ரல்க்கும் (Talc) புற்றுநோயும் (Cancer)
  • ரல்க் (Talc)என்றால் என்ன?
  • ரல்க் எங்கு காணப்படுகின்றது?
  • ரல்க் எவ்வாறு புற்ற நோயை உண்டாக்குகின்றது?

ரல்க் ஒரு கனியுப்பு (mineral). அது எமது பூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் கனி உப்புகளில் ஒன்று.

இந்த கனியுப்பினை அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் கொம்பனிகள் அப்பொருட்களின் முக்கிய பகுதியாக ரல்க்கைச் சேர்த்து அவர்களுடைய தயாரிப்புக்களின் செயல்திறனைக் கூட்டிக் கொள்வதனால் அவ் அழகு சாதனப் பொருட்கள் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை பல சகாப்தங்களாகப் பெற்றுள்ளன.

உதாரணமாக;

  • குழந்தைகளுக்குப் பாவிக்கும் பேபிப் பவுடர்கள் (Talcum Baby Powders)
  • அழகு சாதனப் பொருட்கள் (Cosmetics)
  • மட்பாண்டங்கள் (Ceramics)
  • பூச்சுக்கள் (Paints)

இன்னும் பல உள்ளன.

இவ்வாறான ரல்க்கம் பவுடர்கள் முக்கியமாக குழந்தைகளுக்குப் பாவிப்பதுண்டு. இந்தப் பவுடர்களிலுள்ள ரல்க்கானது ஈரலிப்புத் தன்மையை உறிஞ்சும் தன்மையுள்ளது. எனவே, குழந்தைகளைக் குளிப்பாட்டிய பின்பு தாய்மார்கள் இவ்வாறான ரல்க்ம் பவுடர்களைப் பாவிப்பது வழக்கமாகும். அதனை அனைவரும் பாவித்தும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறாக பூமியிலிருந்து ரல்க் அகழ்வெடுக்கையிலே இத்துடன் இன்னுமொரு கனிப்பொருளும் சேர்ந்து வருவது தவிர்க்க முடியாமல் இருக்கையிலே அக் கனிப்பொருளும் ரல்க்குடன் சேருந்து இவ்வாறன அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பினில் சேர்ந்துவிடுகின்றது. அப்பொருள் அஸ்பஸ்ரோஸ் (Asbestos) ஆகும். இதுவும் ஒரு கனிப்பொருள் தான். ஆனால், இதன் தன்மை சிம்பிளாகச் சொன்னால், 'கூட இருந்து குளிபறிக்கிறதென்று' நாங்கள் அறிந்திருப்போம், அனுபவித்திருப்போம் அல்லவா. அந்த வர்க்கம் தான் இது.

அஸ்பஸ்ரோஸினுடைய தன்மை என்னவென்றால், இம் மிகவும் நுண்ணிய நாரானது சுவாசத்தின் மூலம் (மூச்சு உள்ளெடுக்கும் போது) சுவாசப்பையின் அடி ஆழத்திற்கு எல்லாவிதமான உடலிலுள்ள இயற்கையான தடைகளையும் தாண்டிப் போய் அங்கு படிந்து கொள்ளும். இந்நாரானது உடனே ஒருவிதமான தாக்கத்தையும் உடலுக்கு விளைவிக்காது. ஆனால், இதன் ஆட்டம் தொடங்கும் எப்போவென்றால், 25 தொடக்கம் 30 வருடங்கள் கழித்துத்தான். அதுவும் ஒரு முடிவோடத்தான் தொடங்கும். இது என்னமாதிரி என்றால் எடுக்க முடியாத சூனியம் வைத்தது போன்று. அப்போது என்னென்று வெளிவரும் தெரியுமா? - மீசோத்தீலியோமா (Mesothelioma) என்ற புற்று நோயாக. இப்புற்று நோயானது சுவாசப்பையில் உண்டாகும் புற்று நோயாகும். (இதனைப்பற்றி நான் இன்னுமொரு பதிவாகத் தருகிவேன்.)

ரல்க்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவையென்று இந்த வெளியீட்டில் பார்ப்போம்.

பொறுத்திருங்கள்.......