பா.ஜ.க. கட்சியின் தலைவர் யாழ் விஜயம்
பா.ஜ.க. கட்சியின் தலைவர் யாழ் விஜயம்

இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை

முன்னைய செய்தி

யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு முற்பகல் 11 மணிக்கு தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராதமையால் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிந்திய செய்தி

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்துக்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியப்பாடு உள்ளது.

அதேபோல, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை, தமிழ் மக்களை, தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம். தென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்படவேண்டிய விடயம்தான். ஆனால், சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கைக் கடற்பரப்புக்குள் வருவதில்லை. ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுப்போம் என்றார்.

தனியார் விடுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப. சத்தியலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. கட்சியின் தலைவர் யாழ் விஜயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More