posted 2nd August 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
விஜேய் சாதாரணமாகவே ஜொலியான ஒரு பிறவி. ஆனால், சுற்றத்தில் உள்ளவர்களால் அவன் mood அடிக்கடி குளம்பிக் கொண்டிருக்கின்றது.
வெண்ணிலா ஒரு பக்கம் – காவேரி மறுபக்கம். இதுக்கிடையிலே சாரதா.
றாகினியினதும், பசுபதியினதும் குடைச்சல் தாங்க இயலாமல் அவதியுற்ற விஜேய், இப்போ துணிந்ததால் அவர்களுக்கு வந்ததைப் பார்க்கலாம்.
அதுமட்டுமா, இவற்றை எல்லாம் என்னென்டு விஜய் சமாளிப்பான் என்பதனையும், என்னென்று முகம் கொடுத்து வெளுத்து வாங்குகிறான் என்று பாருங்கள்.
வெண்ணிலாவும், அவளது மாமனாரும் விஜேய் வீட்டிலே இருப்போம், என் மகளுக்கு ஒரு முடிவில்லாமல் அசைய மாட்டோம். இல்லையேல் வீட்டின் முன்னால் இருந்து போராட வேண்டிவரும் என்று ஒரு மிரட்டலை விட்டார் மாமனார். இதென்னடா தலையிடாயாயிருக்கு என்ற ஒரு ஏக்கம் விஜேயின் குடும்பம்.
றாகினி ஒரு பக்கம் நின்று வைன் பண்ணிக்கொண்டிருந்தாள். அது வெண்ணிலாவின் மாமனாருக்கு ஒரு பக்க பலமாக இருந்தது.
விஜயும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் வெண்ணிலாவோ அல்லது அவளின் மாமனாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஏனென்றால் அவ்வளவுக்கு றாகினியாலும், அவளுடைய தகப்பனாராலும் வெண்ணிலாவும் அவளுடைய மாமனாரும் வைன் பண்ணிப்பட்டுள்ளனர்.
மகாநதி - Mahanadhi - 25.04.2025
இப்படி பலவிதமான argument போய் கொண்டிருக்கையிலே, வெண்ணிலாவின் மாமனார் வெண்ணிலாவிற்கே தெரியாத விடயங்களை சொல்லத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் contract கல்யாணம்.
Contract கல்யாணம் முடிவுற்றுப் போய்விட்டது. அந்த மகாராசி விலகிப் போய்விட்டாதானே. இனி உங்களுக்கு என்ன பிரச்சனை, வெண்ணிலாவை கல்யாணம் பண்ண என்று சொல்லத் தொடங்கினார், வெண்ணிலாவில் மாமனார். இதைக் கேட்டதும் shockல் உறைந்தான் விஜய்.
காவேரியோ வெண்ணிலாவின் கதையினைக் கேட்டு அதிர்ந்து போனாள். சாரதாவும் கவலையில் தோய்ந்தாள். ஆனால் விஜய், காவேரிதான் நான் தாலி கட்டிய பொஞ்சாதி என்று அடிச்சுச் சொன்னதை சாரதாவின் குடும்பம் tv யில் பார்க்கவில்லை. கேட்டால்தானே சீரியல் ஒரு முடிவுக்கு வந்து விடுமே!
என்னம்மா, நான் ஸ்ரோல் போடுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தன் சோகத்தினை தாய் சாரதாவிற்கு மறைத்தாள் காவேரி. பெத்தவளுக்குத் தெரியாதா தன் பிள்ளையின் சிறு அசைவின் அர்த்தம் என்னவென்று. காவேரி தன் கவலையினை சொல்லி மற்றவர்களையும் கவலைப்படுத்த மாட்டாள் – அதுதான் காவேரி.
Contract marriage point ஐப் பிடித்தான் விஜய். நாசூக்காகக் கதைத்து வெண்ணிலாவின் மாமனாரை அறையினுள் அழைத்துச் சென்றான். எதையோ ஆடித்தான் கறக்க வேண்டும் என்ற விதிக்கிணங்க ஆட வைத்தான் விஜய். ஆனால், வெண்ணிலாவின் மாமனாரோ விஷயத்தினை விட்டுக் கொடுப்பதாக இல்லை. வேறு வழி இல்லாமல் விஜய் கொஞ்சம் உக்கிரமாக அவருடன் நடக்க நேர்ந்தது. இதனால், பயத்தில நடுங்கிய வெண்ணிலாவின் மாமனார் உண்மைகளை கக்கி விட்டார். பசுபதியின் பெயரையும், றாகினியின் பெயரையும் சொல்லிவிட்டார், வெண்ணிலாவின் மாமனார்.
அடுத்தது என்ன றாகினி வீடுதானே. பசுபதியின் வீட்டுக் கதவை உதைத்துத் திறந்த விஜய் உள்ளே போய் ரீ குடிச்சிற்றா வருவான். நல்ல றீல் ஒன்றை ஒடினான் விஜய்.
இறுதியாக பசுபதியை உதைத்துத் தள்ளி விட்டு புயல்போல வெளியேறினான் விஜய்.
அடுத்தது எங்கே போய் நிற்பான் – றாகியிடம்தான். றாகினியையும் அடக்கத்தானே வேண்டும் இல்லை என்றால் அவளின் ஆட்டம் கூடிக்கொண்டுதான் போகும். இனிக் கிள்ள வேண்டியதைக் கிள்ளி எறியத்தான் வேண்டும் என்ற நிலைக்கு விஜய் வரச் சாத்தியம் உண்டு.
இதெற்கெல்லாம் காரணம் யாரு சொல்லுங்கள் பார்ப்போம்? Description னில் சொல்லுங்கள்.
அடுத்த சீரியல் றிவூவில் சந்திக்கின்றேன்.
நன்றி
வணக்கம்.