posted 30th May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- தனது கவலையினை மறைத்துக் கொண்டு காவேரியின் மனது கசிவதை கண்டுணர்ந்து கொண்ட அம்மு
- தந்தையின் சொல்லினை தட்டாமல் கடைப்பிடிக்கும் அம்மு
- காவேரியின் நினைவுகள் தேவையில்லை, காலத்தினை சேர்ந்து கடக்கத் துணிந்த விஜேயும், அம்முவும்
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 28.05.2026
அப்பாவின் சொல்லைத் தப்பாமல் கேட்டுக் கொண்டு அப்படியே நடப்பேன் என்ற சபதத்துடன் நடையிலே பாடசாலையினுள் நுளைந்தாள். பின்னால் வந்த காவேரி அம்முவைக் கண்டதும், அவள் முகம் சந்தோஷத்தில் வெளித்தது. எல்லாப் பிள்ளைகளும் காவேரையைச் சுற்றி நடந்து கொண்டிருக்கையிலே, அம்முவின் வருகை ஏன் காவேரியின் மனதினில் பட்டாம் பூச்சியாகச் சிறகடித்தது. இது ஏன் என்று இன்னமும் காவேரிக்கு விளங்கவும் இல்லை. விளங்க நினைக்கவுமில்லை.
அம்முவை இடைமறித்த காவேரி கட்டித் தழுவினாள். ஆனால், அம்முவின் பாக்கமிருந்து ஒருவிதமான reaction இருக்கவில்லை. அப்போது கூட காவேரி அந்த வித்தியாசத்தினை அவதானிக்கவில்லை. ஆனால், பாடசாலை மணி அடித்தது. அப்போது அம்மு காவேரியை விட்டு விலகிச் சென்றதனை, அவளது உயிர் தன்னிடம் சொல்லாமலே பிரிகின்றது என்பதனை உணர்ந்தாள்.
தந்தையின் சொல்லை தாரக மந்திரமாக கடைப்பிடித்தாள் அம்மு. அவளுக்கும், விளங்கியதுமல்லாமல், உணர்ந்தாள், தான் காவேரி மிஸ்ஸுடன் கதைக்காமல் தவிர்த்துக் கொள்வதனால், காவேரி மிஸ் கஷ்டப்படுகின்றா என்று.
இதெல்லாம், காவேரியின் அவசரப்புத்தியால்தானே. அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றினையும் உன்னி அவதானிப்பவளாகவும், அலசி ஆராய்பவளாகும் இருக்கும் காவேரிக்கு இந்த அம்முவின் நடவடிக்கைகளானது என்னென்று கொஞ்சமும் அவளின் மூளையிலே தட்டவில்லை. கவலைப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளாகக் கடந்து சென்று கொண்டிருந்தாள். இனி அம்மு பாடசாலைக்கு வருகின்றாள் என்பதனை வைத்து காவேரி மனம் நிம்மதியில் இருக்க வாய்ப்புகளும் உண்டு.
சிறிய பிள்ளையாக அம்மு இருந்தாலும், காவேரியின் கலக்கத்தினை உன்னிப்பாக அவதானித்து, வீட்டினிலே தாத்தாவிற்கும், அப்பாவிற்கும் சொன்னாள். ஆனால், அம்முவால் என்னதான் செய்ய முடியும். தந்தையின் சொல்லினைத் தாண்டிப் போகாத பிள்ளையாக இருக்கின்றாள் என்பது ஒரு பக்கம் விஜேயுக்கு சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் தாத்தா கூறிய பிரகாரம் அம்மு ஒரு சின்னப் பிள்ளை என்பதுவும், அவளை இப்படிக் கட்டுப்படுத்துவது கூடாதென்பதுவும் விஜேயுக்கு விளங்காமலா என்ன.
தான்தான் அம்முவுக்கு காவேரி அம்மாவாக வரவுள்ளாள் என்று விஜேய் சொன்னதினால், அம்முவின் மனமோ காவேரியை தனது அம்மாவாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டாள். ஆனால், இப்போது காவேரி்க்கோ அம்மாவாகப் போவதனை விட, விஜயுக்கு மனைவியாகப் போவதில்தான் சிக்கலே இருக்கின்றது.
இதனை நிவர்த்திக்க வேண்டுமென்றால், காவேரி்க்கு உண்மை தெரிந்தாகணும். அதனை அம்முதான் வெட்டைக்குக் கொணருவாள் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. அதற்கு அம்முவிற்கு விஜேயும், காவேரியும் கல்யாணம் பண்ணிய போட்டோவானது கிடைக்க வேண்டும். ஆனால், அதனைத்தான் விஜேய் பூட்டி வைத்துள்ளானே! ஆனால், காவேரியின் முன்னைய போட்டோவானது விஜேயின் போணில் இருக்கின்றதே. அதனையும் காட்டலாம், ஆனால், இந்த ஆதாரமானது மிகவும் பெலவீனமானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
அம்முவால் மட்டும்தான் இந்த ஆதாரத்தினைக் காட்ட முடியும். தனது உண்மையான அம்மாவைத் தனதாகத் தக்க வைக்க இயலும். காவேரியால் அம்முவிடம் ஒரு வரைவறையினைத் தாண்டி கதைக்க முடியாத நிலைமை. ஏனென்றால், தான் விஜேயைக் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று மிகவும் உறுதியாக இருக்கின்றாள் காவேரி. அப்படியானால், அம்முவின் அன்பு எதற்கு? அவளின் அணைப்புத்தான் எதற்கு என்பது இங்கு முக்கியமாகின்றது.
வாழ்க்கை என்றால் என்ன என்று காணமுன்பு, அவளை நோக்கி வந்துள்ள சவால். எதிர்த்து நிற்க முடியாமல் தவிக்கின்றாள் நர்மதா. இதனை முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமென்றால், இப்போது நெவீனும் இல்லை, ஆனால், கைவசம் இருப்பது விஜேய் ஒருவன்தான். விஜேய்தான் நர்மதாவின் பிரச்சினையினை தீர்க்க முன் வருவான் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், இதற்குள் காவேரி இடைப்படுவாள். இவர் யார் தங்கள் வீட்டின் பிரச்சினைக்குள் வருவதற்கு?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!