
posted 2nd August 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த மகாநதி சீரியலின் றிவியூவில் விஜய் – காவேரியின் கொண்றாக்ட் கல்யாணம் முடிவிற்கு வந்ததாக காவேரியின் குடும்பத்தவர் கண்ணால் கண்ட பின்பு, காவேரியின் குடும்பத்தார் விஜேயை அடித்துவிட்டு காவேரியைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு போய் விட்டார்கள். இந்த மூவானது காவேரியின் வீட்டாருக்கு ஒரு பெரிய சவாலாக அமையலாம் என்பதனைத் தொடரும் இந்த றிவியூவில் கேட்டு மகிழுங்கள்.
கொன்றாக்ட் கல்யாணம் முடிவுக்கு வந்ததும் காவேரயின் குடும்பத்தின் மேல் ஒரு பேரிடியாகவே விழுந்தது. ஆனால், அக் கல்யாணமானது முடிவிற்கே வரவில்லை என்பதும், காவேரிதான் தன் வாழ்க்கைத் துணைவி என்றும், அவள் இல்லாமல் தான் இல்லை என்றும் விஜேய் முடிவெடுத்து எவ்வளவோ காலமாயிற்று. என்ன, இந்த கல்யாணத்தினை ஒரு திறிலாக விஜேய் செய்ய நினைத்தது ஒரு குற்றமா? விஜயினுடைய உண்மையான, உள்ளே மறைத்து வைத்துள்ள அன்பிற்கு கிடைத்த பரிசினை காவேரியின் தாய் சாராதா கொடுத்தாபாருங்க, அதுவா - ஏன்யா உனக்கு நாங்கள் என்னதான் செய்திற்றோம்? ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என்று வளர்ந்ததிலிருந்து வளராததுகள் வரை விஜேயை கொட்டித் தீர்த்து விட்டனர். அவர்கள் பாவித்த வார்த்தைகள் ஒரு limit ஐத் தாண்டி விட்டன. இது தேவைதானா விஜயுக்கு?
குமரன், அவர்தான் தையல் கடைக்குள்ளே சிவனே என்றிருந்தவரை சினிமா உலகிற்கே அறிமுகப்படுத்தி, ஒரு மனிதனாகப் பெரிப்பித்துக் காட்டி, ஒரு பெரியவனாக்கி விடுவோம் என்றும் brother, brother என்று உரிமையோடு கூப்பிட்ட விஜயினுடைய சட்டயைப் பிடித்து அடித்துத் தள்ளிய குமரன் வரை உள்ளவர்களை எந்தக் categoryயில சேர்த்துக் கொள்ளுவது?
மகாநதி - Mahanadhi
உங்களுக்காவது புரியுதா? என்னென்றுதான் விஜய் செய்த எல்லா நன்றிகளையும் மறந்து உடனே கையையும், வாயையும் நீட்டுறாங்களோ தெரியாது? அப்படி உன்னுடைய மச்சினிச்சியுடைய வாழ்வு என்றால், நீ என்ன செய்திருக்கணும்? ஒப்பறேஷனுக்கு உன்ர தலையையாவது அடைமானம் வைத்தாவது அந்தக் காசினைக் கட்டி இருக்கணுமல்லவா? அல்லது, ஆப்பறேஷன்தான் நல்லாக முடிஞ்சுவிட்டதுதானே, அதற்குரிய காசை இப்பவாவது கொடுக்க யாரும் நினைத்தார்களா? இல்லையே!
சரி, எத்தனையோ உதவிகளை விஜய் செய்திருந்தாலும் – மகளுடைய வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளதற்கும், காவேரியின் குடும்பத்தின் கஷ்டமான நிலையினை பலவீனமாகப் பாவித்ததாக விஜய் மேலே குற்றம் சாட்டினார்கள் சாரதாவின் முழுக் குடும்பமுமே. அவர்களும் மானத்தோடும், கௌரவத்தோடும், காவேரியின் தகப்பன் உயிரோடிருக்கையில் வாழ்ந்தவர்கள்தான். பொல்லாத காலம் என்று காலத்தில் பழியினைப் போடமுடியாது. கூட இருந்தவர்களால் வஞ்சகம் தீர்க்கப்பட்டது – அதுதான் சரியான உள்ளடக்கம்.
சாரதாவின் குடும்பமோ விஜயின் குடும்பம் சொல்லப்போகும் எதையும் கேட்கத் தயாராக இல்லை. அவர்களோ கத்திக் குளறி, மரியாதையே இல்லாத குடும்பதாதார் போன்று சுப்பராக நிரூபித்துக் கொண்டிருந்தனர். இதெல்லாம் தேவைதானா விஜயிற்கு?
தகப்பன் இல்லாமல் 4 பெண்பிள்ளைகளையும் இந்த உலகத்திலே வளர்த்தெடுப்பது என்பது கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாததொன்றுதான். அப்படியான குடும்பம் தான் சாரதா குடும்பம். கோபம் வரும், கோபம் வரத்தான் வேண்டும். ஆனால் கொஞ்சம் நிதானமாக ஒருதராலும் இருக்க முடியவில்லையே! இருக்க முடியாதுதானே. ஏனென்றால் விஜய் செய்தது அப்படியான விஷயம். இப்படியான ஒரு விஷயம் விஜய் குடும்பத்திற்கு நடந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியிருக்குமல்லவா? சாரதா குடும்பம் கத்திக் குளறியதில என்ன தப்புத்தான் இருக்குது சொல்லுங்களன். கொமன்றில சொல்லுங்களன்.
இது இப்படி இருக்க, அட! விஜய் என்னதான் சொல்லகிறார் என்று மூன்றாம் ஆளான குமரனாவது கொஞ்சம் காது கொடுத்திருக்கலாமல்லவா? அதுவும் இல்லையே! அப்படி என்றால் நியாயம் என்று ஒன்று இங்கு தலைகாட்ட முடியாதா என்ன?
தாத்தாவோ அதெல்லாம் முடிஞ்சிரிச்சு. இப்போ விஜேயும், காவேரியும் சந்தோஷமாக வாழுறாங்களே என்று சொன்னதையும் சாரதா காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அப்படிக் கேட்டிருந்தால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்திருக்குமல்லவா?
காவேரியோ விஜயின் conditionனுக்கு ஒத்துத்தானே விஜயுக்குக் கழுத்தை நீட்டினா. காவேரிக்கோ காசில்லாமல், தங்கை நர்மதா ஆஸ்பத்திரியில் ஆப்பறேஷனுக்கு இருக்கையிலே, குடும்பமே உறைஞ்சு போன நேரம் அது, காவேரிக்கோ காசு தாரன் சாகிறியா என்றால் கூட காவேரி செத்திருப்பாள். அவ்வளவு காவேரிக்கு அவள் குடும்பம் மேலே அன்பு. காவேரிக்கோ அந்தச் சூழ்நிலை கொடுமையாக இருக்கையில், கல்யாணம் பண்ணு, கல்யாணம் பண்ணு என்று வீட்டில் ஏற்பட்ட நிற்பந்தமும், கட்டாயமும் கொல்லக் கொண்டு போவதான சூழ்நிலை விஜயுக்கு. அதற்காக விஜய் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தினதான குற்றச் சாட்டானது ஒருதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கேட்டாங்கதான். கேள்விக்கு மேலே கேள்வி. கேட்டுத்தானே பார்த்தாங்கள். விஜய் அல்லது காவேரி இவர்களில் யாராவது வாயைத் திறந்தாங்களா? இல்லையே. அப்படி என்றால், ஏதோ அதில சொல்ல முடியாத ஒரு உண்மை ஒன்று இருக்கலாம் அல்லவா என்று கூட ஒருதரும் யோசிக்கவில்லையே! அதை யார்தான் கேட்டார்கள்? அதுதான், ஒருதரும் எதையும் கேட்கக் கூடிய நிலையில் இல்லாமல் விஜயைக் கடித்துக் குதறியதில்தானே குறியாக இருந்தார்கள்.
விஜய் வெண்ணிலாவைக் கண்டதும், வெண்ணிலாவைக் குணமாக்க hospitalலுக்குத் திரிஞ்சதும், போனில சிக்னல் இல்லாம காவோரியோட கதைக்காமல் இருந்ததும், கோள் கதைக்கையில யார்தான் போனை எடுக்கினம் என்று சிந்திக்காமல் றாகினிதான் போனை எடுத்ததென்று தெரியாமல் கொஞ்ச நாள் காவேரியோட touch குறைஞ்சு போனதையும் விஜய் கவலையீனமாக விட்டது எங்கு கொண்டுவந்து விட்டிருக்கு பார்த்தீங்களா?
காவேரியும் ஒரு சராசரிப் பெண்தானே!
தாத்தா இப்போ விஜயும், காவேரியும் வாழத் தொடங்கி விட்டார்கள் என்று சொன்னதை என்ன அர்த்தம் என்றாவது சாரதா கேட்டிருந்தால், அல்லது யாராவது ஒருத்தர் என்னதான் சொல்கிறார் என்று காது கொடுத்திருந்தால், தாத்தா என்னத்தை கருத்துப்படச் சொல்கிறார் என்று விளங்கியிருக்கும்.
ஆத்திரப்பட்டால் எல்லாம் இப்படித்தான் போகும், இந்தா காவேரியைக் கூட்டிக் கொண்டு சாரதாவின் குடும்பம் வீட்டிற்குப் போயிற்றினம்.
எவ்வளவு நாள்தான் காவேரியை தங்களோட வைத்திருக்கப் போகின்றார்கள் என்று பார்க்கத்தானே போறோம்.
தாத்தா சொன்னதில் ஏதாவது உண்மை இருந்திருக்குமானால், அதாவது, காவேரிக்குக் கர்ப்பம் தரித்திருக்குமானால், சாரதா குடும்பம் மீண்டும் சண்டைக்குத் தயாராகுமா? அதை நியாயம் கேட்க போர் தொடுப்பார்களா? அல்லது சாரதா நீ வேண்டாம் என்று விஜயைப் பார்த்து மீண்டும் மீண்டும் சொன்னதை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பாவா? குமரன் எங்கு கொண்டுபோய் அவற்ற முகத்தை வைக்கப் போகின்றார்? விஜயை இனி brother என்று கூப்பிடுவதற்கு எந்த முகத்தோட வருவார்?
இப்படிப் பல கேள்விகளுடன் இன்று நிக்குது இந்த சீரியல்...
பார்க்கத்தானே போறோம் இனி என்ன எல்லாம் நடக்கப் போகிறதென்று.
மீண்டும் அடுத்த reviewவில் சந்திப்போம்.
நன்றி!
வணக்கம்