எரிபொருளுக்காக கீயூவில் காக்கும் மக்களின்  தொடரும் அவலம்

நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், நாட்டின் பலபாகங்களிலும் எரிபொருளைப் பெற்றக் கொள்வதற்குத் தினமும் நீண்ட கியூவரிசைகளில் மக்கள் திரண்ட வண்ணமுமுள்ளனர்.

கடந்த தினங்களாக கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கென மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட கியூ வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பத்தை அவதானிக்க முடிகின்றது.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மண்ணெண்ணை இல்லை என்ற அறிவித்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டு, நிலையங்களும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன.

எனினும் சில எரிபொருள் நிலையங்களுக்கு இடையிடையே எரிபொருட்கள் கிடைப்பதை அறிந்த உடனேயே மக்கள் திரளத் தொடங்கிவிடுகின்றனர்.

இவ்வாறு எரிபொருளைப் பெற்றுக்கொண்ட நிரப்பு நிலையங்கள் முன்பாக இறைக்கும் கொடும் வெய்யிலிலும், நீண்ட கியூவரிசைகளில் காத்து நின்று பெற வேண்டிய அவலமும் நீடித்து வருகின்றது.

சில சமயம் மின்தடை காரணமாக எரிபொருளை நிரப்பிக் கொள்வதில் தடையேற்படினும் மீண்டும் மின்சாரம் கிடைக்கும் வரையும் பல மணி நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தவம் கிடக்கும் நிலைமையும் ஏற்படுகின்றது.

இத்தகைய எரிபொருளுக்கான கிராக்கி நிலையிலும், விநியோகிக்கப்படும் எரிபொருட்களில் கலப்பட விவகாரம் சில இடங்களில் பேசுப் பொருளாக பரவுகின்ற போதிலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது கிடைப்பதைப் பெற்றுக்கொள்வதிலேயே மக்களின் ஆர்வம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More