Mahanadhi - மகாநதி - 17.06.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;

  • அம்முவின் வார்த்தை அமைதியாக காவேரியின் காதூடாக மனதினுள் சென்றது
  • அதன் விளைவோ விஜேயை ஏற்றுக் கொள்ளும் எண்ணம்
  • கைகூடிவரவுள்ள காதலின் வாழ்க்கை

மகாநதி தமிழ் சீரியலிலே இன்று பார்க்கக் கூடியவையாக, மாற்ற முடியாத உடல், மன நிலைகளை சிசுவால் காதுகளினுள் ஊதப்பட்ட அம்மா என்ற வார்த்தையின் சக்தியினை பார்ப்பதற்கு வாருங்கள்.

எங்கேதான் சென்றாலும், பிரிக்க முடியாத பாசம், அறுத்தெறியப்பட்ட துரோகத்தினால் மீண்டும் இணையப் போகின்றது.

காவேரி இனி வாழப்போகும் வாழ்க்கையினை கண்ணின் முன்னே காட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பகுதியானது பலவிதமான திருப்பங்களுடன் வந்துள்ளது.

Mahanadhi - மகாநதி - 17.06.2026

காதினுள் அம்மா என்று காவேரியின் காதினுள் ஓதியது அவள் மனதினுள் சென்றதோ! பாசம் உயிர்த்தது. மணம் முடிக்க மாறியது காவேரியின் மனம். காவேரியின் இந்த மாற்றம், காலத்தால் அல்ல. பாசத்தின் ஓசையிது. இது விஞ்ஞானம் அல்ல. இயற்கையினால் உருவாக்கப்பட்ட சக்தி அது. அன்று இரவு பிள்ளையினை இழுத்தது, தாயின் அணைப்பானது. இதனால், அவளையும் அறியாமல் காவேரி அம்முவை அணைத்துக் கொண்டாள். ஏன் தனக்குக் கிட்டவாக அம்மு வந்தாள் என்று மனதினுள் வினவியவள் தனது உடல் உஷ்ணத்தினைப் பகிர்ந்து கொண்டாள் காவேரி.

ஒரு சில நாட்களாக விஜேய் காவேரியைக் கண்டும் காணாதது போன்று விலகிச் சென்றான். இதனையும் கண்டு கொண்டாள் காவேரி. விலகிப் போவதனையும், தன்னை உதாசீனம் செய்வதனையும் பொறுக்க முடியாத காவேரி நேரடியாக விஜேயிடம் கேட்டே விட்டாள். இதுதான் காவேரி. இதுதான் அவளின் குணமும் கூட.

விஜேயின் பதில், காவேரியை வியப்பிற்குள்ளாக்கியது. அவளால் தாங்க முடியவில்லை. விஜேய் தன்னை ஏன் ஒதுக்குகின்றார் என்று தனக்குள் கேட்டுக் கொண்டதுமல்லாமல், நெவீனிடமும் அபிப்பராயத்தினையும் கேட்டுக் கொண்டாள். நெவீனின் பதிலும் கொஞ்சம் காரசாரமாகத்தான் இருந்தது. அதனைக் கேட்டதும் காவேரியின் மனமோ வாடியது. யோசிக்கலானாள்.

காவேரியின் மனதினில் என்ன அதிசயம் நடந்தது என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால், நெவீனின் கேள்விக்குரிய பதிலானது நெவீனுக்கே மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவோ ஆனந்தத்தின் அதிர்வலைகளாகத்தான் இருந்தது. இதற்குப் பரிசாகக் கிடைத்ததுதான் சாரதா காவேரியின் வாயினுள்ளே போட்ட சக்கரையாகும். வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால், காவேரியின் பார்வையோ நெவீனை எரிப்பது போன்றிருந்தது.

அம்முவிற்கு தனது அம்மாதான் காவேரி என்று தெரிந்த அன்றே காவேரியுடன் அன்று முதன் முறையாக இரவு தங்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தர்ப்பத்தினை விட்டு விடுவாளா அம்மு? அந்த இரவுதான் காவேரியின் மனதினில் ஏற்படுத்திய மாற்றமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. இது ஒரு அதிசயம் என்றுதான் கூற வேண்டும்.

ஒருவர் மற்றவருடன் அன்பாகவும், ஆதரவாகும் பழகுகையில் அவரவது அன்பின் அருமையானது தெரிவதில்லை. ஆனால், அந்த அருமை பெருமையானது எப்போது ஒருவரின் அந்தப் பழக்கமானது விலகுகையில் அந்த வெறுமையானது மிகவும் வாட்டி வதைத்து விடும். இதுதான், காவேரிக்கும் நடந்தது. ஒரு சில நாட்களாக, விஜேய் காவேரியை ஏறெடுத்தும் பார்க்காமல், ignore பண்ணிக் கொண்டு போனதை காவேரியால் உணர முடிந்தது. அவளில் ஒரு ஏமாற்றத்தின் துடிப்பும் தெரிந்தது.

ஒருநாள், அம்மு, காவேரிதான், தனது அம்மா என்று தெரிந்த முதல்நாள், பாடசாலை முடிந்ததும், ஏதோ விஜேயிடம் கதைப்பதற்காக காவேரி முயற்சிக்கையிலே, அதனைக் கண்டும் காணாமல் விஜய் விலகிச் சென்றது, காவேரி்க்கு மிகவும் வலித்தது. இதனை அம்முவும் அவதானித்தவளாய் அப்பாவிடம் ஏன் இப்படிச் செய்தனீங்கள் என்று கேட்டாள். விஜேயின் பதிலோ அம்முவிற்கு விளங்கியது போன்றும், ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்து அமைதியானாள்.

தானும், ஏமாறாமலும், அம்முவையும் காப்பாற்றுவதற்காகவே விஜேய் எடுத்த முன்னெச்செரிக்கையின் வடிவம்தான் அது. ஆசையினை ஆரம்பத்தில், அதாவது, காவேரியைக் கண்டதும் வளர்த்தவனாய், பின்பு காவேரி விஜேய் வேண்டாம் என்றதால் அவன் எடுத்த முடிவென்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்காக காவேரியோ அல்லது விஜேயோ அப்படி ஒருவரை மனவருத்தப் படுத்தும் அளவிற்குரிய மனம் கொண்டவர்கள் அல்ல.

ஆனால், காவேரியின் இழப்பினாலே விஜேய் பட்ட நரக வேதனை இருக்கின்தே அதனை விட விஜேயுக்கு என்னதான் வேண்டும். கைக்குழந்தையுடன் காவேரியின் இழப்பு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று அனுபவித்தோருக்கு விளங்கும். இது கொடுமையிலும் கொடுமை என்று சாதாரணமாக விபரிக்க முடியாது.

விஜேய் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த காவேரிக்கு ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு இது மட்டும்தான் காரணமாக இருக்க முடியும். அதுதான், அம்மு காவேரியின் காதினில் ஓதிய அம்மா என்ற வார்த்தைகள். அதைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது சாரதாவின் வீட்டாருக்கு காவேரியின் முடிவு தெரிந்து விட்டது. ஆனால், இது எப்போது விஜேயுக்குத் தெரியப் போகின்றது? அல்லது தெரியப்படுத்தப்படப் போகின்றது? இது அம்முவிற்குத் தெரிந்த கணமே அம்மு காவேரியை இனி அம்மா என்று கூப்பிடத் தொடங்கி விடுவாள். இனிப் பாடசாலையானது களைகட்டப் போகின்றது.

ஆனால், அம்முவிடம் பதில் இருக்கின்றது. கேள்வியானது, காவேரி இப்போது கல்யாணத்தினால் வந்த அம்மாதானே என்பதற்கு அம்மு நேரடியாகவே கூறுவாள், காவேரி மிஸ்தான் எனது உண்மையான அம்மா என்று. அப்போது காவேரியின் காதினில் எட்டினால், காவேரிக்கு ஏதாவது அவளின் மனத்திலும், உடலிலும் மாற்றங்கள் ஏற்படுமா? பாதிப்பான மாற்றங்களுக்கு இடமில்லை. ஏனென்றால் மாற்றத்திற்கான காரணமே அம்முவின் அம்மா என்ற வார்த்தைதான்.

ஆனால், காவேரி வாழக்கூடாதென்று நினைப்பவனில் ஒருவன் றாகாவ் இறந்துவிட்டான். ஆனால், அவனின் தங்கையும், அப்பாவும் இருக்கின்றார்களே! காவேரியின் குடும்பத்தினை உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் கழுகுகள் அவை. இவர்களின் ஆட்டம் இனித் தொடங்குமா? அல்லது இவர்களின் குடைச்சல் அடங்கி விட்டதா, றாகாவின் இழப்பினாலே!

எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)