எமது சுகார நிலையை நாங்களே அறிந்து கொள்ள இலகுவான வழி இது

எமது சுகாதார நிலையினை நாங்களே அளப்போம், அறிவோம், கவனத்தில் கொள்வோம்

உலகத்திலே முதன்மையான உயிரைக் காவு கொள்ளும் நோய்களில் முதலிடத்தை பிடித்துள்ளது இருதய - இரத்தக்குழாய் (Cardio-vascular disease) நோயாகும்.

எனவேதான், தேனாரம் கெல்த் ஆட்டிக்கிள்ஸ், Thaenaaram Health Articles, நலமுடன் வாழ்வதற்கு பலவிதமான ஆரோக்கிய வழிகாட்டிகளாக இவ்வாறான கட்டுரைகளை உங்களுக்கு இலகுவாக வாசித்து அறிந்து கொள்ளும் விதமாக தந்துதவுகின்றது.

மேலும், இந்நோயுடனோ அல்லது தனியாகவோ மிகவும் பாரதூரமான அனர்த்தங்களை உண்டாக்கும் அடுத்த நோயானது சலரோகமாகும் (diabetes).

இந்த வியாதிக்கு அடித்தளமாக உள்ளது எமது உடலின் நிறையாகும். அதாவது, எமது பருமனாகும். அதுதான் எமக்கே முதல் எதிரியாக வந்து முன் நிற்கும்.

உடலின் பருமனின், அதாவது உடலின் நிறை (body weight )யின் அளவிற்கும், எமது உயரத்திற்குமான கணக்கீடு, BMI, என்று அழைக்கப்படும். இந்த அளவுதான் நமது சகாதாரத்தைத் தீர்மானிக்கின்றது.

கொஞ்சம் நுணுக்கமாக இந்த BMI என்றால் என்ன என்று பார்ப்போம்.

BMI என்றால், Body Mass Index , ஆகும். இதனைக் கணக்கிடுவதற்கு இரண்டு தரவுகள் தேவையானது.

i) எமது உடல் நிறை - இந்நிறையானது கிலோகிராமிலோ (kg) அல்லது இறாத்தலிலோ (lbs) நாங்கள் அளந்து கொள்ளலாம்.

ii) எமது உயரம் - எமது உயரத்தை, மீற்றரிலோ (meter) அல்லது அடியிலோ (foot) நாங்கள் அளந்து கொள்ளலாம்.

ஆனால், இதில் ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது.

அதாவது, எமது உடல் நிறையை கி.கி. மில் அளந்தால், எமது உயரம் மீற்றர் அலகில் இருக்க வேண்டும்.

அதேபோல, எமது எடையை இறாத்தலில் அளந்தால், எமது உயரம் அடியில் இருக்க வேண்டும்.

இந்த அளவுகளை BMI கல்குலேற்றரின் மூலம் கணக்கெடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான கணிப்பீடு சாதாரணமாக சுகாதார நிலையங்களில் செய்யப்படும்.

இவ்வாறு கணக்கிடும் போது, வரும் அளவுகளைக் கொண்டு எமது உடலின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம்.

BMI ன் அளவானது;

18.5 ற்குக் குறைவானதாக இருந்தால் - குறைந்த உடல் நிறை (underweight)

18.5 - 24.9 ற்கு இடையில் இருந்தால் ஆரோக்கியமான நிறை (healthy weight)

25 - 29.9 ற்கு இடையில் இருந்தால் மிகவும் கூடுதலான நிறை (overweight)

30ற்கு கூடுதலாக இருந்தால், வெகுகூடுதலான நிறை (obese)

என்று வரையறுக்கப்படும்

இவ்வாறு மேல் குறிப்பிடப்பட்டபடி கணக்குக் கஷ்டமாக இல்லாமல் கணக்கிடுவதுதான் நான் சொல்லப் போகும் இலகுவான வழிமுறையாகும்.

ஆதாவது, எமது சகாதாரத்தின் நிலைமையை நாங்களே அறிந்து, அதற்குரிய பிரகாரம் நாங்களே எம்மை பல விதங்களில் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

நான் சொல்லப்போகும் முறைக்குத் தேவையானவை;

1. அளவிடும் நாடா (இது இல்லாதவர்கள், ஒரு பட்டியைப் பாவிக்கலாம். ஆனால், அளவிடும் நாடா இருக்குமானால் மிகவும் சிறந்தது.

2. ஒரு கொப்பி - நீங்கள் எடுக்கும் அளவுகளைக் குறைத்துக் கொள்ளுவதற்கு. இதனால், நாங்களே இத்தரவு அளவுகளை வைத்து எமது அளவு கூடுகின்றதா என்று பார்த்துக் கொள்ளலாம்.

முதலாவதாக, எங்கள் உயரத்தை அளந்து கொப்பியில் குறித்துக் கொள்ளுவோம்.

இரண்டாவதாக, எமது வயிற்றின் சுற்றளவை, இடுப்பெலும்பின் சற்று மேலாக அளவு எடுக்க வேண்டும்.

இடுப்பின் அளவு, எமது உயரத்திலும் குறைவாக இருக்குமானால், நமது உடல் சுகாரமானதாக உள்ளது என்று கூறலாம். அதாவது, சலரோகம், இருதய நோய், புற்று நோய், பாரிசவாதம் என்பன வரும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும்.

ஆனால், இடுப்பின் அளவு, அவரின் உயரத்தின் அரைவாசிக்குக் கூடுதலாக இருக்குமாயின், அவர் கூடுதலான ஆபத்தில் (higher risk) இருக்கிறார் என்ற அர்த்தமாகும்.

எப்போது, இடுப்பின் அளவு கூடுதலாக உள்ளவர்கள் தங்களைத் தாங்களே கூடுதலான ஆபத்தில் உள்ளோம் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவரவர்களது உடல் நிறையை குறைக்கும் வழியை பின்பற்றுதல் அவசியம்.

இவர்களுக்குரிய கொழுப்பானது வயிற்றைச் சுற்றிப் படிந்திர்க்கும் - இதனை சென்றல் அடிபோசிற்றி (central adiposity) என்று கூறுவார்கள்.
இந்த சென்றல் அடிப்போசிற்றியைக் கரைப்பது என்பது இலகுவான காரியம் அல்ல.

இதற்குப் பலவிதமான முறைகள் உண்டு. அவற்றை நான் எனது அடுத்த பதிவினில் (வெளியீட்டினில்) தருவோம்.
அந்தப் பதிவானது, எப்படி எமது உடல் நிறையைக் குறைக்கலாம்? என்ற தலைப்பில் வெளியிடப்படும்







தேனாரம் மருத்தவப் பிரிவு