கும் சந்தோஷம் இருந்ததுதான், ஆனால், றாதா சித்திக்கும், அன்புவுக்கும் shock ஆக இருந்தது. விஜேய் ஒரு பாறாங் கல்லினை அல்லவா தங்கள் தலையினில் போட்டு விட்டானே என்பதுதான். அத்துடன், தன் மகனின் வாழ்வு என்னாவது என்ற ஏக்கத்தில் றாதா.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 02.09.2025

இந்த சீரியல் சொல்லும் உண்மை என்னவென்றால், காசு, சொத்து எப்பவும் உழைத்து விடலாம், ஆனால், பெற்ற அறிவு இருக்கே அதனை எவரும் காசு கொடுத்து வாங்க முடியாது. அதனைவிட, அந்த அறிவினால் பெற்ற வாழ்க்கையின் அனுபவங்களை நினைச்சுப் பார்க்கவே முடியாது. இது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமென்றில்லை. ஆனால், இப்போது சொல்லகையிலே அது நெஞ்சிலே ஆழப் பதியும் என்பதுதான் உண்மை.

இந்த நிலையில்தான் இப்போது விஜேய் உள்ளான்.

இவ்வாறன நிலை உங்களுக்கு வாழ்க்கையில் நடந்ததா? ஆம் என்றால், நானும் உங்கள் கட்சிதான். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி, என்னைச் சேர்த்தமைக்கு.

சாரதா, வாழ்க்கையில், புருஷனை இழந்த நிலையில், இந்த சமுதாயத்தி்ல் அதாவது, குறிப்பாக எமது சமுதாயத்தில், எவ்வளவோ குத்தல்களையும், குடைச்சல்களையும் கண்டு, தாங்கி வாழ்ந்து கொண்டிருப்பா. அப்படியான கசப்பு நிறைந்த வாழ்க்கையினை ஒருவாறக கடந்து கொண்டிருக்கையிலேதான் காவேரியின் contract வாழ்க்கையின் அத்தியாயம் ஆரம்பித்தது. அதுவும், மிகவும் பணக்கார, பெயரும், புகழுடனும் உள்ள குடும்பத்திலே இவ்வான வாழ்க்கையினைத் தொடங்குகின்றாள் காவேரி. அதுவும் ஒரு வருட வாழ்க்கை.

இது என்ன உண்மையான வாழ்க்கையா? இல்லையே! இது ஒருவருட கால வாழ்க்கை மட்டும்தான். இதில் காவேரி நடிக்கின்றாள் என்று எல்லாரும் கரைச்சுக் கொட்டுகையில், நாங்கள் மட்டும் என்ன நிரந்தரமான வாழ்க்கையினையா வாழ கொண்டிருக்கின்றோம் இந்த உலகத்திலே. இல்லையே! நாங்களும் எமது வாழ்க்கையினை கடவுளுடன் contract போட்டுத்தானே வாழ வந்துள்ளோம். ஆனால், காவேரி – விஜயின் contract ஒருவருடம் மட்டும்தான். இங்கு இருவருக்கும் தெரியும் ஒரு வருடத்தில் இந்த இந்த நாடகம் காலவதியாகி விடும் என்று. ஆனால் என்ன, இந்த உலக நாடகம் நமக்குத் தெரியாதே, எப்போடு காலவதியாகும் என்று. ஆனால், சமுதாயம் காவேரியை மட்டும் நடிக்க ஒத்துக் கொண்டாள் என்று திட்டித்திட்டி துலைக்கின்றார்கள். ஆனால், நாங்கள் மட்டும் என்ன செய்கின்றோம் என்று எமக்கே தெரியாமல் அலம்புகின்றேம்.

காவேரியால், விஜய் பட்ட கஷ்டங்கள் நினைச்சுப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றதே! இதனால்தான், காவேரி வாசல் படியினைத் தாண்டினாள். காவேரிக்காக விஜேய் தாண்டுகையில், காவேரி விஜேயுக்காக படி தாண்டுவதில் என்ன தப்பு இருக்கெங்கிறன். இது அவர்கள் வாழ்க்கை – இறுக்கமான முடிவெடுத்துத்தானே ஆக வேண்டும். வெளியே காவேரி போனதுமல்லாமல், விஜேயின் கையினை இறுகப் பற்றிக் கொண்டாள். இதனை காவேரி வீட்டார் அனைவரும் உற்றுப் பார்த்தார்கள்.

ஆனால், இங்கு மாப்பிள்ளை வெறுங் கையுடன் வருகையிலே, அதனை சாரதா ஏற்றுக் கொள்வது என்றால் அதன் பெருந்தன்மையினை என்னென்று சொல்வது? இது சாதரணமாக நமது சமுதாயத்தில் நடக்காததொன்று. இத்தனைக்கும் சாரதா அவ்வளவு ஆழமாக யோசித்திருக்க மாட்டா என்று நினைக்கின்ன்றேன்.

ஆனால், விஜேயின் பக்கத்தினைப் பார்த்தால், சொத்துக்காக அலையும் அன்பு – றாதா குடும்பம் ஒரு பக்கம், பிரச்சனைகள் வருவதனால் காவேரியினை வெறுத்தொதுக்கும் கல்யாணி பாட்டி, எதையுமே முடிவெடுக்க முடியாமல் இருக்கும் தாத்தா மறுபக்கம்.

இப்போது, கொள்ளுப் பிள்ளை என்றதும் தாத்தாவினதும், பாட்டியினதும் தசைகள் அவர்களை அறியாமலே ஆடத் தொடங்கியது. இதுதான் உறவென்பது. ஆனால், இந்த உறவின் துடிப்பு றாதாவுக்கு வரவில்லையே! அன்புக்கு, றாதாவை மணந்த வந்ததினால் உறவானவனுக்கு அந்தத் துடிப்பு வராது. ஆனால், அங்கு கூட்டிக் கொண்டு போனனான், இங்கு போனனான் என்று சொல்வதெல்லாம் நடிப்புகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

காவேரி, விஜேயின் பிள்ளை கல்யாணிப் பாட்டியிடம் இருந்து உண்மையான அன்பினைப் பெறுமா? அதுமட்டுமல்லாமல், காவேரியையும் சேர்த்து வைக்குமா?

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00