
posted 22nd August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- மௌனத்தினைக் கலைத்த சாரதா.
- கல்யாணிப் பாட்டியும், றாதா சித்தியும் ஒரு ஈவிரக்கமுமின்றி காவேரியை வற்புறுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை. அத்துடன் சாரதாவின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகப் பேசியதும் மிகவும் தப்பாக உள்ளது.
- இங்கே என்ன பிரச்சனை நடக்கிறது என்றில்லாமல், காவேரி என்ன நிலையினில் இருக்கின்றாள் என்றில்லாமல் விஜய் மன ஆறுதுலுக்காகப் போகின்றாராம். இதுதான் இவரின் குடும்ப வாழ்க்கைக்கு அழகாமோ.
- காவேரி தனக்கு என்ன நடந்தது என்பதனை குமரனுக்கும், நெவீனுக்கும் வெளியிட்டாள்.
- எவ்வளவோ சாரதா சொல்லித்தான் பார்த்தா காவேரியின் பிரச்சனையினை, என்ன முடிவு எடுக்கிறதென்று தெரியாமல் தாய் உள்ளமல்லவா தவிக்கையிலே, நெவீன் ஒன்றுமே சொல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 21.08.2025
காவேரியின் வீட்டில் ஒரே அல்லோல கல்லோலம். றாதாவும், கல்யாணியும் சாரதாவின் வீட்டிற்கு வந்து, காவேரியை விவாகரத்துப் பத்திரத்திலே கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்துகின்றார்கள். காவேரியோ கையெழுத்துப் போட முடியாது. எல்லாத்துக்கும் மேலே தான் விஜயுடன் பேச வேண்டும் என்று கேட்டும் அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி விஜயின் சம்மதத்தோடதான் தாங்கள் வந்திருப்பதாகவும், விஜய் சொல்லித்தான் தாங்கள் இங்கு வந்ததாகவும், தனக்காக வேண்டி தங்களை அனுப்பி வைத்ததாகவும் காவேரியும், அவள் குடும்பமும் நம்பும்படியாக எல்லாம் நல்லாக ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்து இங்கு ஒப்புவிக்கின்றார்கள். ஆனால், காவேரிக்கோ சாடையான ஐமிச்சம் வந்து விட்டது, விஜய் தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு போனபடியினால் சிலசமயம் சொல்லி இருப்பாரோ என்று.
சாரதா இங்கு ஒன்றும் வாய் திறக்கவே இல்லை. ஆனால், குமரன் தலையினைக் காவேரிக்கு அசைத்து இல்லை, கையொப்பம் போட்டு விடாதே என்று தைரியம் பண்ணிக் கொண்டிருந்தான்.
கடைசியாக, கல்யாணி பணத்தினைக் காட்டி பேரம் பேசத் தொடங்கிவிட்டா. பணத்திற்காகத்தானே காவேரி விஜயை contract கல்யாணம் பண்ணினா, ஆகையாலே, இந்த வழியினை பிடிப்போம் என்று மிக்க கேவலமாக கதைக்கத் தொடங்கி விட்டனர். எல்லாக் கதைகளையும் அறிந்து கொண்டுதான் இருவரும் காவேரி வீட்டிற்கே வந்துள்ளனர்.
பணத்தினைப் பற்றி கதைத்து சாரதாவின் உண்ர்வுகளைச் சீண்டிப் பார்த்தனர். இப்படியாவது, காவேரி கையெழுத்துப் போடட்டும் என்று. ஆனால், காவேரியோ அசும்பவில்லை. அவள் மனத்திலே விஜய் மட்டும் அப்படி சொல்லுபவரில்லை என்று திடகாத்திரமாக நம்பினா. இவர்கள் இருவரின் கேவலம் கெட்ட கதைகளினால், தனது கட்டுப் பாட்டினை இழந்த சாரதா இது அவளுடைய வாழ்க்கை காவேரியே கதைப்பாள் என்று கூறிவிட்ட இடத்தை விட்டகன்றா. அதுவோ மிகவும் நல்லதாகப் போய்விட்டது. அப்படிப் போன சாரதாவை கல்யாணி விடுறதாக இல்லை. ஆனால், சாரதா போய்வி்ட்டா.
குமரனும், காவேரியின் பாட்டியும் அப்படியெல்லாம் உடனே கையெழுத்துப் போட்டுவிட முடியாது என்று மறுத்து விட்டனர். அதைவிட, கங்கா, கொஞ்சம் கடுப்பாகப் பேசி விட்டா, அவர்கள் பணத்தினை வைத்து காவேரியின் வாழ்க்கையினைப் பேரம் பேசிய போது. இங்க இருந்தால் பிறகு தங்களுக்கு சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று வீறாப்புக் காட்டிற மாதிரி, உங்களுக்கு நாளைக்கு மட்டும்தான் நேரம், நாளைக்கு வருவோம் கையொப்பம் இடவேண்டும் என்று உறுக்கி விட்டு நழுவி விட்டார்கள்.
விஜய் தனது மனம் கொஞ்சம் குளப்பமாக இருக்கி்ன்றது என்றதனால், ஒரு மாற்றத்திற்காக வேறிடம் போய்க் கொண்டிருக்கையிலேதான் காவேரி கோள் பண்ணினா. விஜயோ அதனை silentரிலே வைத்து விட்டு காரை ஓட்டிக் கொண்டு போகின்றான். அந்தக் கோளினை எடுக்கவுமில்லை. கோள் வந்ததும் அவனுக்குத் தெரியவுமில்லை.
இப்படித்தான் வெண்ணிலாவின் பிரச்சனை நேரங்களில் காவேரி கோள் பண்ணும் போதும், அதே நேரம், விஜேய் காவேரிக்குக் கோள் பண்ணும் போதும், யார் கோளினை எடுக்கினம் என்றி்ல்லாமல் தன்னுடைய பாட்டிலே காவேரியிடம் சொல்வதனை றாகினியிடம் அதாவது, எதிரியிடம் சொன்னது, இதுவரைக்கும் விஜயுக்குத் தெரியாது. அப்படித்தான் இப்பவும் நடக்கின்றது. அட, தன் மனைவியை, அதுவும் கர்பிணியாக இருக்கும் தன் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஏதாவது அவளுக்கு, பசுபதியாலோ அல்லது கர்ப்பத்தினால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்று ஒருவிதமான சிந்தனையோ அல்லது உணர்வுகளோ இல்லாமல் இடம் விட்டு இடம் போவதுதான் கணவனுக்கு அழகா?
மனத்தினால் காவேரி என்னவாறான வேதனைகளை ஒருதருக்கும் சொல்ல முடியாமல் தவிக்கின்றாளோ தெரியாது, கவனாமாகவும், அவதானமாகவும் தான் இருக்க வேண்டிய ஒரு உணர்வுகளும் இல்லாமல் இருக்கும் விஜயுக்கு ஏன் இந்த வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றுகின்றது.
இவ்வளவு காலமும் காவேரி நியாயம் கதைத்வள்தானே இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றாள் என்ற ஒரு யோசனை இல்லையா விஜயுக்கு. ஒரு சிறு பிரச்சனை அதாவது காவேரி மௌனமாக ஒன்றும் கூறாமல் இருக்கின்றாள் என்றால் ஏதோ சொல்ல முடியாத பிரச்சனை ஒன்று இருக்கலாமல்லவா என்று கூடச் சிந்திப்பதற்கு இடம் கொடுக்காமல் இந்தா வெட்டுறன் கொத்திறன் என்று போனால் குடும்பம் விளங்கின மாதிரித்தான்.
இனி காவேரி என்ன செய்யப் போகின்றாள்?
- அநேகமாக, விஜய் கோவத்தில் காவேரிக்குக் கோள் பண்ண மாட்டான்.
- காவேரி, தனியாகத்தான் அவள் வீட்டாருடன் சேர்ந்து முடிவெடுப்பாள்.
- நெவீனுக்குத் தெரிந்த உண்மை, காவேரி கர்ப்பமாக இருப்பதனை வீட்டாருக்கச் சொல்ல வேண்டி வரலாம்.
- விஜய் கோள் பண்ணாமல் இருக்க இனி, குமரன் அல்லது நெவீன் கோள் பண்ணி விஜயின் பாட்டியும், சித்தியும் இந்த விவாகரத்துப் பத்திரத்துடன் வந்து காவேரியை வற்புறுத்தவதனைத் தெரியப் படுத்தவார்கள்.
இவை நடைபெறுமா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!