முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் காலமானர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் காலமானர்

அன்னாரின் இழப்பினால் தாங்கொணாத் துயரில் வாடும் அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் காலமானர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தங்கத்துரை காலமானர்.

இலங்கைத் தமிழ்ரசுக் கட்சியின் முன்னாள் உப தலைவரான இவர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த க. பத்மநாதன் காலமான பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்து பாராளுமன்றம் சென்றவராவார்.

மருத்துவரான இவர் போர்ச் சூழல் நிலவிய காலத்தில் பிரஜைகள் குழுவில் இணைந்து பணியாற்றியதுடன், கல்முனைப் பிரதேசத்திலுள்ள பல்வேறு சமூக நல அமைப்புக்களில் இணைந்து சமூக நலப் பணியிலும் ஈடுபட்டவர். துறை நீலாவணைக் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பாண்டிருப்பில் வசித்து வந்த நிலையில் சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நல்லம் புதன்கிழமை பாண்டிருப்பில் இடம்பெற்றது.
அன்னாரின் மறைவு குறித்து அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினருமான தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம். சிறீதரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியதற்கு அப்பால், அம்பாறை மாவட்ட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சமூக சேவையாளராகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டவர் டாக்டர் வில்லியம் தோமஸ் தங்கத்துரை.

அரசியலில் அனுபவ முதிர்ச்சி பெற்ற இவர், அம்பாறை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக மிகக் குறுகிய காலம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தாலும், அப் பதவிக் காலத்துக்கு முன்னரும் பின்னரும் மக்கள் நலன் சார்ந்தும், தமிழ்த் தேசியம் சார்ந்தும் நிறைவான பணிகளை ஆற்றியிருக்கிறார்.

இதுதவிர, தனிமனித விருப்பங்களின் அடிப்படையில் என்னை நேசித்து, எனது தனிப்பட்ட நலன் விரும்பியாகவும் அவர் தனக்கான தனியிடத்தை என்னகத்தே தக்க வைத்திருக்கிறார். தனது சீரிய சிந்தனை, நேர்த்தியான செயல்நோக்கு என்பவற்றின் அடிப்படையில் சமூக மதிப்பு மிக்க மனிதனாகவும், தன்னலம் கருதாத மக்கள் சேவகனாகவும் வாழ்ந்து மறைந்த மதிப்பார்ந்த தோமஸ் ஐயா அவர்களின் ஆன்ம இளைப்பாற்றுகைக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, அவரது இழப்பின் துயர் சுமந்திருக்கும் உறவுகளுக்கு எனது அனுதாபங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் காலமானர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More