சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக ஆரம்பமானது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் இரானுவ அதிகாரியும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன்போது போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள், சிறுவர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தம்சங்கள் கொண்ட பதாகைகள் இதன்போது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)