posted 27th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரியின் பிடிவாதமும், வீட்டிலே அவளுக்கு விஜேயைக் கல்யாணம் பண்ணு என்று கட்டாயப் படுத்துவதினாலும் இந்தக் கல்யாண ஒழுங்கினை காவேரி செய்ததன் விளைவு
- காவேரி எடுத்த முடிவினால், அனைவரும் தாக்கப்படுகின்றார்கள். அம்முவும் பாடசாலைக்குப் போகாமல் நிறுத்தப் படுகின்றாள்
- காவேரியை உண்மையாக விரும்பி பெற்றாருடன் வந்தவன் நிலைமையானது விளக்கமாக வரும்
- அம்முவை வேறு பாடசாலையிலே சேர்ப்பதிலே விஜயின் நிலைப்பாட்டினை மாற்ற முடியாமல் கைவிரித்த பாடசாலை அதிபர்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 25.05.2026
காவேரியை மணமகள் பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து எல்லாவற்றினையும் விளைவரையாகப் பேசினாலும், காவேரியின் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாருடன் முகம் கொடுத்தும் பேசவில்லை. இதனைப் பார்த்ததும், மாப்பிள்ளையின் அம்மாவிற்கு இந்தக் கல்யாணத்திலே அவ்வளவிற்கு சந்தோஷம் இல்லாமல், சந்தேகத்துடன் புருஷனையும், மகனையும் கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டா.
இதனைப்பற்றி மாப்பிள்ளையின் அம்மா இங்கு காவேரியின் வீட்டடியில் வைத்துக் கதைப்பதற்கு விரும்பாததினால், அவர்களின் வீட்டிற்குப் போய் இதனைப் பற்றி ஆலோசித்தார்கள்.
சாரதாவின் கையினை மீறிப் போய்விட்டது காவேரியின் நிலைப்பாடு. என்ன செய்வதென்று ஒரு முடிவும் எடுக்க முடியாமல் இருக்கையிலே, அடுத்த பிரச்சினையானது, அதாவது, அம்முவின் பிரச்சினையானது எழுந்திருக்கையிலே அதுவோ சாரதாவிற்கு ஒரு சவாலாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
விஜேயும், தான் அம்முவை வேறு பாடசாலைக்கு மாற்றப் போவதாக இருப்பதாகவும், அம்முவும் தொடர்ந்து பாடசாலைக்கு வராமல் உள்ளதினால், காவேரி இந்தச் செய்தியினை கல்லூரி அதிபருக்கு அறிவித்தா. இதனைக் கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான அதிபரும், காவேரியின் வேண்டுகோளுக்கு இணங்க விஜேயுடன் கதைத்தும் பார்த்தா. ஆனால், விஜேயோ அதற்கு இணங்கவில்லே.
காவேரிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகுந்த கவலைக்கு உள்ளானாள் காவேரி. இந்த விஜேயின் முடிவினால் அனைவரும் மனதளவில் தாக்குப் படுகின்றார்கள். காவேரி உட்பட. ஒருவருக்கும் நிம்மதியில்லை. இருப்புக் கொள்ளவில்லை.
இதுமட்டுமல்லாமல், உண்மையாகக் காவேரிக்கு இப்போது தான் பார்த்திருக்கும் மாப்பிள்ளையில் விருப்பமா? அல்லது வீம்பிற்காகவும், விஜேயுக்கு கோபம் வருகின்றதா என்று பார்ப்பதற்காகவும் எடுத்த காவேரியின் முடிவா இது? ஒருவருக்கும் காவேரியின் இந்த முடிவினைப் புரிய முடியவில்லை. அத்துடன் காவேரியைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
எப்படியோ ஏதோ ஒன்றினைச் சொல்லி அம்முவை தங்களது வீட்டிற்குக் கூட்டி வந்தா சாரதா. சாரதா அத்தையின் வீட்டிற்கு வந்த அம்மு, யாழினியுடன் கட்டி அணைத்து அவ்வளவு சந்தோஷமாக இருவரும் விளையாடத் தொடங்கினார்கள். அந்தச் சந்தோஷத்தினை சாரதாவும், வீட்டிலுள்ள அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால், விஜேய் ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கின்றார் என்பது விளங்கியும், விளங்காமலும் சாரதா இருக்கையிலே அதனை விளக்கமாக விஜேயின் பக்கமாக இருந்த நிலைப்பாட்டினை நெவீன் கூறியது மிகவும் நியாயமானதுவே என்பது சாரதாவின் வீட்டாருக்கு விளங்கியது.
குழந்தை காவேரியின் மனதிலோ காவேரிதான் உனது அம்மாவாக வருவா என்ற ஒரு விதையினை ஏற்கனவே விஜேய் விதைத்து விட்டான். அந்த விதையின் விருட்சத்தினை இனி யாராலும் வெட்டி எறிய முடியாது. அதன் பிரதிபலிப்புத்தான், அம்மு, சாரதாவைத் தனது பாட்டி என்றும், கங்கா, ஜமூனா, நர்மதா, நெவீன் அனைவரையும் தனது உறவுகளாக மனதினுள்ளே ஏற்றுக் கொண்டதும் கூட. இனி இவர்கள் எல்லாம் வேறு யாரோ என்றால் அந்த பிஞ்சு உள்ளத்தினை உடனுக்குடன் மாற்றி விட முடியுமா?
இதெல்லாம் ஒன்று சேர்த்து சாரதா நெவீனுடன் fieldலே இறங்கினா. நடப்பது நடக்கட்டும். அது இரண்டாம் பட்சம் என்று எதையுமே சிந்தையில் ஏற்றாமல், நேராகவே காவேரி பார்த்த பையன் வீட்டிற்குப் போனார்கள். காவேரியைப் பற்றி ஏதேதோ எல்லாம் அப் பையனின் வீட்டில் அவனது பெற்றார்களிடம் சொன்னதினால் அப்பையன் வீட்டார் மிகவும் காவேரியைப் பற்றி அதிருப்தி அடைந்தார்கள்.
இவ்வளவும் காவேரியைப்பற்றி கேட்ட பின்பு, அதுவும் அவளது அம்மாவே தனது மகளினைப் பற்றி சொல்கின்றா என்றால் அவர்களால் நம்புவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாதுதானே! நம்பினார்கள். இனி என்னதான் செய்யப் போகின்றார்கள் என்றால், இந்தக் கல்யாணத்தினை வேண்டாம் என்று விட வேண்டியதுதான்.
காவேரியின் பிடிவாதம் விஜேயைக் கல்யாணம் முடிக்க மாட்டேன் என்பதுதான். ஆனால், சாரதாவின் பிடிவாதமோ விஜேயைத்தான் காவேரி கல்யாணம் பண்ணி முன்னைய அவள் விரம்பி வாழ நினைத்த வாழ்க்கையினை, அவளிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையினை, கல்யாணி, றாதா, இறுதியாக தாத்தா அனைவரும் கொடுக்காத, ஒரு உன்னதமானதும், மிக்க மகிழ்ச்சியான வாழ்க்கையினை தனது மகள் காவேரி தனது கண்முன்னாலேயே வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடேதான், சாரதா இந்தக் கல்யாணத்தினை நிறுத்தி விட்டா.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!