விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணி வெற்றி
விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணி வெற்றி

புதன்கிழமை (28.12.2022) நடைபெற்ற 12 வயதிற்குட்பட்வர்களுக்கான விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணியினருக்கும் மன் பற்றிமா மத்திய மகா வித்தியாலயம் பேசாலை அணியிருக்குமான முதலாவது வருடாந்த காற்பந்தாட்ட போட்டி பேசாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணியினர் வெற்றி பெற்றனர்.

விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணியில் யோண் டிலக்ஸ் சிறந்த வீரராகவும், மன் / பாத்திமா பாடசாலை அணியின் ஜெலக்சன் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இவ்விரு அணிகளின் முதலாவது வருடாந்த காற்பந்தாட்ட போட்டிக்கான நினைவுப் பரிசினை விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணியின் இயக்குனர் வைத்தியர் ம. மதுரநாயகம் அவர்கள் பாடசாலை அதிபர் திரு. பிகிறாடோ அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

துயர் பகிர்வோம்

இந்நிகழ்வில் முன்னாள் பேசாலை பாத்திமா பாடசாலை அதிபர் டலாசால் சபை அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களும், பாடசாலை பிரதி அதிபர்களான அருட்பணி றெயிகுமார், மெரின், மற்றும் சந்தீப் குருஸ் விவா அணியின் முகாமையாளர்கள் திரு. நதன்ராஜ், டலக்சன் மற்றும் பயிற்றுவிப்பாளர் பெனற் மற்றும் பெற்றோர் பழைய மாணவர்கள் பங்குபற்றி போட்டியை சிறப்பித்தனர்.

விடத்தல்தீவு காற்பந்தாட்ட பயிற்சிகூட அணி வெற்றி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More