
posted 8th January 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
எமது வேலை தொடர்பான மன அழுத்தம் ஏற்படுவது எப்படி? அதனை எவ்வாறு குறைப்பது?
இந்த கட்டுரையானது, நாங்கள் செய்யும் வேலையின் நிமித்தம் ஏற்படக்கூடிய அல்லது வேறு காரணங்கள் எமது வேலைத் தளங்களில் அளவுக்கதிகமாக எம்மேல் திணிக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய பாதகமான விழைவுகளினால் எம்மில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன? அவற்றிலிருந்து எவ்வாறு நம்மை எமது முதலாளி எம்மில் ஏற்பட்ட அவ்வறிகுறிகளை ஏற்கனவே கண்டறிந்து எமக்கு எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்பதனைப் பற்றியதாகும்.
சாதாரணமாக இதை விளக்க வேண்டுமென்றால், எமக்கு முதலாளியினால் ஒரு குறிப்பிட்ட ஒரு வேலை தரப்பட்டதென்று வைத்துக் கொள்ளவோம். அந்த வேலைதான் நாம் செய்ய வேண்டியதும் கூட. ஆனால், சில முதலாளிகளோ அல்லது எமக்கு மேலுள்ள அதிகாரிகளோ எமக்கு ஒரு சில வேலைகளை எம்மேல் மேலதிகமாகத் திணித்தாலோ அல்லது எமது வேலையினையே குறிப்பிட்ட நேரத்தைவிட இன்னமும் குறுகிய நேரத்தினுள் முடித்துத் தரும்படி எம்மைக் கஷ்டப்படுத்தும் போதோ எம்மால் அவ்வாறன வேலைப்பழுவினை எம்மனநிலை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படும். அவ்வாறக மனதில்
ஏற்பட்ட தாக்கமானது நாளடைவில் எமது உடல் நிலையிலே மாற்றங்களை எற்படுத்தும் நிலைகளும் உருவாகச் சந்தர்ப்பங்கள் உண்டு.
இவ்வாறான, மனதில் ஏற்படும் தாக்கங்கள் கவனிக்கப்படாவிடில் அவை நம்மை இறுதியில் மன நோயாளியாக்கும் சந்தர்ப்பங்களும் வரலாம்.
இவ்வாறாக ஏற்படும் சந்தர்ப்பங்களில், ஒரு வகையானோர் அதற்கு முகம்கொடுத்து தம்மைத்தாமே சமாளிக்கக் கூடிய மன உறுதி கொண்டவர்களாகவும், இன்னொரு வகையானவர்கள் ஓரளவிற்கு தம்மை அவ்வாறான வேலைப் பழுவினில் சுதாகரிக்கக் கூடிய திறமை கொண்டவர்களாகவும், மீதியானவர்கள் கொஞ்சமேனும் தம்மை சரிசெய்ய முடியாதவர்களாகவும், இன்னும் சிலர் வேறு வேலை தேடி இடம் மாறுவதையும் நாம் நமது அனுபவ ரீதியாக அறிந்திருப்போம். நாங்கள் இந்த வகையான பிரிவுகளில் ஒரு பிரிவினில் அடங்கக்கூடிய ஒருவராக இருப்போமல்லவா?
ஒருவருக்கு தாக்கம் தரும் காரணியானது மற்றவருக்குரிய காரணியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உதாரணமாக, குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முடிக்க வேண்டிய வேலையினை ஒரு சிலரால் முடிக்கக் கூடியதாக இருக்கையில் வேறு சிலரால் முடியாமல் போய் விடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடைசியாகக் குறிப்பிடப்பட்டவர்கள் இவ்வாறன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களாக ஆக்கப்படுகின்றார்கள்.
இப்படியாக ஏற்படுவது, வேலைத்தளங்களாக இருந்தால், தொழிலாளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்வது முதலாளியின் கடமையாகும்.
இவ்வாறக தனது தொழிலுக்கு மன அழுத்தம் ஏற்படும் அறிகுறிகளை அவதானிக்க முடிந்தால், அவற்றை இயலுமானவராயில் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் முதலாளிக்கு உண்டு.
இவ்வாறு அதிகரிக்கும் மன அழுத்தத்தடன் கூடிய உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடருமானால், அதைக் கவனியாது முதலாளி அசட்டையாக இருந்தால், தொழிலில் அக்கறையற்ற நிலைமை, வேலையில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களின் அதிகரிப்பு, வேலையில் சுகவீனம் காரணமாக வேலைக்கு வராமல் இருப்பது போன்ற அசௌகரியங்கள் ஏற்படாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முதலாளி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
இவ்வாறான வேலைத்தலத்திற்குரிய விபத்துக்களை, ஆபத்துக்களை தவிர்ப்பதற்குரிய விதிமுறைகளை அறிந்து கொள்ளவுள்ள Health and Safety Executive இணையத்தளத்தில் வாசித்தறியலாம்.