
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவுதினம்
அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் உள்ள தியாகதீபம் நினைவிடத்தில் இருந்து நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆரம்பமானது.
ஊர்தி பேரணி நல்லூரில் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இடத்துக்கும் நேற்று அஞ்சலி செலுத்த வசதியாக வந்தது. இதன்போது அங்கிருந்தவர்கள் அன்னை பூபதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகம் முழுவதும் பயணிக்கும் இந்த ஊர்தி அன்னை பூபதியின் உயிர்த் தியாகம் செய்த நாளை மறுதினம் மட்டக்களப்பை சென்றடையும். அங்கு அவரின் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)