யாழ் சென்னை சர்வதேச விமான நிலையம் பெயரளவில் மட்டுமே

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வெறுமனே பேச்சளவில் யாழ் சென்னை சர்வதேச விமான நிலையம் என்று பெயரளவில் மட்டும் இருப்பதனால் இச் சேவையை நம்பி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் சிறு உற்பத்தியாளர்களுக்கான நிரந்தர விற்பனை கூடங்கள் அங்கு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் நம்பி கெட்டவர்களாக வருமானம் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் பெயரளவில் இயங்குவதை விடுத்து மாறாக அது பூரணமாக இயங்குவதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சர்வதேச விமான நிலையம் என்ற வெறுமனே தமிழ் நாட்டுக்கும் பலாலிக்குமான போக்குவரத்து பெயரவில் மட்டுமே இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஆகவே இந்த விமான நிலையத்துக்கு ஊடாக வருகின்ற மக்களை நம்பி அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் சிறு உற்பத்தியாளர்களுக்கான நிரந்தர விற்பனை கூடங்கள் அங்கு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.

இது வரவேற்க வேண்டிய விடயமே. காரணம் உள்ளுர் விற்பனையாளர்களுக்கு அதற்கான ஊக்குபவிப்புக்கள் கட்டாயம் அவசியம்.

ஆனால் வெறுமனே யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்குமான விமான சேவை என்ற நிலையின் காரணமாக இந்த உள்ளுர் உற்பத்தியாளர்கள் நம்பி கெட்டவர்களாக வருமானம் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

ஆகவே இவர்களின் வருமானத்தை ஊக்குவிப்பதற்கும் அதிகமாக இந்த பிரதேசங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு பிரயாணிகள் செல்லுவதை ஊக்குவிக்க ஏனைய நாடுகளுக்கான போக்குவரத்தையும் விஸ்தரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல பலாலி விமான நிலையத்தில் உள்கட்டுமான விடயங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையே காணப்படுகின்றது.

இதனையும் பூரணமாக பூர்த்தி செய்வதன் ஊடாகவே ஏனைய நாடுகளிலிருந்து பயணிகள் வரும்பட்சத்தில் அவர்கள் ஆரோக்கியமாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

ஆகவே இவ்வாறான நிலையை அரசு எற்படுத்த வேண்டும். வெறுமனே பேச்சளவில் யாழ் சென்னை சர்வதேச விமான நிலையம் என்று இருக்காது ஏனைய நாடுகளுக்கூடான தொடர்பாடுகளை விஸ்தரிக்கக்கூடிய வகையில் விரைவாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டியுள்ளார்.

யாழ் சென்னை சர்வதேச விமான நிலையம் பெயரளவில் மட்டுமே

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More