posted 31st May 2026
Promotional offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- அமுதாவினதும், கணேஷனினதும் இந்த வீட்டின் நிலைமை தெரியாமல் ஆடுவதனை அடிக்கடி கிள்ளிய தமிழ் இன்றும் கூற வேண்டிய கட்டாயத்தில்
- கணேஷன் எப்படியாவது தமிழின் கதையினை முடிக்கத் திட்டத்தின் மேல் திட்டத்தினைப் போட்டுக் கொண்டிருக்கின்றான். ஆனால், அவனின் முயற்சியினை விட தமிழின் நடவடிக்கைகளானது மிகவும் கம்மியாக இருக்கின்றது போல
- சிபியும் தமிழை நெருக்குகின்றான் உண்மையினை ஜனாம்மாவிடம் கூறும்படியாக. சிபீ உண்மையாகச் சொல்கின்றானா? அல்லது தமிழ் எப்படியாவது கலைக்கப்பட வேண்டும் என்ற நினைவுகளின் திட்டமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
கெட்டவர்களின் திட்டங்கள் கெட்டி போல இருந்தாலும் நல்லவர்களின் நினைவுகள் வெற்றிக் கொடி நாட்டும்
தமிழ், கணேஷன் எடுத்த DNA Reportடினை வைத்துக்கொண்டு கலங்கிப் போய் இருக்கையிலே, சிபீயும் தமிழைப் பயமுறுத்தினான். ஆனால், சிபீ உண்மையினைத்தான் தமிழிடம் சொன்னான். ஆனால், தமிழிடமோ தனது தகப்பன் செல்வரத்தினத்தினைக் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்கு ஒருவிதமான ஆதாரமோ, தடையமோ இல்லையே!
தமிழ் தனது அப்பா குற்றமற்றவர் என்று நிரூபித்த பின்புதான், தனது பிறப்பினைப் பற்றி ஜனாம்மாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கையிலே, கணேஷனுக்குக் கிடைத்த தகவலை வைத்து தமிழைக் காட்டிக் கொடுத்து வீட்டை விட்டும், உறவினை விட்டும் துண்டாடிக் கலைத்து விட வேண்டும் என்று திட சங்கர்ப்பம் பூண்டு கொண்டு திரிகின்றானே!
அதுமட்டுமல்லாமல், சிபீயும் தமிழுடன் ஒத்துழைத்து அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதற்குப் பதிலாக, தமிழைத் தனியாகவே அவளது பிரச்சினையினைக் கையாழும்படி கூறி விட்டான். அதன்பின்புதான் தமிழை தன் மனைவியாக ஏற்றுக் கொள்வானாம். இதைத்தான் தமிழும் தன் வாயில் முணுமுணுத்தாள், ஜனாம்மாவிடம் உண்மையினைக் கூறுவதற்கு முனைகையிலே!
தமிழின் மாமியார், மீனா, இப்போதைக்கு தமிழின் பக்கமாகச் சரிவதாகத் தோன்றுகின்றது. ஆனால், மீனாவிற்கு தமிழின் அம்மா அம்முவைப் பிடிக்கவில்லை. காரணம், தனது புருஷன் பிரகாஷைக் கொல்ல முயற்சித்தவர் என்ற பழியினை நம்பிய காரணத்தினால். இப்போது தமிழின் DNA reportடானது கையினை விட்டு பறந்தபோய் மீனா வைத்திருக்கும் கணக்குக் கொப்பியின் மேலே அல்லவா கிடக்கின்றது. இப்போது மீனா அந்த Reportடினைக் கண்டு விட்டால், தமிழின் கதை கந்தல்தான்.
பிரகாஷின் கொலை முயற்சியுடன் யார்தான் தொடர்புடையவர் அல்லது தொடர்பானவர்கள் என்று மற்றவர்களுக்கோ தோன்றவில்லை. அல்லது அசட்டையாக இருக்கின்றார்களோ இவர்கள் எல்லாரும் என்றும் தெரியவில்லை. அது மட்டமல்லாமல், பிரகாஷைக் குணமாக்கிய டாக்டர், அதுவும், தமிழின் நண்பியைத்தன்னும் சந்தித்து, இவ்வளவு காலமாக அதாவது 20வருடங்களாக கோமாவிலே படுத்த படுக்கையாக இருந்த பிரகாஷ் என்னென்று இந்த குறுகிய காலத்திலே கண்முழித்தார் என்று ஒருவரும் ஆராய்வதாகவும் இல்லை!
பிரகாஷ் கண் முழித்து விட்டார். சுகமாக இருக்கின்றார். அதுவே போதும் என்று இவர்கள் இருப்பதற்கான அசட்டைத் தனத்தின் காரணம்தான் என்ன?
ஆனால், எது எப்படித்தான் இருந்தாலும், எவருக்குத்தான் பிரகாஷின் கொலை முயற்சியினைப் பற்றி அக்கறை இல்லை என்றாலும், தமிழுக்குத்தான் முக்கியமான கடமை இருக்கின்றது, தனது தகப்பனின் மேலான பழியினைத் துடைத்தெறிவதற்கு. மற்றவர்களை விட்டு விட்டு தமிழ் முழு முயற்சியில் இறங்கித்தான் ஆக வேண்டும்.
இந்தக் கொலை முயற்சியிலும், மற்றது, தமிழின் கொலை முயற்சியிலும் தொடர்புள்ள குறிஞ்சிநாதன், வெண்பா ஆகியோரின் சரித்திரத்தினை கிளறி எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்தான் முழு மூச்சாக இறங்கியாக வேண்டும்.
தமிழும், கணேஷனுக்கு அடிக்கடி சவால் விடுவதும், வெருட்டுவதுமாக இருக்கின்றாளே ஒழிய உண்மையான கட்டத்திற்கு இறங்கி வேலை செய்வதாகத் தெரியவில்லை. காரணம், தமிழ், அம்முவின் மகள் என்ற அந்த கதைதான் அவளை ஒன்றும் இறங்கிச் செய்யவிடாமல் தடுக்கின்றது.
மீனாவோ ஒருநாள் தனது நண்பிகளைக் கூட்டி வந்து தமிழைப் பழிவாங்குவதற்காக ஒரு கட்டத்தினைக் காட்டினா. அதேபோலத்தான் இப்போது, அமுதா தனது நண்களைக் கூட்டி வந்து தேனுவைப் பழிவாங்குவதற்காக தனது நண்பிகளுக்கு தேனீர் பரிமாறும்படி கூறி, தேனுவை, மீனாவின் மகள், சிபீயின் தங்கையும், தமிழின் மச்சினிச்சியாக இருக்கும் வர்ஷினியின் நண்பியாக அழைக்ககப்பட்டவளை வேலைக் காறி என்று கேவலப்படுத்தினாள்.
இதனைக் கண்டதும் வர்ஷனி கோபம் கொண்டாள். ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீனா, அமுதாவை அடக்கி தேனுவைக் காப்பாற்றுகையில், மீனாவிற்கு ஆதரவாக தமிழ் இறங்கினாள். கணேஷனுக்கும், அமுதாவிற்கும் ஜனாம்மாவின் வீட்டிலே இருப்பதற்கான காரணமாக உள்ளவர் மீனா, தனது மாமியார் என்பதனை அழுத்தம் திருத்தமாக விளங்கப்படுத்தினாள் தமிழ். இதனால், அமுதாவும், கணேஷனும், மீனாவை வெருட்டுவதை விட்டு அடங்கி விலகிப் போனார்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!