பாணின் விலையில் வீழ்ச்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

பாணின் விலையில் வீழ்ச்சி

யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என யாழ். மாவட்டக் கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளி (10) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் காலத்தில் மேலும் பாணின் விலை யாழ். மாவட்டத்தில் குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. சடுதியாக இலங்கையில் ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருகின்ற ஒரு சந்தோசமான விடயம். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அது நடந்து கொண்டிருக்கின்றது.

200 ரூபா பாண் விற்கும் போது விலையை தொடர்ச்சியாக பேணுவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு 200 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை பேணியிருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பாண் ஏனைய மாவட்டங்களில் உற்பத்தி செய்யும் பாணை விட மிகவும் தரமானதும் சிறந்த பாணாகும்.

பாணின் விலையைத் தற்போது 10 ரூபாய் குறைப்பதாக கொழும்பில் அறிவித்துள்ளனர். அதேபோல நாங்களும் அதனைக் குறைப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

பாண் உற்பத்தியில் கொழும்பு மாவட்டத்துடன் எமது யாழ். மாவட்டத்தை ஒப்பிட முடியாது. தற்போது 170 ரூபாவுக்குத்தான் பாண் விற்கவுள்ளோம். ஆனாலும் எதிர்வரும் காலங்களில் இதனைவிட மிகக் குறைவான விலைக்கு பாணைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

பாணின் விலையில் வீழ்ச்சி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)