கறுப்பு  ஜூலை 39  ஆண்டு நினைவு தினம்

கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்ட தமிழர்களின் 39 ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை வடமராட்சி தமிழரசுக்கட்சித் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

அல்வாய் கிழக்கு இலகடியில் உள்ள அலுவலகத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச. சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியவர்கள் எழுந்து நின்று மெழுகுதிரி கொளுத்தி அவற்றை ஏந்துதீபம் ஏற்றி கைகளில் ஏந்தி நின்றார்கள்.

அதனைத் தொடர்ந்து சமகால அரசியல் நிலை தொடர்பாக சுமந்திரன் எம் பி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம்23ஆம் திகதி திருநெல்வேலியில்13 இராணூவத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து தென்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆரம்பமாகி நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு  ஜூலை 39  ஆண்டு நினைவு தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More