posted 22nd May 2026
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- காவேரியின் கவலையானது ஏனென்று காவேரிக்கு விளங்காத நிலையினில், கல்யாண ஒப்பந்தம் வேற.
- அம்முவைக் காணாமல் கசங்கிப் போன காவேரி, காவேரியைக் காணாமல் வீட்டினுள்ளே அடைபட்டுள்ள சிறுமி அம்மு
- பாசத்தின் பலமானது எத்தகையது என்பதனை அம்முவில் இருந்து காணுவதற்காக சந்தர்ப்பம் இது
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 20.05.2026
காவேரியின் எண்ணப்படி, அவவின் விருப்பப்படி கல்யாணம் கேட்டு வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள், கதைத்தார்கள். அனால், காவேரியின் வீட்டார் ஒருவரும் முகம் கொடுத்துக் கதைக்காததினால், மாப்பிள்ளை வீட்டாருக்கு கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், கல்யாண நாளானது அடுத்த முகூர்த்தத்திற்கு ஒழுங்கு படுத்தப்பட்டது.
ஆனால், காவேரியோ ஏன் வீட்டார் அனைவரும் ஒட்டு மொத்தமாக விஜேயின் பக்கம் இருக்கின்றார்கள் என்று புரிய நினைக்கவில்லை. ஆனால், அவளின் பிரச்சினையோ அம்முதான். ஏனோ காவேரிக்கோ தெரியவில்லை அம்மு ஏன் தனது நினைவினில் அதுவும் மிகவும் அடிக்கடி வருகின்றாள் என்பது அவளுக்கே புரியாத புதிராக இருக்கின்றது.
வீட்டில்தான் காவேரிக்கோ நிம்மதி இல்லை என்று பாடசாலைக்குப் போவோம் என்றால் அங்கு அம்முவைக் காணவில்லை. நிம்மதி கிடைக்கும் என்று வந்த இடத்தில் நிம்மதி தொலைந்துள்ளதினை அறிந்து கொண்டாள் காவேரி. நிலைகுலைந்தவளாய் காவேரி அவதியுற்றாள்.
காவேரியின் வீட்டிலோ இடக்கு முடக்கான கதைகள் காவேரியின் கல்யாண விஷயத்தில் இடம்பெற்றன. காவேரியின் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்தவிதமான மதிப்பும் கொடுக்காமல் இருந்தது காவேரிக்கோ கோபத்தினை அதிகரித்தது. சண்டை போட்டாள் அவள் தனது அம்மா சாரதாவிடம். சகோதரங்கள் அனைவரும் சாரதாவுடன்தான் நிற்கின்றார்கள்.ஏன் நின்றார்கள் என்பதனை அறிய நினைக்கவுமில்லை, முயற்சிக்கவுமில்லை.
இவ்வளவு குளப்பங்கள் இந்த கல்யாண விஷயத்தில் ஏன் உருவாக வேண்டும்? இதற்கான உண்மையினை காவேரியின் வீ்ட்டார் என்னென்று காவேரியிடம் கூற முடியும்? அதனால் காவேரிக்கு ஏதாவது விபரீதம் உருவானால், அதிலிருந்து காவேரியால் மீள முடியாவிட்டால், அவளின் வாழ்க்கை மட்டுமல்ல, அனைவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகி விடுமல்லவா என்பதில் மிக்க கவனமாக இருக்கின்றார்கள்.
பாடசாலைக்கு அம்மு இனி வரமாட்டாள் என்ற விஷயம் காவேரிக்குத் தெரியாது. தெரிவதற்கும் வாய்ப்பில்லை. விஜய் அம்முவை வேறொரு பாடசாலையில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றான். இனி அம்மு காவேரியை பார்க்கவே கூடாதென்று முடிவெடுத்து விட்டான் விஜேய். ஆனால், அம்மு என்ன செய்வா என்று யாருக்கும் தெரியாதே!
ஆனால், அம்முவிற்கு ஞாபகம் வரலாம், ஒரு நாள் விஜய், அம்முவின் ரீச்சர் எப்படி இருப்பா என்று கேட்டதற்கு, விஜய் அம்முவிடம் காவேரியின் போட்டோவைக் காட்டினான். அதனை அம்மு பார்த்துவிட்டு இதுதான் தனது ரீச்சர் என்று கூறியது அம்முவிற்கு நினைவு வராமலா இருக்கும். வரும். இதனால், அம்மு அப்பாவின் போனை எடுத்து கலறியில் இருக்கும் காவேரியின் போட்டோவைப் பார்க்க வாய்ப்புகள் உண்டு.
அதுமட்டுமல்லாமல், அப்பா ஏதோ ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு கவலைப் பட்டதனை அம்மு அவதானித்து, அதனை பூயூறோவினுளிருந்து எடுத்துப் பார்ப்பாள். அப்போது அந்த போட்டோவானது தனது அப்பாவினதும், காவேரியினதும் கல்யாணப் போட்டோ என்பது அம்முவிற்குத் தெரிய வந்தது. இதனை அம்மு தாத்தாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள். காவேரியைக் சந்திக்க உடனே அம்மு பாடசாலைக்குப் போகின்றாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!