போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் B Division கழகங்களுக்கிடைலான போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் B Division கழகங்களுக்கிடையில் லீக் அடிப்படையிலான போட்டிகளின் ஆரம்ப போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபையின் கெளரவ உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப போட்டி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மருதமுனை மருதம் அணிக்கும் மருதமுனை க்ரீன் மெக்ஸ் அணிக்குமிடையிலான முதலாவது போட்டி பிரதம அதிதியினால் கைலாகு செய்யப்பட்டு நினைவுப் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் மருதமுனை மருதம் அணி 7:0 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் ஏற்பாடு செய்வதானால் போதை பாவனைகளற்ற, ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை விளையாட்டுத் துறையினூடாக உருவாக்க முடியுமென தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House