பன்முக ஆளுமை மறைந்தார்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பன்முக ஆளுமை மறைந்தார்

தமிழ் இலக்கியப் பரப்பில் பன்முக ஆளுமையாக திகழ்ந்த நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் காலமானார்.

நாடறிந்த எழுத்தாளரான இவர் நாட்டாரியல் இலக்கியத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன், நாடகம், உருவகக் கதை, கவிதைகள், சிறுகதைகள் உட்பட பல்வேறு இலக்கிய பரிமாணங்களைப் படைத்தவராவார். நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் போசகரான இவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காலமானார்.

கிராமியப் பேச்சு வழக்கில் ஒரு புதிய எழுத்தாற்றலை வெளிப்படுத்திய இவர் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள இலக்கிய கர்த்தாக்களுடன் மிக நெருக்கமாக உறவுகளை பேணி வந்தவர். கவிக்கோ அப்துர் றஹ்மான் மற்றும் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் போன்றோருடன் இணைந்து பல உலக இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டவருமாவார்.

தனது இலக்கிய மற்றும் கலைப் படைப்புக்களால் நிந்தவூர் கிராமத்திற்கு பெரும் புகழையும், அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்த இவர் உருவகக் கதைகள், 200 இற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் மற்றும் ஏறாளமான நாட்டார் பாடல்களின் தொகுப்புக்களை வெளியிட்டதுடன் பல ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

இவர் தனது படைப்புகளுக்காக சாஹித்திய மண்டல பரிசுகளை பெற்றதுடன், நாட்டின் பல்வேறு உயர் விருதுகளைம் பெற்றுள்ள இவர், இந்தியாவிலும் பல்வேறு இலக்கிய விருதுகளை பெற்றுள்ளதுடன், இவரது இலக்கிய பணிகள் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நிந்தவூரில் பெருந்திரளான பொது மக்கள், இலக்கிய வாதிகள், சமூக ஆர்வலர்கள் திரண்ட நிலையில் இடம்பெற்றது.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

பன்முக ஆளுமை மறைந்தார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More