குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் காய்ச்சல் - காப்பாற்றும் வழிகள்

குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்குமானால், அக்குழந்தை நன்றாக நித்திரை கொள்ளும். ஆனால், குழந்தை அழுமானால், அக்குழந்தைக்கு ஏதோ சரியில்லையென உடன் கவனம் செலுத்தல் வேண்டும்.

ஒரு குழந்தையினது உடல் சூடானது கூடிக் கொண்டு போனால், அதாவது, சாதாரணத்தை, 37℃ (அல்லது 98.4℉) விடக் கூடினால், அவ் உடல் சூட்டை உடனடியாக சாதாரண நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

முக்கியமாக குழந்தை 3 மாதத்திற்குக் குறைவாக இருக்குமானால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

உடல் வெப்பநிலை கமக்கட்டினுள் அல்லது காதினுள் வைக்கும் போது , 37.2℃ ( அல்லது 99℉) உயர்ந்து இருந்தால், அல்லது மலவாசல் மூலமாக அளக்கையிலே 38℃ (அல்லது 100.4℉) ஆக இருக்குமானால் உடனடியாக வைத்திய உதவியை நாடவேண்டும்.

எப்படி குழந்தையின் காய்ச்சலைக் குறைப்பது?

காய்ச்சலைக் குறைக்கும் முறைகளாவன;

i) நிகச் சூடான நீரைப் பாவிப்பது - குழந்தையை மெல்லிய உடையினால் மூடவேண்டும்.
பின்பு, நிகச் சூடான நீர் நனைந்த துவாயினால் உடல் பூராகவும் துடைக்க வேண்டும்
குழந்தை சூட்டுப் பிரதேசத்தில் சீவிக்குமானால், யன்னல்களை நன்கு காற்று சுற்றோட்டமாக இருகம்படி திறந்துவிடவேண்டும். அப்போது, உடலில் உள்ள நிகச் சூட்டுத் தண்ணீர் ஆவியாகப் போகும் போது உடலில் உயர்ந்த சூட்டைக் குறைக்கும்.

ii) பரசெற்றமோல் துளி அல்லது பாணி கைவசம் இருந்தால், அதில்லுள்ள துண்டினில் குறிப்பிட்டபடி கொடுக்கவும்.
குறிப்பு: அதேநேரம், காய்ச்சல் குறைகிறதா என்று பார்ப்பதுடன், வைத்திய ஆலோசனையையும் கேட்க விரையுங்கள்


ஏன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும்?

காய்ச்சலை உடனுக்குடன் குறைக்க விட்டால், குழந்தைக்கு காய்ச்சல் வலி உண்டாகும். இவ்வாறு வலி மீண்டும் மீண்டும் வருமானால் குழந்தை வலிப்புப் பிள்ளை ஆகிவிடும் சந்தர்ப்பம் அதிகமாகக்கூடும்.


குழந்தைகள் உள்ள வீட்டில் இது சம்பந்தமாக வைத்திருக்க வேண்டியவை;

i) வெப்பமானி
ii) பரசெற்றமோல் துளி அல்லது பாணி
iii) துப்பரவான துணி அல்லது துவாய்



தேனாரம் மருத்தவப் பிரிவு