
posted 6th October 2021
சில நாடுகளில் 12 - 19 வயதுடைய பிள்ளைகளுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்ற வேளையிலே மற்றும் சில வளரந்த நாடுகள் ஒரேயொரு தடுப்பூசியைப் போட விரும்புவதற்குக் காரணம் தடுப்பூசியின் பாதகமான விளைவுகளே.
அந்த விளைவுகளாவன,இருதயத்தில் உண்டாகும், மயோகாடைற்றிஸ், பெரிகாடைற்றிஸுமாகும். இந்த விளைவுகள் மிக மிக அரிதானதொன்றாகும். நல்ல விஷயம் என்னவென்றால், இந்தத் தடுப்பூசி போட்ட பின்பு இந்த பாதகமான விளைவினால் இறந்தவர் ஓருவரும் இல்லை என்பதாகும்.
இவ்வாறாக இத்தடுப்பூசியினால் வரும் பாதகமான விளைவுகளுக்கு பெற்றோர் இத்தடுப்பூசியைப் பிள்ளைகளுக்குப் போடத் தயங்குவதற்குக் காரணம் இந்தத் தடுப்பூசியைப் பற்றிய காலதாமதமான பாதக விளைவுகளைப் பற்றிய போதிய ஆராய்சிகள் செய்யப்படாததேயாகும்.
இந்த பாரிய இதயத்தில் ஏற்படக்கூடிய நோய்களாவன ஆண் பிள்ளைகளில் பெண்பிள்ளைகளைவிடக் அதிகமாக தாக்கத்தே உண்டாக்கும் என்பது ஆராய்சிகளின் மூலமாகது தெரியவந்துள்ளது.