விசேட பைகள் அறிமுகம்
விசேட பைகள் அறிமுகம்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையினால் விசேட பைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினருடனான விசேட கலந்துரையாடல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளர் சட்டத்தரணி ரொஷான் அக்தர், சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக் உட்பட மேற்பார்வை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை சேகரிப்பதற்காக பச்சை நிறப்பையும், இவை தவிர பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத கழிவுகளை வேறாக சேகரிப்பதற்காக மஞ்சள் நிறப்பையும் என்ற அடிப்படையில் இரு நிறங்களிலான பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு பைகளையும் மாநகர சபையின் பழைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் மொத்தமாக 100 ரூபா பணம் செலுத்தி பொது மக்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.

மீள்பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற இப்பைகளிலேயே உக்கும் கழிவுகளை வேறாகவும், உக்காத கழிவுகளை வேறாகவும் சேகரித்து வைத்து, மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் வருகின்ற வேளைகளில் உரிய கழிவுப்பையை மாத்திரம் ஒப்படைத்து விட்டு, அப்பையை மீளவும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உரிய பைகளில் இட்டு கையளிக்கப்படாத குப்பைகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது எனவும் கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட பைகள் அறிமுகம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More