posted 28th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சம்யூத்தா தயாரித்த மானே தேனே என்ற சிபீயைப் பற்றின ஏ.வீ.யானது, முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட ஜனாம்மா, சிபீ, தமிழ் உட்பட அனைவரின் முன்னிலையிலும் மிகவும் பிரமாதமாக இருந்தது.
- சம்யூத்தாவிற்கான கச்சேரி இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது. பொறுத்த சமயத்தில், முக்கியமான நேரத்தில் வைத்தாளே ஆப்பு. ஆனால், சிபீக்கு, சம்யூத்தா என்னதான் செய்தாலும் கோபமே வராதே. ஆனால், தமிழுக்கு வருமே.
- அழகான ஜோடி, அம்சமாக இருப்பதாக வர்ணித்த சேது யாருடைய கண்ணும் படும் முன்பே நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தான்.
- மனதினில் உள்ளவரின் வதனம் அந்த நிலாவினில் தெரியும் என்பது சிபீயின் வீட்டில் security ஆக வேலை பார்ப்பவரின் ஊர் வழக்கம் என்று வியப்பினை அறிந்து கொண்ட சிபீ.
- சல்லடையினால் சிபீ சந்திரனைப் பார்த்ததும் சிபீயின் மனைவி தமிழின் அழகான முகமோ தெரிந்தது. இரண்டாம் முறையும் பார்த்தான். அதே தமிழின் முகம்தான் தெரிந்தது.
- ஆனால், இன்றோ, சிபீ தமிழை மூன்று இடங்களில் கண்டான். இதெல்லாம், அவன் தனது மனத்தின் பிரமை என்று நினைத்து அவற்றையெல்லாம் ignore பண்ணி விட்டான்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு | Varisu | 20.12.2025
வாழ்க்கையில் நடப்பன எல்லாம் hallucination என்று நினைத்தால், பின்பு வாழ்க்கையே hallucination ஆகி விடும். இப்படி யாரிடமும் சொன்னால், குறிப்பாக நம்ம ஆட்களிடம் சொன்னால், அவர்கள் நமக்கு ஒரு special nameஇனைத் தந்துவிடுவார்கள். கவனம்.
சிபீயின் வீட்டிலே securityஆக வேலை பார்ப்பவரும், அவரின் மனைவியும் அவர்களின் கிராமத்துக் culture என்று கூறினார்களே அதனை ஒரு நாளும் கொச்சப்படுத்த முடியாதே!
தாய் இருந்த இடத்தில் தாரமாக இருந்த தமிழைக் கண்டான் சிபீ. ஒரு கட்டம் மட்டும்தான் தாய் கவனிப்பாள். பின்போ, வாழ்க்கை பூராகவும் மனைவிதான் வாழ்க்கையிலே சேர்ந்து ஓடுவாள். கணவன், எப்பவாவது மனைவியானவளைப் பாரமாக நினைத்தாலும், தாரமானவள் தன் கணவனை ஒருபொழுதும் அவளுக்குப் பாரமாக நினைக்கவே மாட்டாள். அதுதான், குடும்பத்தினையே தாங்குபவள் தாரம் என்று கூறுவதோ.
தமிழின் நினைவுகளோ சிபீயை வாட்டின. தமிழோ சிபீயின் மனதினில் ஒய்யாரமாக, பூரணமாக குடி கொண்டாள். மனம் பூராகவும் வியாபித்து விட்டாள். ஆனால், அது சிபீக்குத்தான் விளங்கவில்லை. இல்லையில்லை விளங்க மாட்டேன் என்று சிபீ அடம்பிடிப்பதாகத்தான் தோன்றுகின்றது.
சம்யூத்தா அடியாட்களுடன் பேரம் பேசியது ஒருநாள் பிடிபடுவான் என்பது போல இன்று அகப்பட்டாள். மிகவும், கோபமாய் அவர்களைத் திட்டிக் கொண்டிருந்த சமயம், அந்தத் திட்டலை சிபீயும் கேட்டான். இதனால், சிபீக்கு, இன்னமும் சந்தேகம் சம்யூத்தா மேலே அதிகரித்தது. இவள்தான் தமிழைக் கொல்லுவதற்கு அடியாட்களை அனுப்பினாள் என்று ஊகித்த சிபீ, தமிழுக்கோ அல்லது தன் குடும்பத்திற்கோ ஏதாவது தீங்கு நடத்துவதற்கு நீ நினைத்தாலே உன்னை உன்ர ஊருக்கே அனுப்பி விடுவேன் என்று கடைசியும், முதலுமான எச்சரிக்கையினைக் கொடுத்தான் சிபீ.
இதென்ன புதிதா சம்யூத்தாவிற்கு? எச்சரி்ப்பதனை விட சிபீயால் தன்னைப் பொறுத்தவரை ஒன்றும் செய்ய மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சம்யூத்தாவிற்கு.
சிபீ கொடுக்கும் எச்சரிக்கையின் எண்ணிக்கையானது கூடிக் கொண்டே போகின்றதே ஒழிய, ஒரு உருப்படியான நடவடிக்கை சிபீ எடுப்பதாக இல்லை. ஆனால், வெண்பா தனது வேலையினைக் கட்சிதமாக செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்கின்றாள்.
சிபீ, சம்யூத்தாவிடம் சொன்னது, உனக்கு மட்டும்தான் தமிழ் கொம்பனியில் தனிய இருப்பது தெரியும் என்று. தமிழிலே மிகவும் கோபமாக உள்ளவன், என்னென்று தமிழின் அசைவாட்டத்தினை எல்லாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றான்.
ஆனால், வெண்பா தமிழுக்கு அன்று கோப்பி போட்டுக் கொடுத்துவிட்டுப் போகையிலே, சம்யூத்தா அங்கு வேலை செய்து கொண்டிருந்ததனை அவதானித்தாள். ஆனால், சம்யூத்தாவோ வெண்பாவைக் கவனிக்கவில்லை. இப்படியான கவலையீனம்தான், பிழைகளுக்கு முக்கிய காரணமாகவும், மூலதனமாகவும் இருக்கின்றது.
ஒருவர் எங்குதான் இருந்தாலும், தன்னைச் சுற்றி என்னென்ன நடக்கின்றது என்பதனை அவதானிக்க வேண்டும். சம்யூத்தா அன்று வெண்பாவை அவதானித்திருந்தால், இப்போ சிபீயின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம். அதற்காக சம்யூத்தா நல்லவள் என்று நியாயப்படுத்த முடியாது.
நிகழ்ச்சியானது என்னவோ அமைதியாகத்தான் தொடங்கியது. ஆனால், அறிமுகமானது அசிங்கமாகி விட்டது. சம்யூத்தாதான் இந்த ஏ.வீ.யினைக் காட்டும்படி சொன்னது. மானே தேனே என்று புகுத்தினது சம்யூத்தாதான். ஆனால், சம்யூத்தா சிபீக்கு கெட்ட பெயர் வரும்படி செய்யமாட்டாள். ஆனால், இந்த ஏ.வீ.யில் வெண்பாவின் முக்கிய பங்கு இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், வெண்பாவின் முக்கிய நோக்கமோ, முதன் முதலில் சம்யூத்தாவிற்கு ஆப்பு வைத்து, அவளை வெளியே கலைப்பதுதான்.
அப்படி சம்யூத்தா வெளியில் போனால், இனி வரும் பிழைகளுக்கு வெண்பாதானே மாட்டுவா. ஆனால், அதில்லை, வெண்பாவின் குறி. அடுத்ததாக, தமிழை வெருட்டுவது, வீட்டை விட்டு கலைப்பது. அதிலேயும், சம்யூத்தா இல்லாவிடில், இனி வரப்போகும் பிரச்சனைகளுக்கு யார் காரணமாக இருக்கலாம் என்ற கேள்வியானது தொக்கு நிற்கின்றதல்லவா?
சமுயூத்தாவையும் கலைத்து, தமிழையும் துரத்தி விட்டால், அதன் பின்பு, தான்தான் இந்த சாம்றாஜ்ஜியத்திற்கே றாணி என்பது வெண்பாவின் கனவு. அதுமட்டுமா, அதன் பின்பு சிபீயைத் தான் கல்யாணம் பண்ணி ஜனாம்மாவின் கதிரையில் உட்காருவதும், எல்லாரும் தனக்குக் கீழே என்ற திட்டமும்தான்.
வெண்பாவின் அப்பா, கணேஷன் இப்போ தமிழிடம் மாட்டி உள்ளது வெண்பாவிற்கும் தெரியாது. மற்றவர்களுக்கும் தெரியாது. வெண்பா ஆட்டத்தினை தொடங்க முன்பே தமிழ் வைப்பாள் செக் ஒன்றினை. ஜனாம்மாவின் குடும்பத்தினையே எல்லா பெருச்சாளிகளிடமிருந்தும் காப்பாற்றுவாள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!