மருந்து இல்லாமல் மலசிக்கலுக்கு பாய் (Bye) சொல்லுவது எப்படி?

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
மருந்து இல்லாமல் மலசிக்கலுக்கு பாய் (Bye) சொல்லுவது எப்படி?

நான் கூறும் இந்தச் சிறு குறிப்பை கவனமாகவும் ஆறுதலாகவும் முழுவதுமாகவும் வாசித்துப் பலன் பெறுங்கள்.

நான் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. மிக முக்கியமாக யாருக்காவது எந்த உணவிலாவது அலேஜி - அதாவது, உணவோ அல்லது உணவின் பகுதிகள் ஒத்துவராத தன்மை (Allergy) இருக்குமென்றால் அந்த உணவை உண்ணாமல் தவிர்த்துக் கொள்ளவும்.

நான் இங்கு கூறப்போவது எவ்வாறு மலச்சிக்கலில் இருந்தும், அதன் அகோரப் பிடியிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதென்று மட்டுத்தான். இது தவிர, அதன் வகைகள் என்ன? அதன் உடற்கூறியல் (Anatomy) என்ன? என்ன மருந்துகள் பாவிக்கலாம்? என்றல்ல. மாறாக, நான் கூறுவது மிகவும் சாதாரண வழிமுறைகளாகும். அத்துடன், இந்த அறிவுரை சாதாரணமாக ஏற்படும் மலச்சிக்கலுக்கு மாத்திரமே, ஏதாவது வருத்தங்களுடன் கூடிய மலச் சிக்கலுக்கு அல்ல. இந்த வழி முறைகளைப் பயன்படுத்தி மலச்சிக்கலினை இல்லாமல் ஆக்கலாம் அல்லது மலச்சிக்கலினால் ஏற்படும் அசௌகரியங்கள் வராமல் தடுக்கலாம் அல்லது அசௌகரியங்களின் கொடூரத்தின் வாதைகளைத் குறைத்துக் கொள்ளலாம் அல்லது வாதைகளைக் கூடவிடமால் தவிர்த்துக் கொள்ளலாம்.

இம் முறைகள் மூலம்

1) எவ்வாறு மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்
2) எவ்வாறு மலச்சிக்கலை மேலும் கூடாத வண்ணம் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம்
3) மேலும் மலச்சிக்கல் இருந்தால் வேறு என்ன நோய்களுக்குரிய காரணி அல்லது காரணிகள் அதிகமாகும், அத்துடன் அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பதாகும்.

மலச்சிக்கல் சிலசமயங்களில் அல்லது எப்பவும் அனேகமான பேருக்கு ஆரோக்கிய அசௌகரியத்தையும், இன்னமும் சிலருக்கு நீடியகால பிரச்சனைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதனை நாங்கள் அறியாமல் இல்லை. நாங்கள் எமது வாழ்க்கையில் ஒரு நாளாவது மலச்சிக்கலால் அவதிப்பட்டிருப்போம். அந்த ஒருநாளே நமக்குப் பெரிய அசௌகரியத்தைக் கொடுத்திருக்கும். இப்படியாக ஒருநாள் கஷ்டத்தால் அவதிப்பட்ட எமக்கு அதன் வேதனையை பொறுக்க முடியாதது என்றால் தினம் தினம் வேதனையை அனுப்பவிப்பவர்களுக்கு அது ஒரு நரக வேதனையாகத் தான் எண்ணத்தோன்றும். ஆனாலும் சிலருக்கு அது போகப்போக பழக்கப்பட்ட பிரச்சனையாகிவிடும். அதாவது எப்படி எமக்கு நமது நாளாந்த பிரச்சனைகள் போகப் போக ஒன்றுமே இல்லாததொன்று போலத் தோன்றுகின்றதோ அதேபோல இதுவும் அவர்களுக்குப் பழகிவிடும்.

இப்படிப் பிரச்சனைகளை நாமே அதெல்லாம் பழகிப் போய்விட்டது என்று சொல்வதை முதலில் நிறுத்துவோம். அந்தப் பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கக் கூடாது.

மலச்சிக்கல் என்றால் துப்பரவாக மலம் கழிக்க முடியாமல் போய் விட்ட நிலைமை மட்டுமல்ல. மாறாக, வழமையை விட குறைவாக மலம் போயிருந்தாலும் அதுவும் மலச்சிக்கல் தான். அத்துடன் ஒவ்வொரு நாளும் மலம் கழிக்காமல் இரண்டு நாட்களுக்கொருக்காக, மூன்று நாட்களுக்கொருக்காக அல்லது கிழமைக் கொருக்காக மலம் கழித்தாலும் அதுவும் மலச்சிக்கல்தான். மேலும், சாதாரணமாக போகும் மலம் கூட கொஞ்சம் இறுக்கமாகப் போனாலும் அதையும் மலச்சிக்கல் என்று தான் நாங்கள் சொல்வோம்.

சாதாரணமாகவே மலச்சிக்கல் உண்டாகிறதென்றால், அந்த நிலமை ஏன் வந்தது என்று சிந்திக்கத் தோன்றுமல்லவா. அவ்வாறு உங்களுக்குச் சிந்திக்கத் தோன்றுகையில் இவ்வாறான கேள்விகள் உங்கள் மனதினில் உதித்ததா? அதாவது;

i) நாம் தினமும் தேவைக்கு அளவான தண்ணீர் குடித்தோமா?
ii) நாம் ஒரு நாளுக்குத் அளவான எல்லாவிதமான சத்துக்கள் கொண்ட உணவினை உண்டோமா?
iii) நேற்று அல்லது முதல் நாள் நன்றாக மலம் கழித்தோமா?
iv) கடும் கோப்பி அதிகமாக குடித்தோமா?

இப்படி பல கேள்விகள் தோன்றி மனதை உழட்டிக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் போது மலச்சிக்கலால் வயிறு கொஞ்சம் ஊதியது போல அசெளகரியமாக இருக்கும். வாயு அதிகம் போகும். அது சிலசமயம் ஏப்பமாகவும் போகும். இதனால் கூட சேர்ந்து உள்ளவர்களுக்கு இம்சையாக இருக்கும்.

முதலில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன?

  • எப்போது மலம் கழிக்க வேண்டுமென்று எமக்குத் தோன்றுகின்றதோ அப்பவே தாமதிக்காமல் மலம் கழித்துவிட வேண்டும் - தாமதிப்பது மேலும், மலச்சிக்கலை உண்டாக்கும். இதைப்போலத்தான் சலம் (சிறுநீர்) கழிக்க வேண்டுமென்று தோன்றுதோ உடனே சலம் கழித்து விட வேண்டும்.

இவ்வாறான வெளிக்குப் போகவேண்டியவற்றை உடனுக்குடன் போக வைப்பதனால் நாம் எமது உடலுக்கு உதவிசெய்கின்றோம். அதனால் எமது உடல் நல்ல சுகாதாரத்துடன் இயங்கி நம்மைக் காப்பாற்றுகின்றது.

இவற்றை நாம் உடனுக்குடன் செய்யாது விட்டோமென்றால் சலமும், மலமும் எப்போது போகாதா என்று முக்கி முக்கி அவஸ்தைப்பட வேண்டிவரும். இப்படியான அனுபவம் ஒரு சிலருக்கு இருக்குமென்று நினைக்கின்றேன்.

நாம் மலம் போகாமல் அடக்கி வைத்திருந்தோமென்றால் அது மேலும் மேலும் கடினமாகி வெளியில் போகமுடியாமல் குடல் உள்ளேயே இருப்புக் கொண்டுவிடும். அப்போது மலம் கழிக்கப் போகவேண்டும் போல இருக்கும். ஆனால் போகாது. இப்படியாக அவதிப்படும் போது நாம் என்னென்ன முறைகளைப் பாவித்திருப்போமென்று நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது அவரவர்களி்ன் கவலையீனத்தினாலும், அசட்டைத்தனத்தினாலும் தாங்களாகவே தேடிக்கொண்டது.

இவ்வாறான கவலையீனம் அல்லது நமது உதாசீனம் எவ்வாறான கஷ்டமான நிலைமைக்கு நம்மைத் இட்டுச் செல்லுமென்று நாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டோமல்லவா?

எனவே, எந்தப் பிரச்சினைகளும் வந்தப்பிறகு அல்லது அவை தலைக்கு மேல் போன வெள்ளம் போலான பின்பு நடவடிக்கைகளினை எடுப்பது பிரயோசனமுமில்லாததுபல்லாமல் வீணாண கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலையாகியும்விடும்.

எனவே நாங்கள் முன்னேற்பாடாக, எவ்வாறு இதனைத் தடுக்கலாம் என்று திட்டமிட்டு மலச்சிக்கலைத் தவிர்க்க முயற்சிப்போம்.

இதற்குப் பலவிதமான இயற்கை முறைகள் உள்ளன.

  • முதன் முதலாகச் செய்ய வேண்டியது என்ன வென்றால், எப்பெப்போது மலம் கழிக்க நமக்கு உணர்வு வருகின்றதோ அப்பப்போது மலம் கழித்திட வேண்டும்; ஏதாவது வேலை இருந்தால் அந்த வேலையை கொஞ்ச நேரம் பின் போட்டு விட்டு அதை அடக்காமல் உடன் செய்ய வேண்டும்.
  • இரண்டாவதாக, வெகு லாபகரமான முறை என்னவென்றால் தண்ணீர் குடிப்பது. ஒரு நாளுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது. அதாவது, ஒருநாளைக்கு 6 தொடக்கம் 8 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்கலாம். நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு வெட்க்கை காலங்களில் அதிகமான அளவு தண்ணீரும், குளிர்காலங்களில் குறைவான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டிவரும். அது நமது உடம்பின் தேவையைப் பொறுத்து நமக்குத் தேவைப்படும்.

வெட்க்கைக் காலத்தில் வியர்வை மூலம் நீரை நாங்கள் உடலிலிருந்து இழப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால், குளிர் காலங்களில் வியர்வை மூலம் தண்ணீரை இழப்பது மிகவும் குறைவாக இருப்பதால் குடிக்க வேண்டிய தண்ணீரின் குறைவாக இருக்கும். ஆனால் வெட்க்கை காலத்தில் சலம் மூலம் இழக்கும் தண்ணீரின் அளவை நமது உடல் தானாகக் குறைத்துக் கொள்ளும். அதேபோல குளிர் காலத்தில் சலம் மூலம் இழக்கும் நீரின் அளவு கூடுதலாக இருக்கும். இது உடலின் தானியங்கு முறையினால் எவ்வாறு காலநிலைக்கேற்ப உடலின் உள் அளவுகளைச் சமப்படுத்த வேண்டுமோ அது தானாகவே நடைபெறும்.

  • அடுத்த முறையானது - நமக்கு வீட்டில் கிடைக்கக் கூடிய பழங்களையும், மரக்கறி வகைகளையும் உண்ணல்.

i) வீட்டில் கிடைக்கக்கூடிய பழங்களாகிய வாழைப்பழம், பப்பாசிப் பழம் என்பவற்றை சாப்பிடலாம். ஆனால், நோய் அல்லது நோய்கள் காரணமாக உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் அதற்குரியவாறு பழங்கள் அளவுடன் சாப்பிட வேண்டும்.

ii) சாதாரணமாக வீட்டிலுள்ள கீரைவகைகளான, அகத்தி, முருங்கை, குறிஞ்சா இலை போன்றவற்றை சாதாரமாக நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைவகைகளில் நார்வகை அதிகம் உள்ளது. இந்த நார்வகை நமது உடலில் சமிபாடடையாத உணவின் பகுதி. உடலில் சமிபாடடையாத ஒரு உணவு வகையாக இருந்தாலும் அது நம் உடலுக்கு நன்மையைத் தான் செய்கின்றது.

எவ்வாறு சமிபாட்டையாத நார்வகையானது எமது உடலுக்கு நன்மை செய்கிறதென்றால், நமது பெருங்குடலினுள் கடைசியாக வந்தடையும் உடலால் உறிஞ்சியபின் உள்ள சக்கை உணவானது, இந்நார்வகைகியினால் மலத்திற்கு ஒரு வகையான பெருமலைக் கொடுக்கின்றது. இதனால், இறுதியாக மலமாக சரிவர குடலினுள் அசைந்து வெளியேறுவதற்கு இந்த நார்வகை உதவுகிறது.

முக்கியமான முறையாவது;
பொறிஜ் என்ற ஒருவகை உணவு. இந்த உணவு மேலை நாடுகளில் காலை உணவாக உண்பார்கள்.இதை எப்படி நமது பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று உங்கள் மனதில் எழலாம்? இந்த உணவு வெகு இலகுவாக நமது மலசிக்கல் பிரச்சனையிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதில் எந்த விதத்திலும் ஐய்யப்படத் தேவையில்லை. அதற்குத் தயாரிக்கும் முறை ஒன்று உண்டு. அதுவும் இலகுவானது ஒரு முறையாகும்.

தயாரிக்கும் முறை;

(இதில் சொல்லப்பட்ட அளவை நீங்கள் கட்டாயமாக எடுக்க வேண்டுமென்றில்லை. மாறாக, கண்ணளவு, கை அளவினை நீங்கள் பாவித்துக் கொள்ளலாம். ஏனென்றால், நான் எப்பவும் இந்த முறையைத்தான் பாவிக்கின்றேன்.)

ஒரு பாத்திரத்தில் ஒன்டரை கிளாஸ் தண்ணீர் எடுத்து அடுப்பினில் சுடவைக்கவும். நன்றாக்க கொதித்த பின்பு 200 கிராம் பொறிஜைப் போட்டு நன்றாகத் துளாவ துளாவிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு அளவு நெருப்பில் வேகவைக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் பொறிஜ் அடிபிடித்துவிடும். தண்ணீர் போதாவிட்டால், கொஞ்சம் கொதிநீர் கலந்து பொறிஜினை நன்றாக அவிய விடவும். பொறிஜ் நன்றாக அவிந்ததும் பசுப்பாலை விட்டு நன்கு தொடர்ந்து துளாவ வேண்டும். பால் நன்றாகக் காச்சுப் பட்டுவிட்டதென்று பால் ஒரு பக்கத்திலிருந்து நுரைத்துக் கொண்டு வருவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதற்குப் பிறகும் இரு நிமிடங்கள் வரை சுடவைக்கவும். அப்போ பொறிட்ஜ் நன்றாக்க காச்சுப் பட்டு விட்டதை நீங்கள் ஒரு அளவுக்கு பசை மாதிரி வருகிற தென்றதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இப்போது பொறிஜ் தயாராகி விட்டது. உடனே பொறிஜை ஒரு சாப்பிடும் பாத்திரத்தில் போட்டு இளம் சூடு ஆறும் முன்பே சாப்பிட்டு விடவும். சாப்பிட்டு முடித்ததும் 6 தொடக்கம் 8 மணித்தியாலத்தினுள் நல்ல சுகமாக இறுக்கமில்லாமல் மலம் கழிக்க முடியும்.

இவ்வாறு காலையில் சமைக்க வசதியில்லாதவர்கள் (குறிப்பாக வேலைக்குப் போகின்றவர்கள் பொறிஜினை இரவு ஆகாரமாகக் உண்ணலாம். அவ்வாறு உண்பதனால் மறுநாள் காலை மலம் இறுக்கமாக இல்லாமல் சுகமாகப் போய் உங்களுக்கு நல்ல ஆறுதலைக் கொடுக்கும்.

இவற்றை நாம் ஒழுங்காகச் செய்தோமென்றால் நம்மிடம் உள்ள மலச்சிக்கல் பட்டென மறைந்துவிடும். எந்த விதமான பக்க விளைவுகளோ, அசௌகரியமோ ஏற்படாது.

பொறிட்ஜின் நன்மைகளாவன:

பொறிட்ஜ் இரத்தத்திலுள்ள கொலஸ்ரறோலைக் குறைக்கும்
பொறிட்ஜ் இரத்தத்திலுள்ள சீனியின் அளவைக் குறைக்கும்

மலச்சிக்கலில் உள்ள சிக்கல்கள் என்ன?

  • மூலம் (Piles) படிப்படியாக வெளியில் தள்ளும்
  • இப்படித் தள்ளும் மூலம் (Piles) படிப்படாயாக பெரியதாகும். அசௌகரியமும் உண்டாகும்
  • இரத்தம் ஆரம்பத்தில் மெல்லிய கீறாக மலத்தில் இருக்கும். பின்பு படிப்படியாகக் கூடி இரத்தமாகக் கொட்டும். இதனால் இரத்தச் சோகை உண்டாகும்

இப்படி உண்டாவதால் பலவிதமான மருத்துவ தீர்வுக்குள் நாம் ஆளாக நேரிடும்

எனவே இந்த அசௌகரியம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நான் கூறியவற்றைக் கொஞ்சம் செய்து பாருங்களேன்.

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 31.10.2025

Varisu - வாரிசு - 31.10.2025

Read More
Varisu - வாரிசு - 30.10.2025

Varisu - வாரிசு - 30.10.2025

Read More
Mahanadhi - மகாநதி - 29 - 30.10.2025

Mahanadhi - மகாநதி - 29 - 30.10.2025

Read More
Varisu - வாரிசு - 29.10.2025

Varisu - வாரிசு - 29.10.2025

Read More