Mahanadhi - மகாநதி - 08.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தாத்தாவையும், பாட்டியையும் அவரவர் மனம் நோகக் கூடாதென்று காவேரியின் வீட்டினை இஸ்திரப்படுத்த வேண்டும் என்று சொல்லி வழி அனுப்பி வைத்தான் விஜய்.
  • கங்கா தனது குணத்தினை மாற்றுவது, தாய் சாரதாவினால் ஆனாலும், உண்மையாக உள்ள குணமென்றால் அது நிரந்தரமாக அல்லவா இருக்கும். மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
  • எல்லாவற்றினையும் விட்டு வந்த விஜய் கொம்பனியைத் தாத்தாவிடம் கைவிட்டு விட்டான்.
  • பாட்டி, காவேரியையும், காவேரியின் குடும்பத்தினையும் வறுத்தெடுத்த வடு சாரதா குடும்பத்திற்கு மாறுதோ இல்லையோ விஜயுக்கு மாறாது. இதனை தாத்தா கண்டு பிடித்து விட்டார். விஜேய் இதனை மழுப்பினான்.
  • தான் உழைக்க வேண்டும், அத்தையின் குடும்பத்திற்கு தன் குடும்பம் சுமையாக இருக்கக் கூடாதென்று நினைத்து வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றான் விஜய்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 08.09.2025

காவேரியையும், சாரதா குடும்பத்தினையும் றாதாவும், கல்யாணிப் பாட்டியும் கடித்துக் குதறியதனை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் விஜய். பாட்டியைக் காணும் போதெல்லாம் காவேரியினுள் புகுந்த அந்தக் கூரிய வேலைக் காண்பதாகத்தான் நினைக்கின்றான் விஜய். இவற்றை ஒன்றையும் காவேரிக்கும் காட்டிக் கொள்ளாமல் தாத்தா, பாட்டியினை விட்டொதுங்கும் விஜய். ஆனால், சாரதாவிற்கோ, ஒட்டு மொத்தமாக விஜய் வயசானவர்களை அம்போ என்று விடுவது சரியில்லை என்று காவேரிக்குப் புத்திமதியினைச் சொல்லிக் கொடுக்கும் உண்மையான தாயாக திகழ்கின்றாள், சாரதா.

தாய்மை என்றால், இப்படி சாரதா மாதிரி இருக்க வேண்டும். மாப்பிள்ளை வந்து விட்டார், தங்கள் பக்கம் அமத்தி விடுவோம் என்றிருக்காமல், விபரமாகச் சிந்திக்கும் பக்குவத்தினை சாரதா இங்கு வெளிக்காட்டுகின்றா. அத்துடன், பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றா.

அது மட்டுமல்லாமல், குமரன் ஏற்கனவே கரடுமுறடாக விஜேயுடன் நடந்திருந்தாலும், இப்போ எல்லாவற்றினையும் விளங்கிய பின்பு, குமரன் காவேரியின் தகப்பன் இஸ்தானத்தில் இருந்து, அதாவது, குடும்பத்திற்கு மூத்தவனாக இருந்து செயற்படுவது என்பது அவனது பெருந்தன்மையினைக் காட்டுகின்றது. ஆனால், கங்கா இடைக்கிடை வேங்கையாக மாறுகின்றாவோ என்று கவலையாகவும் இருக்கின்றது.

உண்மையாக விளங்கிக் கொள்ளும் தாய்மையும் நடிக்கத்தான் வேண்டுமா, வாழ்க்கையிலே?
கங்கா தன் மூத்த பிள்ளை, கர்ப்பமாக இருக்கின்றாள், குமரன் உறவுக் காரன், காவேரி தன் புருஷனுக்குச் செல்லப் பிள்ளை. ஆனால், விஜேய் பிறத்தியிலிருந்து வந்தவன், அத்தனைக்கும் அவன் காவேரிக்காக, தன் மகளுக்காக, எல்லாவற்றினையும் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளான், காவேரி மட்டும் தனக்கு இருந்தால் காணும், காவேரியின் இந்த சிறிய குடும்பத்திலிருந்து கிடைக்கும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் மட்டும் தனக்குக் காணும், இவ்வளவு பெரிய கோடீஸ்வரன், பிறந்ததிலிருந்து செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன், கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் நேற்று வரைக்கும் வளர்ந்தவன், வாழ்ந்தவன் இப்போ இங்கு தரையிலிருந்து தங்களுடன் உணவுண்ணுகின்றான், என்று ஒரு சாதாரணமாக மனுஷனாக வந்த விஜயை சாரதா உபசரிக்கத்தானே வேண்டும். இதில் சாரதாவின் பக்கம் உள்ள பிழைதான் என்ன?

இதனில், கங்கா கொஞ்சம் தவறுதலாக விளங்கிக் கொள்ளுகின்றா. அதாவது, விஜேயைத் தூக்கித் தலையில் வைக்கின்றா அம்மா, தன் புருஷன் குமரனை எடுபிடி வேலைக்கு வைத்திருக்கின்றா என்று compare பண்ணிப் பார்க்கின்றா. இதனை உடனே கண்டு பிடித்து இல்லாமாக்கல் வேண்டும் – உண்மையான வாழ்க்கையிலே. இல்லாவிட்டால், இது பெரிய பூகம்பமாகி விடும்.

இவற்றைப் படித்திருக்கின்றார்கள் போலும், காவேரியும், விஜேயும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு படிகளையும் கடக்கையிலே, சுற்றமும் பார்க்க வேண்டும். சுற்றம் எப்படி ஒவ்வொரு சொற்களுக்கு react பண்ணுகிறதென்று. அங்கிருந்து ஓட வேண்டும். அப்போது வாழ்க்கை இனிக்கும். இல்லயேல், தினமும் புயலைத்தான் காண்போம். சிலசமயம் மிகவும் கொடூரமான tornado அல்லது tsunami யினில் அகப்பட்டு சின்னா பின்னமாகி விட வேண்டியும் வரலாம்.

தவம் இருந்து இந்த பாரிய அழிவுகள்தான் வேண்டும் என்று இருக்கும் குடும்பங்கள்தான் அதிகம்.
இதனைத் தவிர்ப்பதற்கு சுற்றி உள்ளவர்களின் மன நிலையினை எவ்வாறு காவேரியும், விஜேயும் உற்றுப் பார்த்து அதற்குரிய மாதிரித் தங்களை adjust பண்ணிக் கொள்கிறார்கள் என்பதனை அவதானிக்க வேண்டும். அதன் படி வாழ்க்கையினை நகர்த்த வேண்டும். இங்கு நடிக்கக் கூடாது – உண்மையான வாழ்வும், வார்த்தைகளும் இருக்க வேண்டும் – இது குடும்பம், உறவுகள்.
இதனை விளங்கினால், குடும்பம் இறுதியில் உலகம் இன்பத்தில் துய்க்கும்.

குடும்பத்திற்காக, றௌடிகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றாள் காவேரி. காவேரி வீட்டிலே சும்மாதானே இருக்கின்றாள், அப்பவெல்லாம் பிள்ளையை வைத்துக் கொண்டு கொடைக்கானலுக்குப் போனாள்தானே, இதிலே பொடி நடையினிலே போய் கடையிலே பொருட்கள் வாங்கினால் என்ன? என்ற கேள்விகளுக்கு கங்கா இடம் கொடுப்பதனால், காவேரி விஜேயிடம் கேட்டது போன்று தனிக் குடித்தனம் போவது என்பது அப்போது ஊகமாக இருந்தது. அதுதான் நல்லது என்று இப்போது தோன்றுகின்றது.

ஆனால், சாரதாவின் புருஷன் சந்தானத்தின் வேணவா வேறாகவல்லவா இருக்கின்றது. பெரிய காணியிலே எல்லாப் பிள்ளைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போ அதனை மனைவியாகக் கட்டிக் காக்க வேண்டியது சாரதாவின் கடமையாக அல்லவா இருக்கும். காவேரி பிரிந்து போவதற்கு சாரதா இடம் கொடுக்க மாட்டா, அத்துடன், விஜயும் சம்மதிக்க மாட்டான். ஏனென்றால், காவேரி, தன் குடுப்பத்திடம் விஜயைப் பற்றி சொல்லுகையில், விஜேய், அன்பிற்காக ஏங்குகிறவர், ஒரு குழந்தை மாதிரி அம்மா அவர் என்றதினை இங்கு நினைக்கத் தோன்றுகின்றது.

எனவே, விஜய் பிறந்ததிலிருந்து உண்மையான அன்பினில் வாழவில்லை என்பதனால், அன்பிற்கு ஏங்கும் உயிர் அது. எனவே, விஜேய் அத்தையின் குடும்பத்தினை விட்டு வெளியேறுவது என்பது no chance. என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதற்குள்ளேயே பினைந்து கொண்டிருப்பான் விஜய்.
இந்த வாழ்க்கையினை என்னென்று நீங்கள் படம் பிடித்துள்ளீர்கள்?

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00