நிஸ்ரின் இல்லம்  சம்பியனானது

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை (2023) இல்ல விளையாட்டு போட்டியில் நிஸ்ரின் இல்லம் சம்பியனானது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் கல்லூரி மைதானத்தில் அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி. ஜெயந்த ரத்னாயக்க,கெளரவ அதிதியாக கல்முனைபிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், கல்முனை

The Best Online Tutoring

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். ரம்சின் பக்கீர் மற்றும் அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சபினா இம்தியாஸ், கல்முனை பொலிஸ் நிலைய பலவித குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எல். ரபீக், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், அணிநடை, மைதான கண்காட்சி, வினோத உடை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவிகளுக்குசான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள் என்பன கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இல்லங்களின் வெற்றி முறையே நிஸ்ரின் (சிவப்பு நிறம்) 109 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், சபரான் (மஞ்சள் நிறம்) 106 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், வர்தா (பச்சை நிறம்) 104 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும், ஜெஸ்மின் (நீலம் நிறம்) 91 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள், கல்முனை வலயக் கல்வி அதிகாரிகள், கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான மத்திய குழுஉறுப்பினர்கள், பழையமாணவிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிஸ்ரின் இல்லம்  சம்பியனானது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More