ஆரோக்கியமும், கர்ப்பிணித்தாயும்

அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுகாதாரமான உணவு அவசியமாகின்றது, குறிப்பாக, கர்ப்பிணித் தாய்மார்களும், கர்ப்பிணிகளாக வரக்கூடிய பெண்களும் உணவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டுமென்றால் தினமும் எல்லா வகையான உணவுகளையும் மாறி மாறி தின உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உண்பதனால் தாயும், சிசுவும் உணவிலுள்ள எல்லாவிதமான உணவுச் சத்துகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறாக உண்ணும் சீரான உணவை (Balanced Diet)த் தவிர, போலிக் அமிலமும் (Folic Acid) கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பணித் தாய்மார்கள் உண்ண வேண்டிய சில உணவு வகைகளாவன;

  • காபோகைதறேற் (carbohydrate) - இவ் வகையான உணவானது தாய்க்கும், சேய்க்கும் சக்தியைக் கொடுக்கும். உதாரணமாக; சோறு, சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ்.
  • பழங்கள், மரக்கறி வகைகள் - இவ்வகை உணவுகளாவன - வைற்றமின்கள், கனியுப்புகள் ஆகியவற்றை தருவதோடல்லாமல், கர்ப்ப காலங்களில் ஏற்படவுள்ள மலச்சிக்கலைக் குறைத்து இலகுவாக்கும் தன்மை வாய்ந்தது.
  • புரதச் சத்து - இச்சத்தானது சிசுவின் வளர்ச்சிக்கு அவசியமாகும். இச்சத்தைப் பெறுவதற்கு, இறைச்சி, மீன், முட்டை, அவரை உண்பது நல்லது.
  • கல்சியம் - இக்கனிப் பொருளானது, சிசுவின் எலும்புகள் உறுதியாக வளர்வதற்கு அவசிமாகும். இச்சத்தைப் பெறுவதற்கு, பால், பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணலாம்.