Varisu - வாரிசு - 19.05.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;

  • அப்பாவைத் தேடி அலையும் தமிழுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்து விட்டது
  • அடக்கிக் கொண்டிருந்த கந்துவட்டி காரரின் கதை கந்தலாகியது
  • கணேஷனுக்கு ஆப்பு ஆயத்தமாகி விட்டது
  • அமுதாவின் பல்லு பிடிங்கியாச்சு
  • பிரபுவின் அடக்கம் குலதெய்வக் கோவிலில் அடங்கும்

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Varisu - வாரிசு - 19.05.2026

மாமியாரை, தேவையற்ற கதைகளைக் கதைத்து அவவை கண்ணீர் விட வைத்த அமுதாவை அவதானித்துக் கொண்டிருந்த மருமகள் தமிழ், ஒரு முடிவினைக் கட்டினா அமுதாவுக்கு. அமுதாவும் வாய் செத்துப் போய் அடங்கி இருந்தா தமிழின் முன்நிலையில். அதுமட்டுமல்லாமல், என்ன செய்வது என்று, தேவையென்றால் உங்கள் புருஷனைக் கேட்கும்படி தமிழ் கணேஷனைக் கோத்து விட்டாள்.

தமிழ் என்னதான் சொல்கின்றாள் என்று அமுதாவிற்கு விளங்கவில்லை. ஏன் தமிழ் தனது புருஷனை தன் கதைக்குள் சேர்க்கின்றாள் என்று ஒன்றும் விளங்காமல் திகைத்தாள்.

ஆனால், மாமி மீனா, இன்னமும் தமிழுடன் இலேசாக முறுகுவதாகத் தெரிகின்றது. இது மாமியார் கொஞ்சம் தமிழுக்கு கெத்து காட்டுகின்றாவோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், மீனாவோ உடனடியாக மாறக் கூடயவவல்ல என்பதும் கண்கூடு.

தாய் மாமன் பிரகாஷுக்கும், தமிழுக்குமான உறவானது மிகவும் பார்த்து சந்தோஷப்படக் கூடியதாக இருக்கின்றது. எவ்ளவு அன்பு அங்கு நிலவுகின்றது என்பது புலனாகின்றது. தாய் மாமன் என்பது ஒரு புறமிருக்க, பிராகஷுக்கு மறுபிறவியினைக் கொடுத்தவளல்லவா தமிழ். ஆனால், இந்த விஷயம் இன்னமும் ஒருவருக்கும் சொல்லப்படவில்லை. சொல்லவுமில்லை.

பிரகாஷை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழின் அப்பா மேலே சுமத்தப்பட்ட கொலைப் பழியானதை துடைப்பதற்காகத் தமிழ் எல்லா விதத்திலும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றாள். அதற்காக, சிபியின் நண்பனாக இருக்கும் பொலிஸ் அதிகாரியிடமும் சொல்லி வைத்துள்ளா தமிழ். செல்வரத்தினத்தை ஒரு ரீ கடையிலே கண்ட போது உடனே அந்த பொலிஸ் அதிகாரி தமிழிடம் அறிவித்தார்.

மாமா பிரகாஷிற்கு தமிழ் விளங்கப்படுத்தினதை, அதாவது, எவ்வாறு மீனாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று விளாவரையாகக் கூறினதை அவதானித்துக் கொண்டிருந்த சிபீ, தானும் இப்படி தமிழுக்குச் செய்தா என்ன என்ற கற்பனையில் உலாவந்தான்.

மீனாவும், பிரகாஷும் வெளியே உணவுண்பதற்காக செல்வதற்கு தமிழ்தானே காரணம். இது பிரகாஷுக்கும், சிபீக்கும் தெரியும். ஆனால், இது மீனாவிற்குத் தெரியாதே. தெரியவும் கூடாது. ஏனென்றால் ஏற்கனவே மீனாவிற்கு தமிழின் மேலே வெகுவான கோபமும், மனஸ்தாபமும் இருக்கின்றதே! இதனால், எல்லாம் குளம்பிவிடும். அதுமட்டுமல்லாமல், தமிழில் உள்ள கோபமானது அதிகரித்து விடும்.

பிரபாவின் அப்பா யார் என்பதை மறைத்து விட்டார்கள். பிரபாவிற்கும், வர்ஷினிக்குமான கல்யாணத்தில் சிபீக்கோ விருப்பமில்லை. அப்போதே பிரபு உள்ளே நுழைந்தது எனது சந்தேகத்தில் இருந்தது. அது மட்டுமல்லாமல், பிரபு இவ்வளவு நேர்மையாக இருக்கின்றான் என்பதிலும் ஐமிச்சம் இருந்தது. பிரபுவும், வர்ஷினியும் கடற்கரையினிலே ஒருவர் ஒருவருடன் சண்டை பிடிக்கும் போதும், அப்போது சிபீ ஓடி வந்து பிரபுடன் சண்டை பிடிக்கும் போதும் தெரிந்தது பிரபு வர்ஷினிக்குத் தூண்டில் போடுகின்றான் என்று.

இப்படி பொய்க்கு மேல் பொய் கூறி, இவ்வளவு நேர்மையான ஜனாம்மாவை ஏமாற்றுவார்களாக இருந்தால் அந்தத் தெய்வத்திற்கே பொறுக்காது என்றுதான் கூற முடியும். நல்லவர்களாக பிரபுவும், அவனது அம்மாவும் நன்கு நடித்து கல்யாணத்தினை நோக்கி காயை நகர்த்துகின்றார்கள். அதில் ஒரு அங்கமாக ஜனாம்மாவின் குடும்பம் குலதெய்வக் கோவிலுக்குப் போய் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிபீயிடம் ஜனாம்மா பொறுப்புக் கொடுத்திருக்கின்றா.

  • சிலசமயம் குல தெய்வக் கோவிலிலே சாமியாடி அல்லது ஒரு சாமியார் ஏதாவது வழியில் இந்தக் கல்யாணத்தினைப் பற்றி குறை சொல்லுமா? அல்லது,
  • தமிழுக்கு தெய்வம் இறங்கி உண்மையினை எல்லாருக்கும் வெளிப்படையாகச் சொல்லி இந்த கல்யாணத்தினை நிறுத்தி விடுமா?
  • அல்லது பிரபுவின் ஆட்கள் கதைத்ததை சிபீயின் காதில் விளும்படியாக தெய்வம் காட்டுமா?

எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)