posted 16th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 11.06.2026
காவேரிதான் தனது அம்மா என்று தனது அப்பாவின் பக்கமிருந்தும், சாரதா பாட்டியின் பக்கமிருந்தும் உறதிப்படுத்தப்பட்டாயிற்று. ஆனால், இந்த விஷயத்தினை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று விஜேய் அம்முவிடம் கூறிவிட்டான். அப்படிக் கூறினால், சிலசமயம் காவேரியின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று டாக்டர் கூறினார் என்று விஜேய் அம்முவிடம் கூறினான்.
இதனை அம்மு மிகவும் கடுமையாகவும், அதிர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், மறுநாள், அம்மு பாடசாலைக்குப் போயிருக்கையிலே, அவள், தனது நண்பர்களிடம் தனக்கும் அம்மா இருப்பதாகச் சொன்னாள். அம்மா உயிருடன்தான் இருக்கின்றா என்றும் கூறினாள். ஆனால், அந்த சமயம் காவேரி வகுப்பினை நடத்திக் கொண்டிருகையிலேதான் இந்த சம்பாஷனை இடம் பெற்றது.
சாரதா பாட்டியும், கங்கா பெரியம்மாவும் விஜேயின் வீட்டிற்கு அம்முவைப் பார்வையிடுவதற்காக, வீட்டில் இருந்த காவேரிக்கும் சொல்லாமல் விஜேயின் வீட்டிற்கு வந்து விட்டனர். அம்முவும் இவர்களைக் கண்டதும் இன்று மிகவும் அன்புடனும், உரிமையுடனும் பாட்டியையும், பெரியம்மாவையும் கட்டி அணைத்தாள். நீங்கள்தான் எனது உண்மையான பாட்டி என்பதனை விளக்கமாக சாரதா பாட்டியிடம் சொன்னாள், அம்மு.
அம்முவின் மனம் ஒரு நிலையில் இல்லாததினால், அம்முவைக் கூட்டிக் கொண்டு வெளியில் புறப்பட்டும் விஜேயினால் அம்முவைச் சமாதானப் படுத்த முடியவில்லை. ஆனால், உனது அம்மாவிற்கும் இதேபோலத்தான் சாப்பாடு ஊட்டி விடுவேன் என்று அம்முவிற்குச் சொன்னதினைக் கேட்ட அம்முவிற்கு அவளின் மனம் மாறியது, குளிர்ந்ததுஅ. ஆர்வமாக அப்பா விஜேயிடம் அவர் தனது அம்மா காவேரியுடன் வாழ்ந்த கதைகளைச் சொல்லும் படி கெஞ்சிக் கேட்டதற்கிணங்க விஜேய் ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினான்.
அம்மு, காவேரி அவளது வீட்டிற்கு வந்த சமயம், காவேரியுடன் கதைக்காமல் தானாக விலகிப் போனது காவேரியின் மனதினை ஏதோ செய்யத் தொடங்கிற்று. அதுதான் என்னவென்று கூட காவேரியால் விபரிக்கு முடியவில்லை. அவளால் ஊகிக்க முடியாத ஒருவிதமான மன உழைச்சலாக இருந்ததனை அவளால் உணர முடிகின்றதே ஒழிய, அவளால் விபரிக்க முடியவில்லை.
நித்திரையோ காவேரியை விட்டு வெகு தூரத்திற்குப் போய் விட்டது. அம்முவின் நினைவுகள் காவேரியை வாட்டியது. விஜேயிடம் கதைப்பதற்காக எண்ணுகையில் விஜேய் அன்று இரவு காரணம் இல்லாமல் தன்னைக் கடிந்ததனையும் நினைவு கூர்ந்தவளாய், மீண்டும் அம்மு பாடசாலைக்கு வருவாளா என்று கேட்கத் திராணி இல்லாதவளாய் யாழினியைக் கூட்டிக் கொண்டு தனது பாடசாலைக்குச் சென்று விட்டாள் காவேரி.
அங்கு காவேரி கண்டது கனவா? அல்லது நினைவா என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அம்மு இவ்வளவு சந்தோஷமாக இருப்பதனைக் கண்டதும், காவேரி மிகவும் சந்தோஷப் பட்டாள். மிகவும் சுறுசுறுப்புடன் பாடங்களை நடத்தினாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!