சர்வதேச கைத்தொழில் கண்காட்சி

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் “Industry Green Awards” விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, “சர்வதேச தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி இலங்கையில் உள்ள 25 தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1300 க்கும் மேற்பட்ட விற்பனை கூடங்களை உள்ளடக்கியது. புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய கைத்தொழில்களின் பல அம்சங்களையும் இக்கண்காட்சியில் காணமுடியும். புத்தாக்கத்துக்கான தனி வளாகமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டுத் தூதரகங்கள், வர்த்தகத் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் ஏராளமான வெளிநாட்டு கொள்வனவாளர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கண்காட்சிக்கு இணையாக இந்நாட்டில் வாகன உதிரிப் பாகங்களை ஒன்றிணைக்கும் 25 இற்கும் அதிகமான நிறுவனங்களின் பங்களிப்புடன் தேசிய வாகனப் பேரணி (National Vehicle Parade) ஜூன் 18 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பமாகி BMICH வளாகம் வரை செல்லவுள்ளது.

மேலும், இந்தக் கண்காட்சியுடன் இணைந்த வகையில், ஜூன் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதல் சர்வதேச மாநாடாக (Green Industry Initiative for Sustainable Industrial Development) நிலைபேறான பசுமைக் கைத்தொழில்களுக்கான ‘தொழில்நுட்ப பசுமை விருது வழங்கும் விழா, பண்டாரநாயக்க சர்தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) யினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை கைத்தொழில் முனைவோர் வட்டங்கள் IDB Digital One Stop, Ceylon Plaza, கைத் தொழில் கடன் திட்டங்கள், SEDA Startup, SEDA Scaleup SEDA ஸ்டார்ட் அப், SEDA Scaleup உட்பட பல நிகழ்ச்சிகள் கண்காட்சி நடைபெறும் 05 நாட்கள் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், இக்கண்காட்சிக்கு அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவதுடன் அவை கண்காட்சியில் பங்குபற்றுகின்றன. உலகில் உள்ள புதிய கைத்தொழில் வாய்ப்புகள், புதிய முதலீட்டாளர்கள், மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி அறிந்து , உற்பத்தித் தொழில்களைத் தொடங்கவும் இது உதவும்” என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More