சுற்றிலாத்துறையைத் தூக்கி நிறுத்துவேன்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுற்றிலாத்துறையைத் தூக்கி நிறுத்துவேன்

சுற்றிலாத்துறையைத் தூக்கி நிறுத்துவேன்

மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாக உள்ளது என்று வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

வடமேல் மாகாண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமேல் மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அதனை மேம்படுத்தவும் வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் சுற்றுலா துறையை மேம்படுத்த தாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும். நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்த போது அதனை தூக்கி நிறுத்திய ஒரே ஒரு தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.

மாகாண சபைத் தேர்தலை நடத்தவிடாமல் அதனை பிற்போடுவதற்கு (2017.10.20) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து வாக்களித்து பெரும்பான்மையை ஏற்படுத்தி தடுத்தன. அன்று மாகாண சபைத் தேர்தலை பிற்போடாமல் இருந்திருந்தால் நான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிழக்கின் அபிவிருத்திக்காக முதலீட்டாளர்கள் கொண்டு வந்த 5 பில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார்.

சுற்றிலாத்துறையைத் தூக்கி நிறுத்துவேன்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)