posted 10th July 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 23.06.2026
மகாநதி தமிழ் சீரியலிலே இன்றுவரையான கட்டங்களாக, அதுவும் உயிருடனே உறங்கிக் கிடந்தன மாயைகளாக வெளியே கிளம்பின. Datingக்குக் கூட்டிச் சென்ற இடம் சென்னையிலுள்ள இவர்களின் வாழ்ந்த வீடு. காவேரியினுடைய நினைவுகளுக்கு சுரிதி கிடைத்திடுமா? உணர்வுகள் காவேரியின் கண்களினால் கண்ணீராக அவளின் கன்னத்தினை வருடி ஆறுதல் கூறி வழிந்தன.
கடைசி வரைக்கும் காவேரிக்கு எங்குதான் போகின்றோம் datingக்கு என்று தெரியாமல் விஜேய் கூட்டி வந்தான், தங்களது சென்னையிலுள்ள பிறந்து, வளர்ந்த வீட்டிற்கு. இதுதான் விஜேயின் இறுதியான முயற்சி என்று இதனைச் செய்வதற்குத் துணிந்தான்.
மங்கலான மாயைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகின. காவேரியின் கண்களுக்கு அவை நிஜமாக ஓடும் நிழல்படமாகுவதாகத் தெரிகின்றன.
வீட்டின் வாசலில் காலை வைத்ததும், ஏதோ உணர்வுகள் காவேரிக்கு உதித்தன. ஆனால், அதனை உணர்ந்தவளாய் இருந்தாள். ஆனால், அவற்றினை உடனே மறந்தும் விட்டாள்.
மாடியை நோக்கி விரைந்தனர், காவேரியும், விஜேயும். காவேரியின் கவலையான நாட்களையும் ஞாபகப்படுத்தின அந்த ஊஞ்சல். மெதுவான ஆட்டம் காவேரிக்கு மெருகூட்டியது. அவளின் நெஞ்சினை வருடியது. ஏதோ செய்தது காவேரியின் உடலிலும், உளத்திலும். ஆனால், அவளால் விபரிக்க முடியவுமில்லை.
காதலை ஓவியமாகக் கீறி வடிவு பார்த்த இடமெல்லாம், மீண்டும் இருவரையும் வரவேற்றதனை உணர்ந்தும் உணராமால் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்த காவேரி. அவளின் மாற்றத்தினை அவதானித்துக் கொண்டிருந்தான் விஜேய். இடையிடையே காவேரியின் கண்களில் மருகிய கண்ணீரையும் கண்டான். ஆனால், அதனைப் பற்றி காவேரியிடம் ஒன்றும் கேட்காமல் அமைதியைக் காத்தான் விஜேய்.
இறுதியாக, விஜேய் தாங்கள் வாழ்ந்த bedroom ற்குள் கூட்டிக் கொண்டு போனான். வெறுமையாக இருந்த அந்த அறையினுள் காவேரி போனதும் அவளது முகம் மாறியது. என்னத்தினையோ கண்டவள் போலவும், எதையோ கண்டு பயந்தவள் போலவும் காவேரியின் திகைப்பதிலிருந்து விஜய் உணர்ந்து கொண்டான். காவேரிக்கு ஏதோ இனம் தெரியாத மன உழைச்சலினைக் கொடுத்தது. கண்களில் இருந்து வந்த கண்ணீரை கண்களால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வார்த்தைகள் அவளின் வாயினுள் விக்கின. வெளியே வர மறுத்தன. உணர்வுகள் விழித்தன. விடை தெரியாமல் நின்றன. வாழ்க்கை ஒன்று தெரிந்தது. அது யார் என்று புரியாமல் ஏதோ உணர்த்துவதனை உணரும் அளவிற்கு அவள் மனம் ஒரு நிலையினினே இல்லாமல் தவித்தது. ஏனோ அது துடித்தது, புரியாமல் வாசல் படியினில் உட்கார்ந்தாள் காவேரி.
தாத்தாவுடன் கதைத்ததும், சார்மனக் கதிரையின் பக்கம் தானிருந்ததும் மெதுவாகத் தெரிந்தது. இதெல்லாம் ஏனென்று அதுவும் இப்போவென்று புரியாமல் தவித்தாள் காவேரி.
நினைவுகள் மெதுவாகத் திரும்புகின்றன. அவள் தலையோ விறைக்கின்றது. விஜேயின் முகமும், காவேரியின் முகமும் அவளுக்கு வெளிச்சமாகத் தெரிகின்றது.
இவையெல்லாம் ஏன்? இவ்வளவு காலமாக இவை எங்கு மறைந்திருந்தன?
இவற்றினை ஏன் விஜேய் காவேரியிடம் சொல்லவில்லை என்ற மறுபக்கத் தவிப்பு.
அப்போ அம்மு யாரு? நான் எப்படி இங்கே? எனக்கும் இந்தக் குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? நான் கல்யாணமானவளா? விஜேய் எனது புருஷனா? அம்மு எனக்கும், விஜேயுக்கும் பிறந்தவளா? ஏன் இவற்றினைப் பற்றி ஒருவரும் என்னிடம் சொல்லவேயில்லை? அப்போ விஜய் தனது மனைவி இறந்து விட்டாள் என்று சொன்னதன் அர்த்தம்?
இதெல்லாம் காவேரியின் மூளையினுள் ஓடிக் கொண்டிருக்கும் விடைதெரியாத வினாக்களாக ஒவ்வொன்றாக இடித்துக் கொண்டிருந்ததினைத் தாங்க முடியாமல் காவேரி தனது தலையினை அமுக்கியவளாய் வாசலில் உட்காரந்த வண்ணமாக, இறுக்கி மூடிய கண்களினுள் எல்லாவற்றினாயும் அடக்கியவளாய் குளப்பத்தில் இருந்தாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!