posted 14th December 2025
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 11ஆம் திகதி, 12ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- விஜேயின் வீட்டார் எழும்பும் முன்பு காப்பியாவது போடலாம் என்று வந்த முத்துமலரினைக் கண்டதும் கடுப்பேறிய சாரதா.
- மிகவும் கேவலமாகப் பேசிய சாரதாவினால் நொருங்குண்டு போன முத்துமலர். ஆனால், முத்துமலரின் கண்ணீரினைக் கண்ட சாரதாவோ மனம் நொந்தா. காப்பியினைப் போட்டு Flaskகினைக் கொண்டு அறைக்கு எடுத்துச் சென்ற சாரதா.
- பசி தாங்காத சிந்து அடுத்தவன் வீட்டுப் பழத்தினைப் பறிக்கமுடியாமல் தவித்ததைக் கண்ட காவேரியும், விஜேயும். பழத்தினைப் பறித்துக் கொடுத்த விஜேய். ஆனால், சிந்துவுக்கு பசி என்று தெரியவில்லை இவர்களுக்கு.
- நர்மதாவுடன் விளையாடிய கிறிஷ்ணா. கோத்து விட்ட பாட்டி. என்ன பிரச்சினையாக இருந்தாலும், பாட்டிக்கு இவர்களும் பேரப் பிள்ளைகள்தானே. உருகிய மனத்துடனும், மெதுவாக வாய்க்கால் வெட்டி தண்ணி பாச்ச நினைக்கும் பாட்டி, சாரதாவின் குடும்பத்தினால் வாங்கிக் கட்டினா.
- கொஞ்சம் கொஞ்சமாக சாரதாவின் குடும்பம், முத்துமலரின் குடும்பத்துடன் ஒட்டுகின்றதோ?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 11 - 12.12.2025
முத்துமலர் வெள்ளனவாக எழுந்து பிள்ளைகளுக்கு காப்பி போட்டு கொடுக்க முனைகையில், சாரதாவோ அவவைக் கண்டதும் கோபம் கொண்டதுமல்லாமல், மிகவும் கேவலமாகப் பேசியும் விட்டா. இதனால் மனம் நொந்து, கண் கலங்கி சாரதா முன்னாலே அழுதா முத்துமலர். கையால் ஆகாதவளாக இருக்கும் முத்துமலருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் ஒடுங்கிப் போனா. அறையினுள் பிள்ளைகள் முன்னால் விக்கி விக்கி அழுதா முத்து.
தாயைத் தாங்கிப் பிடித்தான் கிறிஷ்ணா. சந்தானத்தின் இரண்டாவது குடும்பத்தினைப் பார்க்க வந்த பாட்டி. அன்புடனும், ஆதரவாகவும் கதைத்துக் கொண்டிருக்கையிலே, சாரதா அறையினுள் Flaskகுடன் காப்பி போட்டு கொண்டு வந்தா. சாரதாவிற்கோ அத்தை இருந்தது வியப்பிற்குள்ளாகுகையில், சாரதா காப்பியுடன் உள்ளே வந்தது அதிசயமாக இருந்தது பாட்டிக்கும், முத்துமலருக்கும் அவவினுடைய பிள்ளைகளுக்கும்.
இதுமட்டுமல்லாமல்,
- சிந்துவிற்கு சாப்பாடு போட்ட காவேரி. அதற்கு அனுமதித்த கங்கா.
- சிந்து, வீட்டொன்டறில் பழம் பறிக்கையில் அதற்கு உதவிய விஜேயும், காவேரியும். ஆனால், ஏன் தெருவில் அதுவும் அடுத்தவன் வீட்டில் பழம் பறிக்கின்றாள் என்று சிந்திக்காத காவேரியும், விஜேயும்.
- இப்போது, காப்பியுடன் முத்துமலரின் காம்பறையினுள் வந்த சாரதா.
- நர்மதாவிற்கு, உதவி செய்ததுமல்லாமல், அவளுடன் விளையாடிய கிறிஷ்ணா. இதனை கோத்து விட்டது பாட்டி.
இப்படியாக பலவிதமான அன்நியோன்யமும், ஒருமைப் பாடுகளும் அவர்களையே அறியாமல் சாரதா - முத்துமலர் குடும்பங்களுக்கிடையில் விருத்தியடைகின்றது. இப்படி ஒருநாளில் உருவாகலாம் எனபதற்காகத்தானா, விஜேய் இந்த இரு குடும்பங்களையும் ஒரே வீட்டினில் தங்க வைத்தான். அத்துடன், இந்த இரு குடும்பங்களும் ஒரே இடத்தில் இருக்குமானால், பிரச்சினைகள் தானாகவே தீர்ந்து விடும் என்றொரு ஊகமோ, விஜேக்கு.
இதனால், சண்டைகள் இல்லாமலாகும், குடும்பங்களுக்கிடையில் ஒரு ஒருமைப்பாடு உருவாகும், சொத்துக்கள் இவர்களுக்குள் இருக்கும், அதுமட்டுமல்லாமல், பெண் பிள்ளைகளுக்குப் பலமாக இருக்கும் ஒரு ஆண் வாரிசிருக்கையிலே. இப்படியாக பலவிதமான நன்மைகளை முன்னோக்கி, தூர நோக்கில் சிந்தித்தவரா சந்தானம்?
புரியல, புரியல, புரியல, இப்படியும் ஒரு philosophyயா?
குழப்பத்தில் உருவான இந்தக் குடும்பமானது குவலயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கப் போகின்றதோ! ‘சந்தானத்தின் சிந்தனை’ என்ற ஒரு கோட்பாடு உதயமாகியதோ?
பசியில் பழத்தினைப் பறிக்க முயற்சித்த சிந்து. எதுக்கென்று தெரியாமல் உதவிய விஜேயும், காவேரியும். பசிக்குத்தான் பழத்தைக் கொய்கிறாள் சிந்து என்று இவர்களுக்குத் தெரிந்தால், விஜேயும், காவேரியும் சிந்துவைக் கூட்டிக் கொண்டு போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அதுதான் இவர்களுக்குத் தெரியாதே! அதுமட்டுமல்லாமல் தெரியவும் முயற்சிக்கவில்லையே! இப்படித்தான், பலருக்கு உடனே மூளையிலே இப்படியான விஷயங்கள் கிளிக் பண்ணாது. ஆனால், பின்பு இந்த விஷயம் பின்பு இவர்களின் மூளையில் வெளிக்கும்.
நர்மதா சின்னப்பிள்ளைதான், கிறிஷ்ணா ஒரு உதவி செய்து விட்டான் என்றதும், தன்னுடன் விளையாடினதும் கிறிஷ்ணாவும், சிந்துவும் நல்லவர்கள் என்று recommend பண்ணினதையிட்டு கோபம் கொண்ட சாரதாவின் குடும்பத்தவர். ஆனால், ஒன்று, நீயெல்லாம் அவர்களுக்கு காப்பி கொடுக்கலாமா என்று நர்மதா கேட்டால், சாரதாவாலோ அல்லது மற்றவர்களால் கதைக்க முடியுமா?
கண்ணீருடன் காப்பினை விட்டுவிட்டு வந்த முத்துமலர் வழுக்கி விழப்போன கங்காவைத் தாங்கிப் பிடித்தா. ஆறாம் மாத கர்ப்பிணியாக இருந்த கங்காவிடம் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரையினையும் கங்காவிற்குக் கூறிச் சென்றா முத்துமலர்.
வியப்பினில் உறைந்து போய் நின்ற கங்கா. வாயடைத்துப் போய் நின்ற சாரதா.
இதுவும் வாழ்க்கை. இப்படித்தான் என்றில்லாமல், இப்படியும் இருக்கும்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!