
posted 24th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்களுடன் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் இலங்கை முஸ்லிம் மக்கள் நிற்பதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வன்முறைச் சம்பவமாக பலரும் நம்புகின்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி கத்தோலிக்க தேவாலயங்களுடன் முஸ்லிம்களும் துணை நிற்பதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில், 2022 ஜூலை 18 ஆம் திகதி வௌியிட்ட அறிக்கைக்கு அமைய, ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாருடன் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை நிறைவு செய்யவேண்டும் என முஸ்லிம் கவுன்சில் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் இனம் மற்றும் மதத்தைப் பாராது உடனடியாக நீதியையும் நட்ட ஈட்டையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பிணை வழங்கப்படவோ, விடுதலை செய்யப்படவோ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)