Placeholder image

தாய் நிலம் நில அபகரிப்பு - இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ஆவணப் படத்திரையிடல் மற்றும் எமது நில – மீட்புக்கான தொடக்க முயற்சி

குரூர் ப்ரம்மா ..................
எல்லோருக்கும் வணக்கம்!

2021 மார்ச் மாதம் 20ந் திகதி நாம் நடத்திய நில அபகரிப்பு கருத்தரங்கத்தின் தொடர்ச்சியானது தாமதமாகியும் இன்று நடைபெறுவதையிட்டு மகிழ்வடைகின்றேன்.
இலங்கை அரசாங்கம் போல் கொவிட் 19க்கும் எம்மைத் தலையெடுக்கவிட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்த்தான் அதுவும் இயங்கி வருகின்றது!

எனினும் கட்டுப்படுத்தல்களையும் தனிமைப்படுத்தல்களையும் மீறி நாங்கள் இன்று புகழ் மிக்க அறிஞர்களை இந்த மெய் நிகர் தொடர் கருத்தரங்கத்திற்கு வரவழைத்துப் பங்குபற்ற வைத்திருக்கின்றோமெனில் அதற்கு எமது விடா முயற்சியுடைய சோர்வற்ற இளைஞர் குழாமே பொறுப்புடையவர்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!
இன்றைய நாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களில் ஒன்றான தமிழ் மக்களின் வடக்கு -கிழக்கு தாயகத்தை கடந்த 70 வருடங்களாக அபகரித்துவரும் தொடர் இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகளை ஆவணப் படமாக ஆதாரபூர்வமாக ஆய்வுபூர்வமாக வெளியிடும் நாள் இது. இவ்வாவணப் படம் நில அபகரிப்பு நடக்கும் இடங்களில் வைத்தே எடுத்த படம். இதனை நாம் என்றோ செய்திருந்திருக்க வேண்டும். இது போன்ற ஆவண படங்கள் பலவற்றை நாம் வெளியிட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்தேனும் அவசியமும் முக்கியமுமான இந்த செயற்பாடு இன்று அரங்கேற்றம் பெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. அதேபோல, நில அபகரிப்பு எவ்வாறு ஒரு பெருந்தொற்றாக (pயனெநஅiஉ) வடக்கு -கிழக்கில் தமிழ் மக்களை பீடித்து அவர்களின் இருப்பு, அடையாளம், வாழ்வு ஆகியவற்றை இல்லாமல் செய்கின்றது என்பது பற்றி விவாதிப்பதற்கு உலகின் பிரபல்யம் மிக்க கல்விமான்களும் செயற்பாட்டாளர்களும் இங்கு வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது.

இத்தகைய சிறப்பும் முக்கியத்துவமும் மிக்க இன்றைய நிகழ்வினை என்னுடன் கூட்டாக ஆரம்பித்துவைத்து உரை ஆற்ற வந்திருக்கும் முதுபெரும் அரசியல்வாதியும், எனது பெரு மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், என்னை 2013 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டுவந்தவருமாகிய கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு எனது நன்றிகளை அடுத்து தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கு -கிழக்கின் தலைநகரம் என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த திரு.சம்பந்தன் அவர்கள், எவ்வாறு 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு பின்னர் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் நிலங்கள் அரசாங்கத்தின் குடியேற்றத்திட்டங்களினாலும் வன்முறைகளினாலும் பறிக்கப்பட்டு இன்று அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றார். 1956 ஆம் ஆண்டு முதல் சாத்வீக வழியில் தமிழர் தாயகத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிவரும் திரு.சம்பந்தன் அவர்கள், இன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து இங்கு கலந்துகொண்டிருப்பது சிறப்பானது. அவருக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல, நில ஆக்கிரமிப்பு தொடர்பில் உலகத்தின் தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவராக விளங்கும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ழுசநn லுகைவயஉhநட இன்று முதன்மை உரை ஆற்ற வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. முதல் தரம் மிக்க ஆய்வுகளின் ஊடாக நில ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு எதிராக ழுசநn லுகைவயஉhநட அவர்கள் செயற்பட்டுவருபவர். அதேவேளை, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் மிகவும் துணிச்சலாக குரல் எழுப்பி வருபவர். ளுவயகெழசன ருniஎநசளவைல Pசநளளஇ ருniஎநசளவைல ழக Pநnளெலடஎயnயை Pசநளள போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழக அச்சகங்கள் அவரின் ஆய்வுகளை வெளியிட்டுள்ளன. அவரது ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளன. புநழபசயிhல யனெ ருசடியn ளுவரனநைள ஆகிய துறைகளில் கடந்த ஒரு தசாப்தத்தில் ஆகக் கூடுதலான அளவுக்கு ஆய்வாளர்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேலிய அறிஞராக அவர் திகழ்கின்றார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பேராசிரியர் லுகைவயஉhநட உருவாக்கிய இனம் சார்ந்த ஆட்சிகள் என்ற கோட்பாடு (வாந வாநழசல ழக நவாழெஉசயவiஉ சநபiஅநள) மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு கோட்பாடாக கருதப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்கள் முன்னெடுத்துவரும் நில அபகரிப்பு உட்பட அடக்குமுறை செயற்பாடுகளை ஆய்வுசெய்துள்ள அவர் இஸ்ரேலை போல இலங்கையும் ஒரு 'இனம்சார்ந்த ஆட்சி' (நவாழெஉசயவiஉ சநபiஅந) என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய துணிச்சல் மிக்க பேராசிரியர் ஒரென் யிவ்டசெல் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தமையையிட்டு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அடுத்து எம்முடன் ஒரு முக்கியமான பெண்மணி சேர்ந்துள்ளார். கலாநிதி மேதா பட்கார் அவர்கள் இந்தியாவின் பிரபல்யம் மிக்க சமூக செயற்பாட்டாளர் ஆவார். இந்தியாவின் பழங்குடி மக்கள் சார்பிலும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் சார்பிலும் அவர்களின் அரசியல் சமூக அந்தஸ்தையும் உரிமைகளையும் குறித்த மக்கள் பெற 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றார். ஒடுக்கப்பட்ட மக்களிடையில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்காகக் குரல் கொடுத்து வருபவர். தமிழ் மக்களின் தாயகத்தில் தொடர்ந்து வரும் சிங்களப் பெரும்பான்மை மத்திய அரசாங்கங்களினால் நடாத்தப்படும் நில அபகரிப்பு பற்றி எமது மக்கள் சார்பில் அவர் குரல் எழுப்ப வந்துள்ளார். அவர் 32 வருடங்களுக்கு முன் ஒரு மக்கள் இயக்கமான நர்மதா பச்சாஓ அன்டோலானை ஸ்தாபித்து குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ;டிரம் போன்ற மாநில மக்கள் சார்பில் அவர்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்துள்ளார். இந்தியாவின் பல மக்கள் இயக்கங்களை ஒன்று சேர்த்து மக்கள் இயக்கங்களின் தேசியக் கட்டமைப்பு என்ற நிறுவனக் குடையின் கீழ் அவற்றைக் கொண்டு வந்தார். தற்போது அந்தக் கட்டமைப்பின் தலைவர் அவரே. இவர் ஏற்கனவே இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் உரித்துக்கள் பற்றியும் தன்னுடைய கரிசனைகளை வெளியிட்டுள்ளார். அவர் இன்று எமது கலந்துரையாடலில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்வடைகின்றோம். அவரை மனமுவந்து வரவேற்று எம்முடைய அழைப்பை ஏற்றமைக்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு தரம் மிக்க ஆய்வுகளை வெளியிட்டுவரும் அமெரிக்காவின் ழுயமடயனெ ஐளெவவைரவந இன் பணிப்பாளர் திருமதி.அனுராதா மிட்டால் அவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் பாரதூரமாக இருந்த வேளையில், மிகவும் துணிச்சலான முறையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு -கிழக்கின் பல்வேறு இடங்களுக்குஞ் சென்று ஆதாரங்களை திரட்டி 'வுhந டுழபெ ளூயனழற ழக றுயச: வுhந ளுவசரபபடந கழச துரளவiஉந in Pழளவறயச ளுசi டுயமெய' என்ற ஆய்வு அறிக்கையை 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திருமதி அனுராதா வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உட்பட ஏராளமான நாடுகளின் முன்னணி ஊடகங்களில் வெளிவந்து எமக்கு எதிரான அநீதி தொடர்பில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. அதன்பின்னர், மேலும் 3 ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டிருந்த திருமதி அனுராதா, இந்த ஆண்டின் ஆயசஉh மாதத்தில் 'நுனெடநளள றுயச: வுhந னுநளவசழலநன டுயனெஇ டுகைநஇ யனெ ஐனநவெவைல ழக வாந வுயஅடை Pநழிடந in ளுசi டுயமெய' என்ற மிக முக்கியமான அறிக்கை ஒன்றை நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அதிர்ச்சி அளிக்கும் பல ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார். இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவின் காஷ;மீர் உட்பட ஏராளமான ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும் நில அபகரிப்பு தொடர்பில் திருமதி அனுராதாவின் ழுயமடயனெ ஐளெவவைரவந ஆய்வுகளை மேற்கொண்டுவரும் உலகின் முன்னணி நிறுவனமாகும். எமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் திருமதி அனுராதா மிட்டாலுக்கு இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதேபோல, இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ள வந்திருக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாக துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் தமிழ் ஈழத்தின் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆய்வு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் பல தசாப்தங்களாக சர்வதேச அளவில் பாடுபட்டுவருகின்றார். தமிழ் ஈழத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தின்பால் அதீத பற்றும் அர்ப்பணிப்பும் கொண்டவர். புதுடில்லி பல்கலைக்கழகத்தில் 18 வருடங்களாக விரிவுரை ஆற்றியுள்ள பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள், ஜப்பானிலுள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்திலும் (குநடடழற ழக வாந ருnவைநன யேவழைளெ ருniஎநசளவைலஇ வுழமலழஇ துயியn) ஆய்வாளராக இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்ற பின்னர் அதுபற்றிய பல்வேறு ஆவணங்கள் ஆதாரங்களை திரட்டி 'ளுசi டுயமெய: ர்னைiபெ வாந நுடநிhயவெ னுழஉரஅநவெiபெ றுயச ஊசiஅநளஇ ஊசiஅநள யபயiளெவ hரஅயnவைல யனெ புநழெஉனைந' என்ற 975 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை எழுதி 2014 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மணிவண்ணனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எமது மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

இந்த ஆவண படத்தை மிகவும் சிறந்த முறையில் வெளிகொண்டுவந்துள்ள ஸ்ரீதரன் சோமிதரன் மற்றும் அவரின் குழுவினருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். திரு சோமீதரன் ஏற்கனவே எமது பிரச்சினைகள் தொடர்பில் மிக முக்கியமான மூன்று ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் இதுபோன்ற ஆவணப் படங்களை வெளிகொண்டுவருவார் என்று நம்புகின்றேன். திரு சோமீதரன் சினிமா துறையிலும் ஆவணப் படத் துறையிலும் பெரும் புகழ்பெற்று வெற்றிகள் பலவற்றை பெறவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வாழ்த்துகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது சிறுவயதில் கனடாவுக்கு சென்று இன்று புகழ்பெற்ற இசை கலைஞராக (சநஉழசனiபெ யசவளைவ யனெ னசைநஉவழச) வளர்ந்திருக்கும் ளூயn ஏinஉநவெ னந Pயரட இன்றைய நிகழ்வில் தனது இசை நிகழ்வை நிகழ்த்துவதற்கு இங்கிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகின்றது. கனடா சென்றாலும் இன்றும் அவர் எமது மக்களின் துன்பங்கள் துயரங்கள் குறித்து கரிசனை கொண்டு செயற்பட்டுவருகின்றமை புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது இளம் சமுதாயம் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு ஏற்படுத்துகின்றது. ளூயn ஏinஉநவெ னந Pயரட இசைக் கலை ஊடாக எமது மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகவும் நீதிக்காகவும் பெரும் பங்களிப்பை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அவர் தனது இசைப் பயணத்தில் புகழின் உச்சியை எட்டவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வாழ்த்துகின்றேன்.
இன்றைய தினம் ஆவண படம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட இருக்கும் இளையோர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். நீங்கள் தான் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி 'அறிவை' ஆயுதமாக பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்றைய நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொள்ளும் கார்த்திகேயன், பிரித்தானியாவில் இருந்து கலந்துகொள்ளும் சங்கீத், சயன், திவ்யா ஆகியோருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், இன்றைய நிகழ்வை தொகுத்து வழங்கும் அபிராமி லோகேஸ்வரன், தனா ஞானி ஆகியோருக்கும், குறிப்பாக எனக்கு தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை நேர காலம் பாராமல் செய்துவரும் லொரன்சோ, சௌஜயா ஆகியோருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் அனைவரும் பல சாதனைகளை நிலைநாட்டி பெரும் வெற்றிகளை வாழ்வில் பெறவேண்டும்.
அதேவேளை, நான் கடந்த மார்ச் மாதம் ஒழுங்கு செய்திருந்த மாநாடு மற்றும் இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்வதற்கு பல்வேறு வழிகளிலும் மகத்தான பணி ஆற்றியுள்ள பலரை நான் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன். தமது பெயர்களை வெளிப்படுத்தாமல் பல அற்புதமான பணிகளை அவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்கள் இந்த நிகழ்வின் பாடாத கதாநாயகர்களாக இருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக!

இறுதியாக இன்றைய ஆவணப் படத்தை தயாரித்த புயுவுநு என்ற நிறுவனம் பற்றி ஒரு சில வார்த்தைகள். இன்றைய ஆவணப் படம் போன்ற பல ஆவணப் படங்களையும் ஆய்வுகளையும் வெளியீடுகளையும் இன்றைய இந்த ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் 'வுhந புயுவுநு-யn ஐளெவவைரவந கழச சுநளநயசஉh in வுயஅடை யுககயசைள யனெ ர்நசவையபந' அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆய்வு நிறுவனம் மேன் மேலும் வளர்ந்து தாயகத்திலும், தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள புத்திஜீவிகளையும் தமிழர் அல்லாத ஏனைய மக்களையும் உள்வாங்கி 'ஆய்வு' என்ற அகிம்சை முறையின் ஊடாக எமது மக்களின் துன்பங்கள், துயரங்கள், வரலாறு, அபிலாiஷகள் தொடர்பிலான உண்மையையும் யதார்த்தத்தையும் விஞ்ஞானபூர்வமான முறையில் வெளிகொண்டுவருவதற்கு மகத்தான சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

அடுத்து நாங்கள் யாவரும் எதிர்பார்த்திருக்கும் திரு சம்பந்தன் அவர்களின் உரையை வேண்டி அவரிடம் நேரத்தை ஒப்படைக்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்

மூலப்பிரதியைப் பார்க்க கீழே உள்ள தலையங்கத்தைக் கிளிக் செய்யவும்.

தாய் நிலம் நில அபகரிப்பு

தாய் நிலம் நில அபகரிப்பு

எஸ் தில்லைநாதன்