posted 24th May 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 22.05.2026
காவேரிக்கு விஜேய் கத்துவதற்கான காரணம் என்னவென்று விளங்கினாலும், அவளோ ஒரு முடிவோடேதான் வந்துள்ளாள் போலும். காரணம், அவளால் அம்முவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதாவது, காவேரியின் மனதில் ஒரு அமைதி இல்லை. அவளால் அவளையே கட்டுப் படுத்த முடியவேயில்லை. அத்துடன் விஜேய் கூறிய படி அம்முவை வேறு பாடசாலைக்கு மாற்றி விட்டால் அம்முவை இனிக் காணமுடியாதே என்பதெல்லாம் காவேரியின் மனதினை வாட்டிக் கொண்டிருந்தது.
விஜேய் திட்டுவார், என்றாலும் அதெற்கெல்லாம் தயாராகத்தான் வந்தாள் காவேரி, அம்முவைப் பார்ப்பதற்கு. விஜேயுக்கு காவேரியுடன் தான் இப்படி கோபமாகக் கதைக்கின்றேன் என்று கவலைப்பட்டாலும், தன்னையும் கட்டுப்படுத்திக் கொண்டுதான் விஜேய் கதைத்தான். காரணம், அம்மு படும் கஷ்டத்தினை விஜேயால் பார்க்க முடியவில்லை.
அப்பா என்ன படங்களைப் பார்த்தார், ஏன் அவற்றினைப் பார்த்து கண்ணீர் சொரிய அழுதார், இப்படி அப்பாவை ஒருநாளும் தான் காணவில்லையே என்று நினைத்தவளாய் அம்மு அவை யாருடையவை என்று விஜேயை வினவினாள்.
விஜேயும் நேராகவே அம்முவிடம் பதிலினைச் சொன்னான், அவை உனது அம்மாவுடையதுதான் என்று. அம்முவோ அடம்பிடித்தாள் அந்த போட்டோகளை தனக்கும் காட்டும்படியாக. விஜேயுக்கும் அசைதான் அந்த போட்டோக்களை அம்முவிற்குக் காட்டுவதற்கு. ஆனால், அதுதான் முடியாதே! காரணம் காவேரிதான் யாரையோ கல்யாணம் பண்ணப் போகின்றாளே! அதனால் என்னென்று அம்முவிடம் அந்தப் போட்டோக்களைக் காட்டி உனது காவேரி மிஸ்தான் உனது அம்மா என்று என்னென்று அம்முவிடம் விஜேயால் கூறமுடியும்?
அப்படிக் காட்டினால், அம்மு நொறுங்கிப் போக மாட்டாளா? அது மட்டுமல்லாமல், இது காவேரிக்குத் தெரிந்தால் காவேரியின் உடல், உள நிலையானது என்னவாகும் என்பது மிகவும் பயங்கரமாக அல்லவா இருக்கும். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் என்னதான் விஜேயால் செய்ய முடியும்?
எனவேதான், ஒன்றுமே விஜேயால் செய்ய முடியாத நிலையினிலும், அம்முவின் பிடிவாதத்தினாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலையினில் அம்முவின் மேலே கோபப்பட்டான். அதுமட்டுமா, விஜேய் இல்லாத சமயம் பார்த்து அம்மு தனது அம்மாவின் போட்டோக்களைப் பார்ப்பதற்காக முயற்சிக்கையில் விஜேய் அதனைக் கண்டதும்தான், விஜேய் கோபப்பட்டதற்குக் காரணமாக இருக்கின்றது.
ஒருநாளும் விஜய் அம்முவுடன் இப்படிக் கடுமையாக நடக்காததினால், அம்முவோ அதிர்ச்சி அடைந்தாள். அம்முவிற்கோ காவேரியின் பிடிவாதக் குணம் இருக்காதா? அதனை விஜய் நினைக்க மறந்து விட்டான் போலும்.
காவேரி கேட்ட காரணத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதனைத் தெளிவாகக் காவேரியிடம் சொல்லி விட்டான். அதற்கு காவேரி என்னால்தானே நீங்கள் இப்படியான முடிவினை எடுக்கின்றீர்கள் என்றும், அதற்காக அம்முவின் வாழ்க்கையினை மாற்றாதீங்கள் என்று கேட்டுக் கொண்டும், விஜய் அதற்கு ஒத்துவரவில்லை.
அம்முவை தாத்தா, றாதா சித்தியால் சமாளிக்க முடியவில்லை. விஜேயுடனும் அம்மு சமரசமாகுவதாகவும் தெரியவில்லை. அவ்வளவுக்கு அம்முவிற்கு காவேரியின் குணம் உள்ளடங்கியது போல இருந்தது.
இப்படி இருக்கையிலே, சாரதாவிற்கு அம்முவிடம் இருந்து ஒரு கோள் வந்தது. தன்னை அப்பா திட்டி விட்டார் என்று அழுதுகொண்டு கூறியதனைக் கேட்டதும், பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்? சாரதா பாட்டியின் திடீரென எடுத்த முடிவானது விஜேயால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாத்தாவும், றாதா சித்தியும், சாரதாவின் வேண்டுகோளுக்கு ஆதரவு கிடைத்தது.
இதனால், விஜேய் அம்முவை காவேரியின் வீட்டிற்கு அனுப்புவதற்கு அதுவும் ஒரே ஒரு நாளுக்குச் சம்மதித்தான்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!