posted 27th May 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 25.05.2026
மாமியாரை வெல்ல வைத்தாள் தமிழ். வாழ்த்துக்கள் சிபீயிடமிருந்து குவிந்தன. ஜனாம்மா தமிழின் செய்கையினை நம்பாமல் தமிழிடம் விசாரித்ததற்கு, தமிழ் மழுப்புவது ஜனாம்மா நம்பவில்லை என்று தமிழுக்கும் விளங்கும், தமிழ் பொய் சொல்கின்றாள் என்று ஜனாம்மாவிற்கும் தெரியும்.
இறுதியாக, பூஜையில் வைத்து ஜனாம்மா மீனாவிடம் வீட்டுச் சாவியினையும், வரவு செலவிற்கான புத்தகத்தினையும் கொடுத்தா. மீனாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், அமுதாவிற்கும், கணேஷனுக்கும் மீனாவை விட அளவு கடந்த சந்தோஷத்தில் மிதந்தார்கள்.
கணக்கில் விளங்கமில்லாமல் மீனா தவித்துக் கொண்டிருகையிலே, அமுதா உதவி செய்வது போன்று பணத்தினை கை கொள்வதற்கு ஆயத்தம் கொண்டா. அத்துடன், கணேஷன் தனது தங்கையான மீனாவை பாசத்தினைக் காட்டி பணியவைத்தான். மேலும், கையொப்பம் இடாத வெற்றுக் காசோலையினை வாங்கிக் கொண்டான். எவ்வளவு பணத்தினை கணேஷன் எடுக்கப் போகின்றான் என்று கூட நினைவில்லாமலும், வெற்றுக் காசோலையினைக் கொடுக்கலாமா என்ற விளக்கமில்லாமல் மீனா நடந்து கொள்வதானது மிகவும் ஆபத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு.
ஜனாம்மாவோ தலையிலே இட்டிலிக் கூடையினைச் சுமந்து கொண்டு தெருத்தெருவாக இட்லி விற்றுத்தான் படிப்படியாக இந்த உயர்ந்த நிலைமைக்கு வந்தா என்பது, ஜனாம்மாவிற்கு மட்டும்தான் தெரியும். அதனை தமிழ் மிகவும் உணருவாள். அந்த நிலைமையினை மற்ற ஒருவராலும் உணர முடியாது.
கூட்டுக் குடும்பம் வேணுமா, உழைத்து சேர்த்து வைத்த சொத்து வேண்டுமா என்று கேட்டால், இவற்றில் ஏதாவது ஒன்றினைத்தான் வைத்திருக்கலாமே ஒழிய இரண்டையும் அல்ல. ஜனாம்மாவிற்கோ கூட்டுக் குடும்பமும் வேண்டும், எல்லாரும் தனது சொத்திலே சந்தோஷமாக இருக்க வேண்டும் எனபதுதான் அவவின் ஆசையும் கூட. இதைத்தான் தமிழிடம் சொல்லியும் வைத்துள்ளா. ஆனால், வீட்டுச் சாவியானது தமிழின் கையினை விட்டு மீனாவிடமல்லவா போய் விட்டது.
மீனாவிற்கு கணக்குவளக்கில் ஒருவிதமான முன் அனுபவுமும் இல்லை. அத்துடன் மீனா தனது அண்ணன் கணேஷன் மேலே மிகவும் அன்பு இருக்கின்றது. ஆனால், அமுதாவும், கணேஷனும் இனி இல்லை என்ற அளவிற்கு கூடாதவர்கள் என்று மீனாவிற்கு தெரியாது. ஆனால், இவர்களின் திருகுதாளம் எல்லாம் முழுமையாக ஆதாரத்துடன் அறிந்துள்ளவள் தமிழ்தான். இதனை வீட்டிலுள்ள ஒருவருக்கும் தெரியாது, ஐமிச்சம் கொள்ளவும் இல்லை.
இது ஒருபக்கம் இருக்க, வர்ஷினியின் கல்யாண வேலைகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், சாஸ்திரியையும் அழைத்து பொருத்தங்களைம், அவர்களது எதிர்கால வாழ்க்கையினைப் பற்றி அறிந்து கொள்வதற்காகக் கேட்டால், சாஸ்திரியும் மேலோட்டமாக அவர்களின் பொருத்தத்தின்ப்பற்றி சொன்னதில் தமிழ் நம்பிக்கை கொள்ளவில்லை. அதற்கு உறுதுணையாக சிபீயை அழைத்தால், சிபீயோ சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது தமிழால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால், தமிழ் சிபீயைத் தாண்டி அந்த சாஸ்திரயைச் சந்தித்து பிரபு, வர்ஷினி கல்யாணத்தின் உண்மையான நிலையினை அறிவதில் உன்னிப்பாக இறங்குவாள் என்பது தெளிவாகின்றது.
ஜனாம்மா, பிருபுவின் வீட்டிற்கு கல்யாணம் கேட்டுப் போன போது பிரபுவின் அம்மா மிகவும் துணிவாக மிகப் பெரிய பொய்யினைச் சொல்லி ஜனாம்மாவை ஏமாற்றியதனை ஜனாம்மா கண்டு பிடிக்கவில்லை. அப்போது தமிழும் ஜனாம்மாவுடன் இருக்கையிலே தமிழுக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவில்லை.
ஆனால், அதன் பின்பு, பிரபுவின் அம்மாவும், பிரபுவும் அவர்களது திட்டத்தினைக் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!