மோட்டார் சைக்கிள் பேருந்து விபத்தில் இருவர் படுகாயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சாவகச்சேரி பகுதியில் திங்கட்கிழமை தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் பேருந்து விபத்தில் இருவர் படுகாயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY