posted 30th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- பரிமளத்தின் வரவைத்தான் கணேஷன் பார்த்தான். இனி நடக்கும் கதையினை மறந்தான். மறக்க வேண்டும் என்பது தமிழின் கட்டளை.
- ஜனாம்மாவின் குடும்பத்திலே குத்து விளக்காக இருக்கும் பெண்களை விட ஒரு அசிங்கம் குடம்பம் நடத்துவதனைக் கண்டறிந்து கண்டித்தாள் தமிழ்.
- வியப்பிற்கு மேலே வியப்பினைக் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழுக்கு அடுத்த வாரிசு என்று ஜனாம்மாவின் வாழ்த்து வேற.
- தமிழ்தான் உண்மையான வாரிசும், உரிமையான வாரிசும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 28.05.2026
சின்னப் பிழையையும் தட்டியும் கேக்கணும், தண்டிக்கவும் வேண்டும், அதனை யார் செய்தாலும் என்பது ஜனாம்மாவின் வேதாந்தம். அதுவும் உடனிருந்து கொண்டு உறிஞ்சுபவர்களில் மிக்க கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தப் பிழையானது வெளியிடத்தில் அதுவும் குறிப்பாக பண விஷயத்தில் கை வைக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாதல்லவா என்பதனைத் தமிழுக்கு விளங்கினா ஜனாம்மா.
அதுமட்டுமல்லாமல், மாமியாரை காப்பாற்றுவதற்காக தமிழுக்கு ஜனாம்மாவிடம் பொய் சொல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விட்டது. இதனால், மனமுடைந்தா ஜனாம்மா. இதனை உணராமல் இருந்த தமிழின் மனமும் தனது பிழையினை உணருகையில் கலங்கியது.
தமிழின் உண்மையான குணத்தினை அறிந்தும், கணேஷன் அசட்டையாக தனது விளையாட்டினைக் காட்டுவது என்பது புத்திசாலித்தனமல்ல. தெய்வாதீனமாக, தமிழ், கணேஷன் வைத்திருந்த கவறினைக் கண்டு விட்டாள். அந்தக் கவறினை வைத்துத்தானே தமிழை வெருட்டவும் செய்தான் கணேஷன்.
அப்போது அந்தக் கவரினுள் ஏதோ ஒன்று தனக்கு எதிரானதும், தன் வாழ்க்கைக்கு ஆபத்தானுமானது ஏதோ ஒன்று உள்ளதென்பதனை உணர்ந்தவளாய் துரிதமாக சிந்திக்கலானாள்.
அவளின் ஞாபகத்திற்கு வந்தது, தான் வைத்திருந்த கவறினுள் கொம்பனிக்குரிய கடிதத்தினை. உடனே அதனை மாற்றியும் வைத்தாள். அதன் பின்புதான் தமிழ் அறிந்து கொண்டாள் கணேஷன் வைத்திருந்த அந்தக் கவறினுள் இருப்பது தனது DNA சோதனையின் முடிவாகும் என்று. அதுவும் தனது வாழ்க்கையினை அஸ்தமனமாக்கும் பத்திரம் என்று.
இனி கணேஷனைச் சும்மா விடக்கூடாதென்று முடிவு செய்தவளாய் தமிழ் ஆலந்தூர் பரிமளத்தை வரவழைத்தாள். பரிமளத்திற்கு யார் கோள் பண்ணியது? ஏன் இங்கு வரச் சொன்னார்கள் என்பது ஒன்றுமே தெரியாமல் ஜனாம்மாவின் வீட்டிற்கு வந்தாள் பரிமளம். பரிமளத்தினைக் கண்டதும் கணேஷனின் இரத்தமே உறைந்து போய் விட்டது. அமுதா பரிமளத்துடன் கதைத்துக் கொண்டிருந்தா. உறைந்து விறைத்துப் போனான் கணேஷன்.
இப்படியாக, கணேஷன் போல இரண்டு குதிரைகளின் மேலே ஏறி நின்று கொண்டு பந்தயம் ஓடக் கூடாது. ஓடினால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
குத்துக் கல்லான, குலவிளக்கினை வீட்டினிலே வைத்துக் கொண்டு, இன்னொரு இடத்தில் மெழுகுதிரியினைக் கொழுத்துவதனை ஜனாம்மா வீட்டிலோ அல்லது எந்தப் பெண்ணாலுமோ ஏற்றுக் கொள்ள முடியாது. தனது தலையினைப் பிடிங்கி எறிவதற்கு கணேஷன் கணத்திற்குக் கணம் முயலுகையிலும், தமிழ் கணேஷனுக்கு புத்திமதி கூறி வாழ்க்கையினை நெறிப்படுத்துகின்றாள்.
கணேஷனைப் போல உள்ள ஆண்கள் செய்யும் தவறைப் போல குடும்பத்துப் பெண்கள் செய்தால் இந்த உலகம்தான் தாங்குமா? பெண்கள் வீ்ட்டில் இருக்கின்றார்கள். புருஷன் வேலைக்குப் போகின்றான். பொழுது சாய்ந்ததும் வேலைப் பழுவினால் கழைத்து விழுந்து வீட்டிற்கு வருகின்றான், என்று நினைத்தவளாய், அதுவரைக்கும் வழிமேல் விழி வைத்து வீட்டிலே புருஷன், குடும்பம் என்ற ஒரே எண்ணத்தினை மட்டும் கொண்டிருக்கும் பெண்களைப் பற்றி மனத்திலே நினைக்காமல் இருக்கும் கணேஷன் போன்றோரின் வாழ்க்கையினை தமிழ் அசிங்கம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கின்றது.
இத்தனைக்கும், தமிழ் அமைதியாக இருக்கின்றாள் என்றால், அவளின் பக்கமாக உள்ள தனது குடும்பத்தினைப் பற்றிய உண்மையினால்தான். ஆனால், கணேஷனின் அடாவடித்தனம் அதிகரிக்குமானால், அதாவது, ஆலந்தூரின் சரித்திரத்தினை கணேஷன் தொடர்ந்து எழுதுவானாக இருந்தால், தமிழ் எதையும் சிந்திக்க மாட்டாள். உடனே அவளும், எதையும் சந்திக்கத் தயாராவாள். உண்மையினை வெளிப்படுத்தத் தயங்கவும் மாட்டாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!