சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது சுட அனுமதி

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன்,

அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள்.

அந்த வகையில் பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனுமதி சட்டவிரோத உத்தரவு என்றார்.

இந்த நிலையில் ஜனாதிபதியால் பாதுகாப்பு பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக மூவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது சுட அனுமதி

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY