தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

யாழ்ப்பாணம் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி. சாமியால், யாழ்.மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (05) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்புப் வாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ்.வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ்.மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, குறித்த தீயணைப்பு வாகனம், தீயணைப்புபடை வீரர்களால் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், யாழ்.மாவட்ட செயலர் எஸ். மகேசன், யாழ்.மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More