posted 6th January 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 01ஆம், 02ஆம், 05ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- Walking இல் சந்தித்த கிறிஷ்ணாவை வழிமறித்து மன்னிப்பு கேட்ட விஜேயும் காவேரியும்.
- விஜயின் கொம்பனியின் வீழ்ச்சியால் ஆட்பலம் இல்லாமல் தவிக்கும் Vijay Construction Company யானது வேலைக்கு ஆட்களை நியமித்துக் கொண்டிருக்கையிலே, விஜேயும் கிறிஷ்ணாவிற்கு ஒரு Job opportunity யினைக் கொடுத்தான்.
- பாட்டியின் மயக்கத்திற்கு காரணத்தைக் கண்டு பிடித்து நிவாரணம் பண்ணிய சிந்து. அவவுக்கும் இதனால் வீட்டிலிருந்தபடியே வேலையானது கிடைத்தது.
- கிறிஷ்ணாவின் வேலை ஆரம்பம் விஜேயின் கொம்பனியில் Civil Engineerஆக. கிறிஷ்ணாவை வேலை செய்ய விடாமல் இடைமறித்துக் குளப்பிக் கொண்டிருந்த அன்பு. அதுமட்டுமல்லாமல், விஜேயிடம் புகார் செய்த அன்பு.
- முதல் நாளிலே தனது வேலையினைத் திறம்படச் செய்த கிறிஷ்ணா, அன்புவின் இடறல்கள் இருந்தும். கிறிஷ்ணாவை வாழ்த்திய விஜய்.
மகாநதி - Mahanadhi - 01 - 05 .01.2026
- வீணான கிறிஷ்ணாவைப் பற்றிய முறைப்பாடுகளைத் தாண்டி கிறிஷ்ணா சாதிச்சுக் காட்டியபடியினால், விஜேய் அன்பை வேலையை விட்டுத் தூக்கி விட்டான்.
- காவேரிக்கான வளைகாப்பினைச் செய்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முத்துமலரும் தானும் பலகாரங்கள் செய்வதற்கு உதவுவதாக சாரதாவிடம் சொல்லிவிட்டா.
- சிந்துவின் கவனிப்பால் குடும்பத்தில் சந்தோஷம் மிகுந்தது. சிந்துவின் வேலையானது கங்காவையும் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.
- காவேரிக்கு புதுப் புடவையானது எடுக்கப் போகையிலே காவேரி வீட்டில் உள்ள எல்லோருக்கும் எடுக்கும்படி விஜேயிடம் காவேரி சொன்னதுமல்லாமல், கிறிஷ்ணாவின் வீட்டாருக்கும் எடுக்கலாமா என்று கேட்டு அவர்களுக்கும் புத்தாடைகள் எடுத்தார்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
கிறிஷ்ணாவின் வேலையானது ஒரு Civil Engineerஆக விஜேயின் கொம்பனியில் ஆரம்பமானது. வில்லனாக அன்பரசு தொடர்ந்து இடஞ்சல்களை கிறிஷ்ணாவிற்கு செய்தாலும், கிறிஷ்ணா அவற்றையெல்லாம் கணக்கெடுக்காமல் தனது focusஇலே கவனமாக இருந்தான். ஏனென்றால், கிறிஷ்ணாவிற்கு உள்ள குடும்பத்தின் பிரச்சனைகளாவன அவனின் வயசிற்கு மிகவும் அதிகம். அவற்றினைத் தாக்கு பிடிக்க வேண்டும் என்பது ஒரு காரணம். ஆனால், இவற்றினை விட கிறிஷ்ணா இயற்கையாகவே ஒரு hard worker என்பதனை கிறிஷ்ணா, விஜயுடனான ஆரம்ப சந்திப்பில் சொல்லியிருந்தாலும் அதனை முதல் நாளே நிரூபித்துக் காட்டியும் விட்டான். இதுதான் கிறிஷ்ணா.
பல நேரங்களில் வாழ்க்கையானது வலிக்கும். நம்மை வெறுக்க வைக்கும். கிறிஷ்ணாவின் வாழ்க்கையானது அவனது வயசில் காணாததெல்லாம் கண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றான். எல்லாம் தகப்பன் சந்தானத்தின் கடனினால்தான். சாரதாவிற்கோ வீடாவது ஒன்று இருக்கின்றது. ஆனால், முத்துமலரின் குடும்பத்திற்கோ ஒரு சொத்தையும் சந்தானம் கொடுக்கவில்லை. அவர்களுக்கென்று ஒன்றுமே இல்லை.
சந்தானம் இறந்த பின்பு, முத்துமலர் கூறியபடி அவர்கள் றோட்டிலேதான் நின்றார்கள் என்பது சத்தியமெனத் தெரிகின்றது. இப்படியாக ஆதரவற்று இருந்த முத்துமலரின் குடும்பத்திற்கு எந்தப் பெரிய சொந்தங்கள் அமைந்துள்ளன என்பதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கடவுள் நல்லவர்களை அப்படியே தூக்கிக் கொண்டுவந்து புனிதமான இடத்தினில் நாட்டுவார் என்பது இப்போ முத்துமலரின் குடும்பத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
முத்துமலரின் குடும்பத்தின் உண்மையான, நல்ல குணங்களை எடுத்துக் காட்டுவதனை இந்த சூழ்நிலை இயம்புவதாகத் தெரிகின்றது. அதாவது, கல்யாணிப் பாட்டி மயக்கமுற்று தரையில் விழுந்தது. வீட்டில் இருந்த அனைவரும் கலங்கிப் போய் விட்டார்கள். ஆனால், சிந்துவால் இது வெளிவர வேண்டும் என்பது அந்த கடவுளின் திட்டமே. எப்படி நர்மதாவிற்கு ஒரு கதையினை வைத்து கிறிஷ்ணாவை விஜேய் – காவேரியுடன் தெய்வம் கோத்து விட்டதோ அதே போலத்தான் இதுவும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.
சிந்துவின் அந்த குறுகிய கால நர்சிங் வேலையின் அனுபவத்தினால், கல்யாணிப்பாட்டிக்கு இரத்தத்தில் உள்ள சீனியின் அளவானது குறைந்து விட்டது என்பதை சரியாகவும், உறுதியாகவும் கண்டு பிடித்து, அதற்குரிய ஆரம்பச் சிகிச்சையினைச் செய்ய வைத்து வெளிக்காட்டியது அந்தத் தெய்வம். இதனால், சிந்துவிற்கு வீட்டில் இருந்து கொண்டு Nursing வேலை செய்யும் வாய்பானது அதே சம்பளத்துடன் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், அவளுக்கு இந்த வேலையானது பாதுகாப்பும் கூட.
இந்த வேலை வாய்ப்பால், முத்துமலரின் குடும்பத்தின் நல்ல குணமானது வெளிக் கொணரப்பட்டது. எப்போது விஜய் சிந்துவிற்கு இந்த வேலையினைக் கொடுத்தானோ அப்பவே, சிந்துவின் முகமும், முத்துமலரின் முகமும் மலர்ந்தன. சிந்துவால் அந்த உதவியினை நன்றியாக எப்படிச் சொல்லலாம் என்று சிந்திக்காமலே அனைவரின் முன்னாலும் விஜேயின் காலில் விழுந்தாள் சிந்து.
காலில் விழுவது என்பது இலேசான காரியமல்ல. அது, வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்த கஷ்டமானது அவர்களைப் பிழிந்தெடுத்தெடுத்த விதமிருக்கே அந்த வலியின் கொடுமையின் வெளிப்பாடுதான்.
விஜேயின் நிலையில், சிந்துவைப் போன்றவர்களைப் பார்த்து, காலில் விழும்போதான அனுபவம் சிலருக்கு வாழ்க்கையில் இருந்திருக்கலாம். அந்த சமயம் விஜேயின் மனம் துடித்திருக்கும் சிந்துவைப் பார்த்து. இந்த அனுபவம் உங்களுக்கு இருந்தால் எங்களுடன் பகிருங்கள்.
கிறிஷ்ணாவிற்கான வேலைக்குரிய appointmentஆனது உறுதியானது. வேலையினைப் பாரமெடுத்த கிறிஷ்ணா. தனது வேலையினை மனது நிறைவாக செய்ய உறுதி பூண்டான் கிறிஷ்ணா. இது அவனுக்குக் கிடைத்த வேலையென்பதால் அல்ல. இந்த குணமானது கிறிஷ்ணாவின் இயற்கையாக உள்ளது. கிறிஷ்ணாவின் வருகையானது அன்பரசுவிற்கு வெளியேற வேண்டிய நிலையுமாச்சு. கேடு நினைப்பவருக்கோ இதுதான் நிலைமை என்பது அன்பரசின் வாழ்க்கையின் வடிவத்திலிருந்து அறிந்தும், புரிந்தும் கொள்ளலாம்.
காவேரிக்கான வளைகாப்பிற்கான ஆயத்தங்கள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரதா உறவுகளுக்கு அறிவித்துக் கொண்டிருக்கையிலே, தேவையான பலகாரங்கள் செய்வதிலும் ஆர்வமாக இருக்கின்றா. இந்த அவசரத்திற்குள்ளே விஷயத்தை அறிந்த முத்துமலர் தனது பங்கினையும் தருவதாக சாரதாவிடம் சொல்லியது சாரதாவிற்கு அதிருப்தியினை உண்டாக்கியது.
இத்துடன், காவேரிக்கு புது உடுபுடவையானது எடுப்பதற்காக விஜேய் தனது நண்பனின் புடவைக் கடைக்குக் கூட்டிச் சென்று புடவையினை எடுக்கையிலே, காவேரி வீட்டிலுள்ள அனைவருக்கும் உடுப்புகள் எடுக்கும்படி விஜேயிடம் கூறுகையில், கிறிஷ்ணாவின் குடும்பத்திற்கும் எடுப்போமா என்றும் கேட்டுக் கொண்டாள். அதற்கும் சம்மதித்தான் விஜய்.
இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகின்றது. அதாவது, சாரதாவின் குடும்பமும், முத்துமலரின் குடும்பமும் ஒன்று சேரும் காலம் நெருங்குகின்றதோ?
வளைகாப்பிற்கு வரவுள்ள உறவுகளுக்கு, முத்துமலரின் குடும்பத்தினைப் பற்றி சாரதாவை நோக்கி வரும் கேள்விகளே பிரதான செய்தியாக வந்துவிடுமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!