கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை போராட்டத்தில் குதித்தனர்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதிவரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு மற்றும், சுகாதாரப் பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை என்பது தொடர்பான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் என இன மதம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர், இன்று மருந்து மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இருப்பதைக்கொண்டு மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றோம்.

சிக்கனமாக பயன்படுத்துகின்றோம். இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை போராட்டத்தில் குதித்தனர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More