
posted 18th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சாரதா குடும்பம் அவர்களது மாகநதி வீட்டினை விட்டு வாடகை வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
- விஜேயிடம், தானேன் தவிர்த்துக் கொள்ளுகிறா என்று காவேரி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான விஜே.
- கவலையுடன், தாத்தாவுடன் கொம்பனி கொடுத்து மதுவினை அருந்த ஆரம்பித்த விஜய். இது ஆரம்பமா அல்லது இதுதான் இவன் வாழ்க்கையாகுமா?
- பாட்டியின் கதையில் ஏதோ உள்குத்து இருப்பதனை கொஞ்சமாக விளங்கிக் கொண்ட விஜய். இனி என்ன நடக்கலாம் என்பதனை தாத்தாவிடம் சொன்னதும் விஜய்தான்.
- நாலு பெண் பிள்ளைகளுடன் இருக்கும் சாரதா, தன் நான்கு பிள்ளைகளும் எவ்வாறு வாழ வேண்டும் என்று தகப்பன் ஆசைப்பட்டார் என்பதனை விளங்கப்படுத்தி அந்த உச்சியினைப் பிடியுங்கள். அதனை நான் பார்க்க வேண்டும் – பேரப் பிள்ளைகள் வீ்ட்டில் விளையாட வேண்டும் என்பதனைத் தெளிவாக விளக்கினா.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 18.08.2025
வீட்டினுள் வந்தமர்ந்த சாரதா குடும்பம் என்ன செய்வதென்று தெரியாத நிலையில், இதுதான் எங்களுக்கு உங்கள் அப்பா போன பின்பு பசுபதியின் ஆக்கினையினைத் தாங்க முடியாமல்தானே ஓடிக் கொண்டிருக்கின்றோம்.
இனி, நீங்கள் என்னதான் குளப்பம் வந்தாலும், உங்கள் குறிக்கோளானது உங்கள் அப்பாவின் விருப்பம்தான். அதிலிருந்து பின் வாங்கவே வேண்டாம். இதனைச் சத்தியமாகக் கேட்டுக் கொண்டா, சாரதா.
காவேரி இப்போது கர்ப்பமாக இருக்கின்றா என்று சாரதாவுக்குத் தெரியாது. இது எப்போது தெரியவரப் போகின்றது என்று கூடத் தெரியவில்லை.
சாரதா சொன்ன முடிவினிலே ஆடிப்போனாள் காவேரி. காவேரியால் இனி விஜய் வீட்டில் போய் வாழ முடியாது என்று விஜயின் சித்தி வந்து சொன்ன சொற்கள் அவ்வளவுக்கு சாரதாவுக்கு வேதனையைக் கொடுத்தபடியால்தானே இவ்வாறு இப்போ காவேரிக்கு இவ்வாறு சாரதா சொல்ல வேண்டியதாய் போயிற்று. காவேரியும் அந்த முடிவில்தானே இருக்கின்றா. இனி தான் விஜயுடன் வாழ மாட்டேன் என்ற உறுதியுடன்தானே இருக்கின்றாள் காவேரி. இந்த முடிவிற்கு விஜயின் பாட்டி சொன்ன விதம்தான் காரணமாகவும் இருக்கின்றது.
நல்லாகப் படிக்கக்கூடயவள்தான் ஜமூனா. ஆகையால்தான் தகப்பன் அவளை ஒரு கலெக்டராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதையும் சத்தியமாக வாங்கிக் கொண்டா சாரதா.
நர்மதாவை விட்டு விடுவாவா சாரதா. அவளையும் நீ விரும்பியதற்குப் படித்து பெரியவளாக வந்திரு என்றாள் சாரதா.
தகப்பனின் ஆசை நான்கு பிள்ளைகளும் எங்கள் அந்த பெரிய காணியிலே வீடுகளைக் கட்டி எல்லாரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தான் எங்களுக்குக் கொடுத்தி வைக்கவில்லையே! அந்த நிலத்தைத்தான் பசுபதி அபகரித்து விட்டானே. அதைப்பற்றி இனி கவலைப் பட வேண்டாம். நீங்கள் நாலு பேரும் சேர்ந்து ஒரு பெரிய நிலத்தினை வாங்கி அப்பாவின் ஆசையினை நிறைவேற்றுங்கள் என்றும் கேட்டுக் கொண்டாள்.
இது ஒரு தாய், தன் புருஷன் சேர்த்து வைத்த சொத்துகளை இழந்த நிலையில் தன் பிள்ளைகள் நல்லாக இருக்கட்டும் என்று சொன்ன வார்த்தைகள். இதுதான் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம்.
ஆனால், இப்படிப் பாருங்களேன். ஒரு தாய் சொல்லுகின்றது, அப்போ அவவின் குடும்பமோ இனி இல்லை என்ற ஏழ்மையில் வாழ்ந்த குடும்பம். தன் பிள்ளைகளுக்கு உறவுகளை வைத்து, அவர்களின் மூலம் முன்னுக்கு வாருங்கள். எல்லா சகோதரங்களும் ஒருவருக்கொருவர் உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் உங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் உதவி செய்யக் கூடாது, அது எவராக இருந்தாலும். ஏன் எங்களுக்கு எங்கள் ஆரம்ப காலத்தில் உணவு போட்டவர்களாக இருந்தாலும் நீங்கள் உதவி பண்ணக் கூடாது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டாமானாலும் செய்யுங்கள். இதற்காக அந்தப் பிள்ளைகள் எல்லாவிதமான தப்பான பாதைகளைத் தெரிவு செய்தார்கள். இதுவும் வாழ்க்கையிலே நடக்கின்றதென்றால் உங்களால் நம்ப முடியுமா?
- உங்கள் உறவுகள் உண்ணாமல் இருக்கையில் உணவு போட்டது நீங்கள் செய்த தவறா?
அவர்கள் உங்களை உதறி எறிந்தது சரியா?
- உங்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் அவர்கள் உதவாமல் இருப்பது முறையா?
- இதைக் கடைப்பிடிக்கும் ஒரு தாய் பிள்ளைகளை பெத்து இப்படியான குணங்களுடன் வாழும்படி சொன்னது ஒரு தாயாகுமா? இந்தத் தாய் எங்கே? சாரதா எங்கே? நீங்களே சொல்லுங்களேன்.
கோட்டுக் கேஸ் என்று சட்ட றீதியில் போவது என்பது பல வருடங்கள் செல்லவதுமல்லாமல், பணமும் சீரழியும்.
பசுபதியின் குறிக்கோளோ காவேரியைப் பழி வாங்குவதுதான். எனவே இவனை வேறு வழியாகத்தான் அணுக வேண்டும் என்பது நெவீனின் கருத்து.
இனி எந்த வழியினைத் தெரிவு செய்யப் போகின்றனர், சாரதாவின் குடும்பத்தினர்.
இனி நடக்கப் போவதுதான் என்ன?
- காவேரி இனி தனி வழியினை தெரிந்தெடுப்பா. விஜயினை விட்டு ஒதுங்கி விடுவா.
- காரணம் தெரியாமல் விஜய் தன் வாழ்க்கையினை அழித்துக் கொள்ளுவான்.
- இதனைத் தாங்க முடியாமல், விஜேயுக்குத் துரோகம் செய்து விட்டோமே என்று பாட்டியும் தாத்தாவும் நோய்வாய்ப்பட்டு வீ்ட்டினுள்ளே அடங்குவார்கள்.
- ஜமூனா இனி வேறெந்தப் பிரச்சனைகளுக்குள் மூக்கினை நுளைக்காமல் தனது படிப்பினைலே கவனத்தை செலுத்துவாள்.
என்னதான் உண்மையாக நடக்குமென பார்க்த்தானே போகின்றோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!